7,535 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும்: ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் நடப்பாண்டில் உத்தேசமாக 7,535 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப உள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தனது ஆண்டு திட்ட அட்டவணையில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஆகஸ்ட் மாதத்தில் 1,915 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கும், 1205 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு செப்டம்பர் மாதத்திலும் அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்டு திட்ட அட்டவணைப்படி, தேர்வுகள் கீழ்கண்ட பணிகளுக்கு தேர்வுகள் நடைபெறும்.
ஏப்ரல் மாதத்தில், அண்ணா பல்கலையில் காலியாக உள்ள இணை பேராசிரியர்கள், உதவி நுாலகர்கள், உதவி இயக்குனர் (உடற்கல்வி) உள்ளிட்ட 232 பணியிடங்கள்.
மே மாதத்தில், காலியாக உள்ள இணை சட்ட பேராசிரியர்கள் மற்றும் உதவி பேராசிரியர்கள் உள்ளிட்ட 132 பணியிடங்கள். ஜூலை மாதத்தில், காலியாக உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லுாரி உதவி பேராசிரியர்கள் உள்ளிட்ட 4000 பணியிடங்கள்.
செப்டம்பர் மாதத்தில், முதல்வர்கள் ஆய்வு பணிகளுக்கு (சி.எம்.ஆர்.எப்) 180 மாணவர்கள் பணியிடங்கள்
நவம்பர் மாதத்தில், காலியாக உள்ள முதுகலை உதவி பேராசிரியர்கள் 1915 பணியிடங்கள்.
டிசம்பர் மாதத்தில், காலியாக உள்ள பி.டி. உதவிஅலுவலர்கள் மற்றும் பி.ஆர்.டி.இ ஆகிய 1205 பணியிடங்கள்
மார்ச்-2026 ல் வட்டார கல்வி அலுவலர்களுக்கான 51 பணியிடங்கள் உள்ளிட்ட இணை பேராசிரியர் மற்றும் உதவி பேராசிரியர்கள் பல்கலைகழகங்கள் தேவைக்கேற்ப பணியிடங்கள் உள்ளிட்ட பணிகளுக்கு தேர்வுகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
7,535 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது - ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல் 7,535 teaching posts to be filled - Teachers Selection Board information
தமிழ்நாட்டில் நடப்பாண்டில் உத்தேசமாக 7,535 ஆசிரியர்கள் நியமனம்: ஆசிரியர் தேர்வு வாரியம் அரசு கலைக் கல்லூரிகளில் ஏற்கனவே அறிவித்தபடி 4,000 உதவிப் பேராசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல்
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.