Revised full year exam schedule for classes 1-5 - DEE processes! - 1-5 வகுப்புகளுக்கான திருத்தியமைக்கப்பட்ட முழு ஆண்டுத் தேர்வு அட்டவணை - DEE செயல்முறைகள்!
தொடக்கக் கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 09.04.2025 முதல் 21.04.2025 வரை மூன்றாம் பருவத் தேர்வு / ஆண்டு இறுதி தேர்வு நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது .
தமிழ் நாட்டில் வெயிலின் தாக்கம் தற்போது தீவிரமாக இருப்பதால் பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகள் மற்றும் பெற்றோர்களின் வேண்டுகோளை ஏற்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படியும் மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களின் வழிகாட்தல்களின்படிவும் தேர்வுகள் முன்கூட்டியே தொடங்க திட்டமிடப்பட்டு உள்ளது. எனவே , கீழ்கண்ட அட்டவணையில் தெரிவித்துள்ளவாறு வருகின்ற 07.04.2025 முதல் 17.04.2025 வரை தேர்வுகள் நடைபெறும் என அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களின் மூலம் வட்டாரக் கல்வி அலுவலருக்கும் மற்றும் தலைமை ஆசிரியருக்கும் அறிவுத்தப்படுகிறது .
CLICK HERE TO DOWNLOAD Revised -Annual Exam April 2025- I to V PDF
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.