குட்டையில் விழுந்த மாணவன் - மீட்க முயன்ற ஆசிரியருடன் பலி!
பள்ளி மாணவரும் காப்பாற்றச் சென்ற தலைமை ஆசிரியரும் நீரில் மூழ்கி உயிரிழப்பு - School student and headmaster who went to rescue drown to death
ஒசூர் அருகே விவசாய சேமிப்புத் தொட்டியில் விழுந்து பள்ளி மாணவன் உயிரிழந்த நிலையில், அவரை காப்பாற்றுச் சென்ற தலைமை ஆசிரியரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே எலுவப் பள்ளி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. அங்கு மூன்றாம் வகுப்பு படித்துவரும் மாணவர் நித்தின் (வயது 8), அருகே உள்ள விவசாயத் தோட்ட நீர் சேமிப்புத் தொட்டியில் விழுந்துள்ளார். மாணவன் விழுந்ததை பார்த்த பள்ளியின் தலைமை பயிற்சியாளர் கௌசி சங்கரும் (வயது 52) நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். மாணவன் தலைமை ஆசிரியர் இருவரும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Video News - Click here
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.