25 ஆசிரியர்கள் பணி நீக்கம் - பள்ளிக் கல்வித் துறை அதிரடி நடவடிக்கை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, March 11, 2025

25 ஆசிரியர்கள் பணி நீக்கம் - பள்ளிக் கல்வித் துறை அதிரடி நடவடிக்கை



Sexual harassment complaint - 25 teachers dismissed பாலியல் புகார் - 25 ஆசிரியர்கள் டிஸ்மிஸ்

திண்டுக்கல், திருச்சி, நீலகிரி, புதுகை, விழுப்புரம், தர்மபுரி, நெல்லை மாவட்டங்களில் தலா ஒரு ஆசிரியர் என 7 பேர்; தொடக்கக் கல்வித்துறையில் 15 ஆசிரியர்கள் என மொத்தம் 25 பேர் டிஸ்மிஸ்

பணி நீக்கம் செய்யப்பட்டவர்களின் சான்றிதழ்களை ரத்து செய்யும் பணியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள்

கடந்த 3 ஆண்டுகளில் 238 ஆசிரியர்கள் பாலியல் குற்றச்சாட்டுகளில் சிக்கி உள்ளனர்

ஆசிரியர்கள் உள்ளிட 23 பேர் பணி நீக்கம் - பள்ளிக் கல்வித் துறை அதிரடி நடவடிக்கை

திண்டுக்கல், திருச்சி, நீலகிரி, புதுகை, விழுப்புரம், தர்மபுரி, நெல்லை மாவட்டங்களில் தலா ஒரு ஆசிரியர் என 7 பேர்; தொடக்கக் கல்வித்துறையில் 15 ஆசிரியர்கள் என மொத்தம் 23 பேர் டிஸ்மிஸ் பணி நீக்கம் செய்யப்பட்டவர்களின் சான்றிதழ்களை ரத்து செய்யும் பணியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள்

கடந்த 3 ஆண்டுகளில் 238 ஆசிரியர்கள் பாலியல் குற்றச்சாட்டுகளில் சிக்கி உள்ளனர்

இது தொடர்பாக காவல்துறை சார்பில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குற்றம் சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து விசாரணையும் நடைபெற்று வருகிறது.

குறிப்பாக கிருஷ்ணகிரி போச்சம்பள்ளி அருகே உள்ள அரசுப் பள்ளி ஆசிரியர்கள் 3 பேர் அதே பள்ளியில் படிக்கும் 13 வயது மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் ஆசிரியர்கள் 3 பேரும் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். திருச்சி, ஈரோடு, ஒசூர், சிவகங்கை உட்பட பல்வேறு மாவட்டங்களிலும் பள்ளி மாணவிகள் ஆசிரியர்களாலேயே பாலியல் தொந்தரவுகளுக்கு உள்ளாகி வந்துள்ளனர். காவல் துறை ரீதியான நடவடிக்கைகளுடன் பள்ளிக் கல்வித்துறை சார்பாக துறை ரீதியான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பாலியல் கொடுமை தொடர்பான புகாரில் உண்மைத்தன்மை நிரூபணம் செய்யப்பட்டால் சார்ந்த ஆசிரியர்களின் கல்வித்தகுதி ரத்து செய்யப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாலியல் ரீதியிலான குற்றங்களை தடுக்கும் விதமாக பள்ளிக் கல்வித் துறை அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் பாலியல் புகாரின் பேரில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாதவர்கள் என 23 பேரை பணி நீக்கம் செய்து பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

பாலியல் கொடுமைகள் தொடர்பாக தொடர்ந்து புகார்கள் வந்த நிலையில் மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் மாநில அளவிலான அதிகாரிகள் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட்டு ஒவ்வொரு மாவட்டத்திலும் இது தொடர்பான புகார்கள் ஆராயப்பட்டன.

தமிழ்நாடு முழுவதிலுமிருந்து பள்ளிக் கல்வித் துறையிடம் 46 புகார்கள் வந்து சேர்ந்தன என்றும் அதில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாதோர் என தற்போது 23 பேரை பணீ நீக்கம் செய்து பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. அவர்களது கல்வி தகுதியை ரத்து செய்வது தொடர்பாகவும் ஆலோசனை நடைபெற்று வருகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.