அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக சான்றிதழ் படிப்பு - அசத்தும் தமிழக அரசு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, February 2, 2025

அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக சான்றிதழ் படிப்பு - அசத்தும் தமிழக அரசு

Certificate courses for government school students online - Amazing Tamil Nadu Government - அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக சான்றிதழ் படிப்பு - அசத்தும் தமிழக அரசு

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக சான்றிதழ் படிப்புகளை பள்ளிக் கல்வித்துறை அறிமுகம் செய்துள்ளது. பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள உயர்தொழில்நுட்ப கணினி ஆய்வகங்களை பயன்படுத்தி மாணவர்கள் கற்க ஏற்பாடு செய்யப்படுகிறது.

நான் முதல்வன் திட்டம்

கல்வியில் சிறந்த மாநிலமாக விளங்கும் தமிழ்நாட்டில் முன் உதாரணமாக திகழும் திட்டம், நான் முதல்வன் திட்டம் ஆகும். நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பல்வேறு விதமான பயிற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. அரசு பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டுதல், மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் நுழைவுத் தேர்வு பயிற்சி, இளைஞர்களுக்கு திறன் மேம்பாடு பயிற்சிகள், தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு, மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு பயிற்சிகள் என நான் முதல்வன் திட்டம் மூலம் ஆயிரக்கணக்கில் மாணவர்கள், இளைஞர்கள் பயன் அடைந்து வருகின்றனர்.

ஆன்லைன் வழியாக சான்றிதழ் படிப்பு

இந்நிலையில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஆன்லைன் வழி சான்றிதழ் படிப்புகளை பள்ளி மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ள பள்ளிக் கல்வித்துறை அனைத்து அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குநரகம், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

உயர்கல்வி வழிகாட்டுதல்

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ - மாணவிகளுக்கு உயர்கல்வி வழிகாட்டுதலுக்கான பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகிறது. உயர்கல்வி திறன்கள் வளர்க்க சான்றிதழ் படிப்பு

இதனைத்தொடர்ந்து, உயர்கல்வி சார்ந்த திறன்களை மாணவர்கள் வளர்த்துகொள்ளும் வகையில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் வாயிலாக இணையவழியில் சான்றிதழ் படிப்புகள் வழங்கப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை அரசு பள்ளி மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள உயர்தொழில்நுட்ப கணினி ஆய்வகங்களை ஆசிரியர்கள், மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் அனைத்து பள்ளிகளில் தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

9 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு தற்போது இருந்தே உயர்கல்விக்கான திறன்களை இலவசமாகவும், எளிமையான வகையில் பெற்றுக்கொள்ளலாம்.

இதுபோன்று, நான் முதல்வன் திட்டத்தின் கீழ் திறன் மேம்பாட்டு கழகம் உடன் இணைந்து பினிஷிங் பள்ளி என்ற வேலைவாய்ப்பு பயிற்சி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. துறை சார்ந்த தனியார் நிறுவனங்களுடன் இணைந்து பல்வேறு விதமான பயிற்சிகள் இதன் மூலம் வழங்கப்படுகிறது. இளைஞர்களுக்கு இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு பல்வேறு துறைகளில் திறன் மேம்பாடு பயிற்சிகள் பெற்று வேலைவாய்ப்புகளை பெறலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.