அரசுக்கு எதிரான மனநிலையுடன் ஆசிரியர்கள் , அரசு ஊழியர்கள்...-
Teachers and government employees with anti-government sentiment...
ஆசிரியர்கள் , அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் 2026 தேர்தல் முடிவு திமுகவுக்கு அதிர்ச்சியாக அமையும் ஐபெட்டோ செயலாளர் அண்ணாமலை அறிக்கை..
ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின்
கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் 2026 தேர்தல் முடிவு திமுகவுக்கு அதிர்ச்சியாக அமையும்
| ஐபெட்டோ செயலாளர் அண்ணாமலை அறிக்கை
ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் ஆகியோருக்கு எதுவும் செய்ய வில்லையெனில், 2026 சட்டப் பேரவைத் தேர்தல் முடிவு திமுக வுக்கு அதிர்ச்சி தரக்கூடியதாக இருக்கும் என ஐபெட்டோ அகில இந்திய செயலாளர் வா.அண்ணாமலை கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:
கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மார்ச் 23-ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடவுள்ளது.
தமிழகத்தில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், ஓய்வூதிய தாரர்கள், ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றுவோர், போக்குவரத் துக் கழக தொழிலாளர்கள், தொழிற்சங்கத்தினர் என அனைத்
துத் தரப்பினரும், தாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் எந்தக் கோரிக்கைகளும் நிறை வேற்றப்படாததால், திமுக அரசின் மீது வெறுப்புணர்வில் உள்ளனர். குறிப்பாக, திமுக அரசு துரோகம் செய்துவிட்டது என குற்றம்சாட்டி வருகின் றனர்.
ஆசிரியர்கள், அரசு ஊழியர் களை பலவீனமானவர்களாக கருதியதாலேயே, 2026, ஏப்ரல் முதல் ஈட்டிய விடுப்பை சரண் செய்து கொள்ளலாம் என்று பட் ஜெட்டில் அரசு அறிவித்துள்ளது.
இதன் காரணமாக ஆசிரி யர்கள், அரசு ஊழியர்கள் என அனைத்துத் தரப்பினரும், சட்டப்பேரவைத் டப்பேரவைத் தேர்தல் அறி விப்பு நாள் எப்போது வரும் என எதிர்பார்த்துக் கொண்டிருக் கிறார்கள்.
இதை அரசு உணர்ந்து,
ஏப்.30-ம் தேதி வரை சட்டப் பேரவை கூட்டத் தொடர் நடை பெறவுள்ள நிலையில், பழைய ஓய்வூதியத் தியத் திட்டத்துக்கு அமைக்கப்பட்ட குழுவை தமிழக முதல்வர் உடனடியாக ரத்து செய்துவிட்டு, 110 விதியின் கீழ் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவதாக அறிவிக்க வேண்டும். ஈட்டிய விடுப்பு சரண் செய்யும் முறையை இப்போதிருந்தே அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடுகளை களைந்து, மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும்.
ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் ஊழியர்கள் ஆகியோருக்கு எதுவும் செய்யவில்லை எனில், 2026 சட்டப்பேரவைத் தேர்தல் முடிவு திமுகவுக்கு அதிர்ச்சி அளிக்கக்கூடியதாக இருக்கும்.
Wednesday, March 19, 2025
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.