மாற்றுப்பணி ஆசிரியர்களை பள்ளி கடைசி வேலை நாளுக்கு முதல் நாள் விடுவிக்க பள்ளி கல்வி இயக்குநர் உத்தரவு!
அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் மாற்றுப்பணி ஆசிரியர்களை பள்ளி கடைசி வேலை நாளுக்கு முதல் நாள் விடுவிக்க பள்ளி கல்வி இணை இயக்குநர் உத்தரவு!
தமிழ்நாடு பள்ளிக் கல்வி சார்நிலைப் பணி அரசு /நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு 2024-25ம் கல்வியாண்டிற்கு மாற்றுப்பணி ஆணை வழங்கியது - பணியிலிருந்து விடுவிக்க கோருதல் சார்பு.
பார்வை: 1) சம்மந்தப்பட்ட ஆசிரியர்களின் விண்ணப்பங்கள்
2) சார்ந்த இணை இயக்குநர்களால் வழங்கப்பட்ட
மாற்றுப்பணி ஆணைகள்
பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு / நகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஒரு சில பட்டதாரி ஆசிரியர்களுக்கு கடந்த ஆண்டில் (2024-25) பல்வேறு காரணங்களின் அடிப்படையில் மாற்றுப்பணி மூலம் பணிபுரிய ஆணை வழங்க கோரி பார்வை-1ல் காணும் கடிதங்கள் வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டது.
இதனடிப்படையில் மேற்படி ஆசிரியர்களுக்கு (மாற்றுப்பணி கோரியவர்களுக்கு) திருவாக காரணங்களின் அடிப்படையிலும், மாணவர்களின் கல்வி நலன் கருதியும் ஒரு சில மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு 2024-25ம் கல்வியாண்டு வரை மட்டும் மாற்றுப்பணி மூலம் பணிபுரிய ஆணை வழங்கப்பட்டது.
தற்போது இக்கல்வியாண்டு வரை மாற்றுப்பணி மூலம் பணிபுரிய ஆணை வழங்கப்பட்டுள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் இதர ஆசிரியர்களை பள்ளி இறுதி நாள் முடிவதற்கு முந்தைய நாளில் பணியிலிருந்து விடுவித்து udraft இறுதி வேலை நாளில் அவரவர்களின் பள்ளியில் பணியில் சேர சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்திட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
Friday, April 25, 2025
New
மாற்றுப்பணி ஆசிரியர்களை பள்ளி கடைசி வேலை நாளுக்கு முதல் நாள் விடுவிக்க பள்ளி கல்வி இயக்குநர் உத்தரவு!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.