அரசுப் பள்ளிகளில் இணைய வசதி ஏற்படுத்துதல் - உள்ளாட்சி அமைப்புகள் மூலம் கட்டணம் செலுத்த அரசாணை வெளியீடு! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, March 11, 2025

அரசுப் பள்ளிகளில் இணைய வசதி ஏற்படுத்துதல் - உள்ளாட்சி அமைப்புகள் மூலம் கட்டணம் செலுத்த அரசாணை வெளியீடு!



Provision of internet facilities in government schools - Government order issued to pay fees through local government bodies! அரசுப் பள்ளிகளில் இணைய வசதி ஏற்படுத்துதல் - உள்ளாட்சி அமைப்புகள் மூலம் கட்டணம் செலுத்த அரசாணை வெளியீடு!

அரசுப் பள்ளிகளில் இணைய வசதி ஏற்படுத்துதல் - உள்ளாட்சி அமைப்புகள் மூலம் கட்டணம் செலுத்த அரசாணை வெளியீடு! 2021-2022 , 2022-2023 மற்றும் 2023-2024 - ஆம் ஆண்டுகளுக்கான பள்ளிக்கல்வித் துறை மான்யக் கோரிக்கையின் போது பிறவற்றினிடையே மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அவர்கள் அரசு தொடக்கப் பள்ளிகளில் திறன் வகுப்பறைகளும் ( Smart Class Rooms ) மற்றும் அரசு நடுநிலைப் பள்ளிகளில் உயர் தொழில் நுட்பக் கணினி ஆய்வகங்களும் ( Hi -Tech Labs ) ஏற்படுத்தப்படும் என்ற அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்....

அரசாணை (நிலை) எண்.155 பள்ளிக்கல்வித் (தொக3(2)) துறை, நாள் 17.09.2022.

அரசாணை (நிலை) எண் 217, பள்ளிக்கல்வித் (தொக3(2)) துறை, நாள் 19.12.2022.

அரசாணை (நிலை) எண் 165, பள்ளிக்கல்வித் (தொக3(2)) துறை, நாள் 26.09.2023.

அரசாணை (நிலை) எண். 142, பள்ளிக்கல்வித் (அகஇ(1)) துறை, நாள் 11.10.2021.

அரசாணை (நிலை) எண். 144, பள்ளிக்கல்வித் (அகஇ(1)) துறை, நாள் 25.08.2022.

அரசாணை (நிலை) எண்.132, பள்ளிக்கல்வித் (அகஇ(1)) துறை, நாள் 28.07.2023.

பள்ளிக்கல்வி இயக்குநரின் கடித எண். 022404 / பிடி1/இ3/ 2024, நாள் 30.04.2024. 1.1

2021-2022, 2022-2023 மற்றும் 2023-2024-ஆம் ஆண்டுகளுக்கான பள்ளிக்கல்வித் துறை மான்யக் கோரிக்கையின் போது பிறவற்றினிடையே மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அவர்கள் அரசு தொடக்கப் பள்ளிகளில் திறன் வகுப்பறைகளும் (Smart Class Rooms) மற்றும் அரசு நடுநிலைப் பள்ளிகளில் உயர் தொழில் நுட்பக் கணினி ஆய்வகங்களும் (Hi -Tech Labs) ஏற்படுத்தப்படும் என்ற அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். தமிழ்நாட்டில் 2. மேற்காண் அறிவிப்பினை செயல்படுத்தும் பொருட்டு, 2022-23 மற்றும் 2023-2024 -ஆம் கல்வியாண்டில் அரசு தொடக்கப் பள்ளிகளில் திறன் வகுப்பறைகள் (Smart Class Rooms) ஏற்படுத்திடவும் மற்றும் 2021-2022, 2022-2023 மற்றும் 2023-2024 ஆம் கல்வியாண்டில் அரசு நடுநிலைப் பள்ளிகளில் உயர் தொழில் நுட்பக் கணினி ஆய்வகங்கள் (Hi -Tech Labs) அமைப்பதற்கான பணிகளை மேற்கொள்ள அனுமதியளித்து மேலே ஒன்று படிக்கப்பட்ட வரை முதல் ஆறு வெளியிடப்பட்டுள்ளன.

அரசாணைகளில் ஆணைகள் 3. தமிழ்நாட்டில் தொடக்கக்கல்வி இயக்ககத்தின்கீழ் 24338 அரசு தொடக்கப் பள்ளிகளும், 6992 அரசு நடுநிலைப் பள்ளிகளும், பள்ளிக்கல்வி இயக்ககத்தின் கீழ் 3094 அரசு உயர்நிலைப் பள்ளிகளும், 3,129 (39 மாதிரிப் பள்ளிகள் நீங்கலாக) அரசு மேல்நிலைப் பள்ளிகளும் என மொத்தம் 37,553 அரசு பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. பல்வேறு அரசாணைகளின்படி திறன்மிகு வகுப்பறைகளும், உயர் தொழில் நுட்ப ஆய்வகங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மீதமுள்ள பள்ளிகளில் ஏற்படுத்தும் பணிகள் தற்பொழுது நடைபெற்று வருகின்றன.

உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் மற்றும் திறன் மிகு வகுப்பறைகள் புதியதாக அமைக்கப்பட உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க, இணைய நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு 100 Mbps வசதி (Internet facility) ஏற்படுத்துவதற்கு பள்ளிக்கல்வித் துறை செயலர் அவர்களின் தலைமையில் BSNL நிறுவனத்துடன் நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் செயல்படுத்திட, கீழ்க்காணும் இனங்களுக்கு அனுமதியும் மற்றும் நிதி ஒதுக்கீடு செய்து தருமாறும் மேலே ஏழாவதாகப் படிக்கப்பட்ட கடிதத்தில் பள்ளிக்கல்வி இயக்குநர் அரசைக் கோரியுள்ளார்.

i. One Time 'Charges (OTC) தொகை எதிர்வரும் 12 மாத கட்டண ரசீதில் சேர்த்து கொள்ளப்பட உள்ளதால், நிர்ணயிக்கப்பட்ட இணைய கட்டணத்துடன் சேர்த்து One Time Charges (OTC) செலுத்த நிதி வழங்க வேண்டியுள்ளது.

64 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 2,000 -ற்கும் மேல் மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். 28 தகைசால் பள்ளிகளில் பள்ளி ஒன்றிற்கு 9 உயர் தொழில் நுட்ப ஆய்வகங்களும், 18 திறன்மிகு உள்ளன வகுப்பறைகளும் வழங்கப்பட இப்பள்ளிகளில் 100 Mbps இணைய வசதி (Internet facility) போதுமானதாக இல்லை என்பதால் இப்பள்ளிகளுக்கு 1 Gbps இணைய வசதி அவசிய தேவையினை கருத்தில் கொண்டு 1 Gbps இணைய வழங்க நிதி வேண்டியுள்ளது. 24,338 அரசு தொடக்கப் பள்ளிகளுக்கு இணைய வசதி பெறுதல் மற்றும் 14,665 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு Installation One Time Charges ஆகிய பணிகள் மேற்கொள்ள நிதி வேண்டியுள்ளது.

- 4,934 அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு Installation - One Time Charges பணி மேற்கொள்ள நிதி வேண்டியுள்ளது.

👇👇👇👇👇
CLICK HERE TO DOWNLOAD G.O.Ms.No.55 - PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.