விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளில் பாரபட்சம் காட்டுவதா? - ஆசிரியர்கள் வேதனை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, April 22, 2025

விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளில் பாரபட்சம் காட்டுவதா? - ஆசிரியர்கள் வேதனை



விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளில் பாரபட்சம் காட்டுவதா? - ஆசிரியர்கள் வேதனை

பிளஸ்-2, பிளஸ்-1 மாணவ-மாணவிகளின் விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

பிளஸ்-2, பிளஸ்-1 பொதுத்தேர்வு நிறைவுபெற்ற நிலையில், தற்போது எஸ்.எஸ்.எல்.சி. வகுப்புக்கான பொதுத்தேர்வு நடந்து வருகிறது. பொதுத்தேர்வு முடிவடைந்த பிளஸ்-2 மற்றும் பிளஸ்-1 வகுப்பு மாணவ-மாணவிகளின் விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிந்ததும் அதற்கான பணிகள் தொடங்கப்படும். இந்த நிலையில் விடைத்தாள் திருத்தும் மதிப்பீட்டு பணிகளில் பாரபட்சம் காட்டப்படுவதாக ஆசிரியர்கள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். அதாவது, ஒரு நாளைக்கு 24 பிளஸ்-2 விடைத்தாள்கள் திருத்த அறிவுறுத்தப்பட்ட அதே நேரத்தில், எஸ்.எஸ்.எல்.சி.யை பொறுத்தவரையில் 30 விடைத்தாள்களை திருத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.

இது ஒருபுறம் இருக்க, பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி. விடைத்தாள்களை திருத்தக்கூடிய ஆசிரியர்களுக்கான ஊதியத்திலும் பாரபட்சம் காட்டப்படுவதாக அவர்கள் வேதனையோடு தெரிவித்துள்ளனர். எனவே ஆசிரியர்களுக்கு விடைத்தாள்கள் மதிப்பீட்டு பணிகளிலும், அதற்கான ஊதியம் வழங்குவதிலும் பாரபட்சம் காட்டாமல், அனைவருக்கும் சமமான வகைகளில் பணிகள் வழங்கப்பட வேண்டும் என தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட் அரசை வலியுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.