அரசு நிதியுதவி பெறும் தொடக்க / நடுநிலைப் பள்ளிகளுக்கு MG & FTG 2024 -25 மானியம் விடுவித்தல் சார்பான தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்...
அரசு நிதியுதவி பெறும் தொடக்க / நடுநிலைப் பள்ளிகளுக்கு மானியம் விடுவித்தல் சார்பான தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்...
2024 2025 திட்ட மதிப்பீடு ஒதுக்கீடுகள் பகிர்வு செய்யப்பட்டது - அரசு நிதியுதவி பெறும் தொடக்க / நடுநிலைப் பள்ளிகளுக்கு 2024 - 2025 - ஆம் ஆண்டு இறுதி கற்பிப்பு மானியம் கணக்கீடு மற்றும் பராமரிப்பு மானியம் விடுவித்தல் சார்பான அறிவுரைகள் வழங்குதல் - சார்பு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்...
தொடக்கக் கல்வி - 2024- 2025 திட்ட மதிப்பீடு ஒதுக்கீடுகள் பகிர்வு செய்யப்பட்டது - அரசு நிதியுதவி பெறும் தொடக்க / நடுநிலைப் பள்ளிகளுக்கு 2024 - 2025-ஆம் ஆண்டு இறுதி கற்பிப்பு மானியம் கணக்கீடு மற்றும் பராமரிப்பு மானியம் விடுவித்தல் சார்பான அறிவுரைகள் வழங்குதல்-சார்பு
1. அரசாணை எண்.1228, கல்வி, அறிவியல் மற்றும்
தொழில் நுட்பத் துறை, நாள்.30.12.1994.
2. 600T 6T600T.174,
நாள்.23.06.2000.
பள்ளிக் கல்வித் (பி2) துறை,
3. அரசாணை
GT GODT.231,
பள்ளிக் கல்வித் துறை,
நாள்.11.08.2010.
4. அரசாணை (நிலை) எண்.261, பள்ளிக் கல்வித் (பக6)
துறை,
நாள்.20.12.2018.
5. அரசாணை
(நிலை) 6T 60OT.119,
(தொ.க.2(2) துறை, நாள்.29.06.2019
பள்ளிக் கல்வித்
6. அராசணை (நிலை) எண். 151 (ப.க.1(1)) துறை நாள்.
09.09.2022
7. அராசணை (நிலை) எண். 172 (ப.க.4(1)) துறை நாள்.
30.09.2022
8. தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்,
ந.க.எண்.006797/சி1/2024, நாள்.06.04.2024.
9. தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்,
ந.க.எண்.021727/சி1/2024, நாள்.13.02.2025.
தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டிலுள்ள அரசு நிதியுதவிபெறும்
தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு இறுதி கற்பிப்பு மானியம் விதிகளின்படி
கணக்கிட்டு பராமரிப்பு மானியம் வழங்கப்பட வேண்டியது மாவட்டக் கல்வி
அலுவலர்களின் மிக முக்கிய பணிகளில் ஒன்றாகும். ஏற்கனவே பின்பற்றப்படும்
நடைமுறைகளின்படி, தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டிலுள்ள அரசு
நிதியுதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கு குறித்த காலத்தில்
இறுதி கற்பிப்பு மானியம் மற்றும் பராமரிப்பு மானியம் விடுவிக்க உரிய அறிவுரைகள்
வழங்குவது குறித்த விவரங்கள் பின்வருமாறு தெரிவிக்கப்படுகிறது.
• பார்வை-7ல் காணும் அரசாணையின்படி பள்ளிக் கல்வி மறுசீரமைப்பினால்
தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் 58 மாவட்ட கல்வி அலுவலகங்கள்
(தொடக்கக் கல்வி) ஏற்படுத்தப்பட்டுள்ளன. 2024 - 2025 திட்ட மதிப்பீடு
ஒதுக்கீடுகள் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் (தொடக்கக்
கல்வி) பகிர்வு செய்யப்பட்டுள்ளது.
• தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டிலுள்ள அரசு நிதியுதவி பெறும்
தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்குக் குறித்த காலத்தில் இறுதிக்
கற்பிப்பு மானியம் மற்றும் பராமரிப்பு மானியம் கணக்கிடப்பட்டு விடுவிக்க
வேண்டியுள்ளதால் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களும் (தொடக்கக்
கல்வி) தத்தம் ஆளுகைக்குட்பட்ட வட்டாரக் கல்வி அலுவலர்களுக்குக்
கீழ்க்காணுமாறு அறிவுரைகளை வழங்கி இறுதிக் கற்பிப்பு மானியம் மற்றும்
பராமரிப்பு மானியத்தினைக் கணக்கிட்டு விடுவித்திட
நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும்.
அ. இறுதிக் கற்பிப்பு மானியம் கணக்கீடு
உரிய
1. சார்ந்த வட்டாரக் கல்வி அலுவலர்கள் தத்தம் ஆளுகைக்குட்பட்ட பள்ளிகளை
ஆய்வு செய்துள்ளனரா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
2. நால்வகைச் சான்றுகள் நடப்பு ஆண்டிற்குப் பெறப்பட்டுள்ளனவா என்பதை
வட்டாரக் கல்வி அலுவலர்கள் உறுதி செய்யப்பட்டுள்ளனவா மாவட்டக் கல்வி
அலுவலர்கள் (தொடக்கக் கல்வி) ஆய்வு செய்ய வேண்டும்.
3. பள்ளியில் உள்ள பணியிடங்கள் அனைத்தும் அரசால் ஒப்பளிக்கப்பட்ட
பணியிடங்களா (அரசு மானியம் பெறும் பணியிடங்கள்) என்பதை உறுதி செய்ய
வேண்டும். அப்பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்ட அரசாணை மற்றும்
இயக்குநரின் செயல்முறைகள் ஆகியன வட்டாரக் கல்வி அலுவலரின்
ஆய்வின் போது தவறாமல் கண்டறியப்பட வேண்டும்.
4. கைத்தொழில் ஆசிரியர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களில்
பணிபுரியும் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு முறையாகப் பாடம் கற்பிக்கின்றனரா
என்பதனை உறுதி செய்தல் வேண்டும்.
5. ஒரு காலண்டர் ஆண்டு அடிப்படையில் கணக்கிடப்பட்டுப் பெற்ற மானியம் சரி
பார்க்கப்பட வேண்டும்.
6. வட்டாரக் கல்வி அலுவலர்கள் ஒன்றியம் வாரியாக ஒரு
தொகுப்பறிக்கையினையும், ஒவ்வொரு பள்ளி சார்பாக இறுதி கற்பிப்பு மானிய
அறிக்கையினை தனித்தனியாக மாவட்டக் கல்வி அலுவலருக்கு (தொடக்கக்
கல்வி) சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.
இறுதிக் கற்பிப்பு மானியத்தின் போது சரிபார்க்கப்பட வேண்டிய ஆவணங்கள் மற்றும்
விபரங்கள்.
1. அரசு நிதயுதவிபெறும் தொடக்க / நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்
நியமனங்கள் பதவி உயர்வு மற்றும் வேலை வாய்ப்பு அலுவலகப் பணிமூப்பு
மூலம் நியமனம் செய்திருப்பின் அவர்கள் 5 ஆண்டுகள் பணி முன் அனுபவம்
பெற்றிருக்க வேண்டும்.
2. நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியருக்கான கற்பிப்பு மானியம் வழங்கப்படும்
போது அப்பள்ளி முழு நிதியுதவியிடன் கூடிய முழுமை பெற்ற நடுநிலைப்
பள்ளியாக செயல்படுகிறதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
3. ஒரு நடுநிலைப் பள்ளி உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்படும் போது,
நிலையிறக்கம் செய்யப்பட்ட தொடக்கப் பள்ளிக்கு அரசாணை எண்.5 மற்றும்
50-இன் படி இயக்குநரால் தலைமை ஆசிரியர் பணியிடம் நிலையுயர்த்தி
ஆணை வழங்கப்பட்டுள்ளதா என்பதனை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
4. கைத்தொழில் ஆசிரியர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களில்
பணிபுரியும் ஆசிரியர்கள் முழு நேர ஆசிரியர்களா என்பதையும்
அவ்வாசிரியர்கள் மாணவர்களுக்கு முறையாக பாடம் கற்பிக்கின்றனரா
என்பதனையும் உறுதி செய்தல் வேண்டும்.
5. கைத்தொழில்
ஆசிரியர்
பணியிடங்கள்
நிரப்பப்பட்டிருந்தால்
குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009
இன்படி மாணவர்களின் எண்ணிக்கை 100 க்கும் மேல் இருப்பதை உறுதி
செய்து கொள்ள வேண்டும்.
6. ஆசிரியர்களின் சேமநலநிதிக் கணக்கின் போது, வழங்கப்பட்ட தொகைகள் அனைத்தும் இணக்கம் (Reconciliation) செய்யப்பட்டிருக்க வேண்டும். சார்நிலைக் கருவூலத்தில் TNTC70 மூலம் வழங்கப்பட்ட தொகைக்கும், உதவி
பெறும் பள்ளிகள் பெற்ற மானியத்திற்கும் இடையில் வித்தியாசம்
கண்டறியப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
ஆ. பராமரிப்பு மானியம்
இறுதிக் கற்பிப்பு மானியம் கணக்கிடும் பணி முடிந்த பின்னர் பள்ளிகளுக்கு
பராமரிப்பு மானியம் நிர்ணயம் செய்தல் வேண்டும்.
பராமரிப்பு மானியம் நிர்ணயிக்கும் போது, அவ்வப்போது பள்ளிக்கென
வழங்கப்பட்ட சொத்துக்களில் இருந்து கிடைக்கப்பெறும்
வருமானத்தையும் கணக்கில் கொள்ளல் வேண்டும்.
ஆண்டு
பராமரிப்பு மானியம் பார்வை 5-ல் கண்டுள்ள அரசாணை (நிலை) எண் 19,
பள்ளிக் கல்வித் (தொ.க2(2) துறை, நாள். 29.06.2019-இன் படி கணக்கிடப்பட
வேண்டும்.
இறுதிக் கற்பிப்பு மானியப் பட்டியல் சரிபார்க்க மற்றும் பராமரிப்பு மானியம் வழங்க அந்தந்த மாவட்டங்களில் உள்ள பள்ளிகளின் எண்ணிக்கைக்கேற்ப கீழ்க்காணுமாறு
கால அவகாசம் வழங்கப்பட்டு தேதிகள் நிர்ணயம் செய்யப்படுகிறது.
401 முதல் 1200
வரை உள்ள
முதல்
விவரம்
கால அளவு
நாள்கள்
பள்ளிகள்
கொண்ட
மாவட்டங்கள்
100 முதல் 400
வரை உள்ள
பள்ளிகள்
கொண்ட
மாவட்டங்கள்
17.02.2025
5 நாள்கள்
பராமரிப்பு
முதல்
21.02.2025
வரை
18.02.2025
மற்றும் இரண்டாவது பரிசீலனை
அவற்றில் குறிப்பிட்டுள்ள குறைகளை நிவர்த்திச் செய்தல், சான்றிதழ் சரிபார்த்தல்,
கற்பிப்பு மானியப் பட்டியலும்,
மானியமும் இறுதி வடிவம் செய்தல்
இறுதிக் கற்பிப்பு மானியத்தில் நிலுவைத்
தொகை இருப்பின் அவற்றிற்கான ஆணையும்,
பராமரிப்பு மானியம் விடுவிப்பதற்கான
ஆணையும் வழங்குதல்.
முதல் மற்றும் இரண்டாவது பரிசீலனை
அவற்றில் குறிப்பிட்டுள்ள குறைகளை நிவர்த்திச் செய்தல், சான்றிதழ் சரிபார்த்தல்,
கற்பிப்பு மானியப் பட்டியலும், பராமரிப்பு
மானியமும் இறுதி வடிவம் செய்தல்
முதல்
2 நாள்கள்
19.02.2025
வரை
17.02.2025
முதல்
18.02.2025
2 நாள்கள்
வரை
இறுதிக் கற்பிப்பு மானியத்தில்
நிலுவைத்
தொகை இருப்பின் அவற்றிற்கான ஆணையும்,
19.02.2025
பராமரிப்பு
மானியம் விடுவிப்பதற்கான
1 நாள்
ஆணையும் வழங்குதல்.
100 க்கு கீழ்
உள்ள பள்ளிகள்
கொண்ட
மாவட்டங்கள்
முதல் மற்றும் இரண்டாவது பரிசீலனை அவற்றில் குறிப்பிட்டுள்ள குறைகளை நிவர்த்திச் செய்தல், சான்றிதழ்கள் சரிபார்த்தல், கற்பிப்பு மானியப் பட்டியலும்,
மானியமும் இறுதி வடிவம் செய்தல்
1 நாள்
19.02.2025
பராமரிப்பு
இறுதிக் கற்பிப்பு மானியத்தில் நிலுவைத்
தொகை இருப்பின் அவற்றிற்கான ஆணையும், 1 நாள்
பராமரிப்பு மானியம் விடுவிப்பதற்கான
ஆணையும் வழங்குதல்
20.02.2025
ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு மறுநியமன ஆணை வழங்கிருப்பின், மறுநியமன ஊதியம் குறித்து, மாநிலக் கணக்காயரால் அனுமதி ஆணை வழங்கப்பட்டிருக்க வேண்டும்.
அரசாணை (நிலை) எண் 261, பள்ளிக் கல்வித் துறை, நாள்.20.12.2018 இன்படி மாணவர்களின் நலன் கருதி அரசுக் கொள்கை முடிவின்படி 60 வயது நிறைவு செய்த ஆசிரியர்களை அக்கல்வியாண்டு முடியும் வரை மறுநியமனம் செய்யும்போது உபரி ஆசிரியர்கள் எவரும் பணிபுரியவில்லை என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
* மாநிலக் கணக்காயர் மற்றும் துறைத் தணிக்கையால் சுட்டிக்காட்டப்பட்ட குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்படவில்லையெனில் இவ்விறுதிக் கற்பிப்பு மானியத்தில் பிடித்தம் செய்வது குறித்து நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
· பள்ளியின் நிரந்தர / தற்காலிக அங்கீகாரங்கள் பற்றி குறிப்பிடல் வேண்டும். அவ்வாறு குறிப்பிடும் போது, அங்கீகாரம் எண்ணையும், தற்காலிகம் எனில் தொடர் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளதா என்பதனையும் உறுதி செய்தல் வேண்டும். தொடர் அங்கீகாரம் இல்லாத பள்ளிகளுக்கு தொடர் அங்கீகார
ஆணை பெற்ற பின்னரே கற்பித்தல் மானியம் குறித்த ஆணை பிறப்பித்தல்
வேண்டும்.
நிரந்தர அங்கீகாரம் பெற்ற பள்ளிகள் நால்வகைச் சான்றுகளையும் நடப்பு
ஆண்டு வரை பெற்றிருக்க வேண்டும். அவ்வாறு பெற்ற பின்னரே கற்பித்தல்
மானியம் குறித்த ஆணை பிறப்பித்தல் வேண்டும்.
சுயநிதிப் பிரிவு / சுயநிதிப் பள்ளிகளுக்கு மானியம் ஏதும் வழங்குதல் கூடாது.
* கல்வி முகவாண்மை பதிவு / மாற்றம் / தற்போதைய நிலை ஆகியவற்றினை
உறுதி செய்து கொள்ள வேண்டும்.
குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009
மற்றும் அதனைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட அரசாணை எண். 231, பள்ளிக் கல்வித் துறை, நாள் 11.08.2010 இன்படி அனுமதிக்கப்பட்ட பணியிடங்களில்
நியமனம் செய்யப்பட்டு, ஒப்புதல் அளிக்கப்பட்ட ஆசிரியர்களின் பெயர், பிறந்த
தேதி, கல்வித்தகுதி, கற்பிக்கும் வகுப்பு, பணியில் சேர்ந்த தேதி, ஊதிய விகிதம்
ஆகியவை இடம் பெற்றிருக்க வேண்டும்.
விதிகளின்படி அனுமதிக்கப்பட்ட துறை ஒப்புதல் அளிக்கப்பட்ட
பணியிடங்களுக்கு மட்டும் மானியம் கணக்கிடுதல் வேண்டும்.
பொதுவான அறிவுரைகள்:
* இறுதிக் கற்பிப்பு மானிய கூட்டமானது காலை 9.30 மணிக்கு தொடங்கி மாலை
5.30 மணி வரை நடைபெற வேண்டும். ஒரு மணி முதல் இரண்டு மணிவரை
உணவு இடைவேளை அளிக்கப்பட வேண்டும்.
மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளின் பெயர்
பட்டியல்களையும் தொகுத்துக் கொள்ள வேண்டும்.
* ஒரு வட்டாரக் கல்வி அலுவலருக்குக் குறைந்தபட்சம் முற்பகல் 5 பள்ளிகளும்,
பிற்பகல் 5 பள்ளிகளும் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். இப்பள்ளிகள்
ஆசிரியர்களின்
ஒதுக்கீடானது
அப்பள்ளிகளில்
பணிபுரியும்
எண்ணிக்கைக்கேற்ப அதிகரிக்கலாம் அல்லது குறைக்கலாம்.
அவ்வாறு பள்ளிகள் ஒதுக்கீடானது சார்ந்த ஒன்றியத்தைச் சேர்ந்த வட்டாரக் கல்வி அலுவலருக்கு வராமல் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். இப்பணிகள் மேற்கொள்வதில் காலதாமதம் ஏற்படுவதைத் தவிர்க்கவும், நடப்பு நிதியாண்டு இறுதிக்குள் நிலுவைப் பலன்களைப் பெற்று வழங்குவதில் நிருவாக சிக்கல் ஏற்படாமல் இருக்கவும், கற்பிப்பு மானியப் பட்டியல் மற்றும் பராமரிப்பு மானியம் விடுவித்தல் ஆகியவற்றிற்கான ஆணைகள் கூட்டம் நடைபெறும் இடத்திலேயே வழங்கப்பட வேண்டும்.
* மேற்கண்ட பணிகளானது மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி) தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டு, முற்றிலும் அவர்களது
கண்காணிப்பில் நடத்தப்பட வேண்டும்.
மாவட்டக் கல்வி
கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி), வட்டாரக் கல்வி அலுவலர்களுக்குத் தகுந்த அறிவுரைகளை வழங்கி இப்பணி சார்பாக எவ்வித புகாருக்கும் இடமின்றி செயல்படுமாறும், இப்பொருள் சார்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் விவரத்தினை 29.02.2025-க்குள் இயக்குநருக்கு தவறாது அனுப்பி வைத்தல் வேண்டும் எனவும், ஆய்வு செய்யப்பட்ட இறுதிக் கற்பிப்பு மானிய கணக்கீட்டின்படி பராமரிப்பு மானியம் வழங்கப்பட்ட விவரத்தினை பயன்பாட்டுச் சான்றுடன் அனுப்பி வைக்குமாறும், மீதமுள்ள ஒதுக்கீட்டினை இவ்வியக்ககத்திற்கு 31.03.2025-க்குள் சரண் செய்யுமாறும், இவ்விவரத்தினை தனிநபர் மூலம் சிறப்பு நிலை கருதி அனுப்பிவைக்குமாறு அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் (தொடக்கக் கல்வி) தெரிவிக்கலாகிறது.
மேலும், இச்செயல்முறைகள் கிடைக்கப் பெற்றமைக்கான ஒப்புதலை மறு
அஞ்சலில் அனுப்பி வைப்பதுடன், அனைத்துச் சார்நிலை அலுவலர்களுக்கும் சார்பு
செய்து, அதன் ஒப்புதலை அலுவலகக் கோப்பில் வைக்குமாறும் அனைத்து மாவட்டக்
கல்வி அலுவலர்களும் (தொடக்கக் கல்வி) கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
பெறுநர்
அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள்
(தொடக்கக் கல்வி) (மின்னஞ்சல் வழியாக)
நகல்:
1. அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள்
(சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலர்கள் வழியாக)
2. இவ்வியக்கக G மற்றும் H கண்காணிப்பாளர்
தொடக்கக்கல்வி இயக்குநர் 025 4/02/25
👇👇👇👇👇
CLICK HERE TO DOWNLOAD Proceeding for MG & FTG 2024-25 PDF
Saturday, February 15, 2025
New
அரசு நிதியுதவி பெறும் தொடக்க / நடுநிலைப் பள்ளிகளுக்கு MG & FTG 2024 -25 மானியம் விடுவித்தல் சார்பான தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.