பாலிடெக்னிக் படித்த மாணவர்கள் அரியர் பாடம் தேர்வெழுத சிறப்பு வாய்ப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, March 16, 2025

பாலிடெக்னிக் படித்த மாணவர்கள் அரியர் பாடம் தேர்வெழுத சிறப்பு வாய்ப்பு

பாலிடெக்னிக் படித்த மாணவர்கள் அரியர் பாடம் தேர்வெழுத சிறப்பு வாய்ப்பு - Special opportunity for polytechnic students to write Aryan subject exams

பாலிடெக்னிக் படித்த மாணவர்கள் அரியர் பாடங்களில் தேர்வெழுத சிறப்பு வாய்ப்பு அளிக்கப்படுவதாக உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து குடும்பச் சூழ்நிலைகளால் தேர்ச்சி பெறாமல் நிலுவை வைத்துள்ள பாடங்களுக்கு (அரியர்ஸ்) தேர்வெழுத சிறப்பு வாய்ப்பு அளிக்குமாறு மாணவர்களிடமிருந்து அரசுக்கு கோரிக்கைகள் வரப்பெற்றன. முதல்வர் அவற்றை கனிவுடன் பரிசீலித்து உத்தரவிட்டதன் பேரில் அரியர் மாணவர்கள் தேர்வெழுத சிறப்பு வாய்ப்பு அளிக்கப்படுகிறது. பாலிடெக்னிக் இறுதி ஆண்டு முடித்தும் பல்வேறு காரணங்களினால் சில பாடங்களில் தேர்ச்சி அடையாமல், தங்கள் வாழ்வின் அடுத்த நிலைக்கு செல்ல இயலாத சூழ்நிலையை கருத்தில் கொண்டு வரும் ஏப்ரல் மற்றும் அக்டோபர் பருவத் தேர்வுகளின்போது அரியர் பாடங்களை எழுத சிறப்பு வாய்ப்பு வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான விவரங்களை மாணவர்கள் www.dte.tn.gov.in என்ற இணைய தளத்தில் அறிந்து கொள்ளலாம். இந்த சிறப்பு வாய்ப்பை மாணவர்கள் பயன்படுத்தி தங்கள் எதிர்காலத்தை வளமாக்கிக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.