A high-level committee has been formed and a government order has been issued to address audit restrictions imposed by the state government audit department!
மாநில அரசு தணிக்கைத் துறையால் விதிக்கப்படும் தணிக்கைத் தடைகளை நிவர்த்தி செய்ய உயர்மட்டக் குழு அமைத்து அரசாணை வெளியீடு!
ஆணை:
மேலே படிக்கப்பட்ட கடிதத்தில், உள்ளாட்சி நிதி தணிக்கைத் துறையில் மாவட்ட உயர்மட்டக் குழு மற்றும் மாநில உயர்மட்டக் குழு என இரண்டடுக்கு உயர்மட்டக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது தலைமை தணிக்கை இயக்குநர் பதவியானது ஏற்படுத்தப்பட்டுள்ளதால் வாரியங்கள் நீங்களான இதர தணிக்கை நிறுவனங்களுக்கு மூன்றடுக்கு உயர்மட்டக் குழுக்கள் (மாநில அளவிலான, துறைசார் அளவிலான (ம) மாவட்ட அளவிலான) நிரந்தரமாக அமைக்கவும் வாரியங்களின் (பொது நிறுவனங்கள்) தணிக்கையானது சென்னையில் இயங்கும் துணை இயக்குநர் தணிக்கை அலுவலங்களின் தணிக்கை வரம்பிற்குள் வருவதால் மாவட்ட குழு நீங்கலாக இரண்டடுக்கு உயர்மட்ட குழுக்கள் (வாரியம் (ம) மாநிலம்) ஏற்படுத்தும் வகையில் இக்கருத்துரு அனுப்பப்படுவதாகவும் தலைமை தணிக்கை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
2. மேலும் மாவட்ட மற்றும் மாநில அளவில் தணிக்கைத் தடைகள் நீக்கம் செய்வதற்கு உள்ளாட்சி நிதித் தணிக்கை துறையில் கடைப்பிடிக்கக் கூடிய நடைமுறைகள் குறித்து பின்வரும் அரசாணைகள் பரிசீலிக்கப்பட்டதாகவும் தலைமை தணிக்கை இயக்குநர் தெரிவித்துள்ளார். 1. அரசாணை (நிலை) எண்.324, ஊரக வளர்ச்சி (சி3)த் துறை, நாள்.13.11.1997
2. அரசாணை (நிலை) எண்.1, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (பேரூ2) துறை, நாள்.04.01.2007
3. அரசாணை (நிலை) எண்.156, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (ந.நி.5(2) ) துறை, நாள் 15.12.2023
3. மேலும், மாநில அரசு தணிக்கைத் துறையால் தணிக்கை மேற்கொள்ளப்படும் தணிக்கை நிறுவனங்களின் நிலுவை தணிக்கைத் தடைகள் / எதிர்காலத்தில் எழுப்பக்கூடிய தணிக்கைத் தடைகள் / எதிர்காலத்தில் மாநில அரசு தணிக்கைத் துறைக்கு ஒப்படைக்கப்படும் தணிக்கை நிறுவனங்களின் தணிக்கையின் போது எழுப்பப்படும் தணிக்கை தடைகள் ஆகியவற்றை உரிய விதிமுறைகளைப் பின்பற்றி நீக்கம் செய்யும் பொருட்டு, மாவட்ட ஆட்சி தலைவரை தலைவராகக் கொண்ட மாவட்ட அளவிலான உயர்மட்ட குழு. துறைசார் / வாரிய அளவிலான அலுவலர்கள் அடங்கிய உயர்மட்ட குழு மற்றும் நிதித் துறை செயலாளரை தலைவராகக் கொண்ட மாநில அளவிலான உயர்மட்ட குழுக்களை கீழ்கண்டவாறு அமைத்திட தலைமை தணிக்கை இயக்குநர் அரசினை கோரியுள்ளார்
1. மாவட்ட ஆட்சி தலைவரை தலைவராக கொண்ட மாவட்ட அளவிலான உயர்மட்டக் குழு - (சென்னை மாவட்டம் நீங்கலாக) i. மாவட்ட ஆட்சித் தலைவர் ii. iii. - தலைவர் மண்டல இணை இயக்குநர், உள்ளாட்சி நிதித் தணிக்கைத் துறை (தொடர்புடைய மண்டலம்) – உறுப்பினர் எந்த துறையின் தணிக்கைத் தடைகள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளதோ அத்துறையின் இணை இயக்குநர் பதவியின் தகு நிலைக்கு ஈடான அலுவலர் அல்லது அப்பதவியினை விட உயர் பதவியில் உள்ள அலுவலர் – உறுப்பினர் iv. உதவி இயக்குநர், மாநில அரசு தணிக்கைத் துறை - உறுப்பினர் (குழு கூட்டுநர் (ம) ஒருங்கிணைப்பாளர்) V. தொடர்புடைய துறையின் மாவட்ட உயர் அலுவலர் - உறுப்பினர் 2. துறைசார்/வாரிய அளவிலான உயர்மட்டக் குழு-(சென்னை மாவட்டம் உட்பட) 1. II. தலைமை தணிக்கை இயக்குநர் - தலைவர் தடைகள் எந்த துறையின்/வாரியத்தின் தணிக்கைத் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளதோ அத்துறையின் தலைவர்/ வாரியத்தின் உறுப்பினர் செயலர்/தலைமைச் செயல் அலுவலர்/ மேலாண்மை இயக்குநர் உறுப்பினர் III. இயக்குநர், மாநில அரசு தணிக்கைத் துறை - உறுப்பினர் (குழு கூட்டுநர் (ம) ஒருங்கிணைப்பாளர்) 3. மாநில அளவிலான உயர்மட்டக் குழு i. நிதித்துறைச் செயலாளர் அல்லது நிதித்துறை செயலாளரால் அனுமதிக்கப்படும் இந்திய ஆட்சிப் பணி நிலை கொண்ட உயர் அலுவலர் தலைவர் ii. எந்த துறையின்/வாரியத்தின் தணிக்கைத் தடைகள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளதோ அத்துறையின் அரசு செயலாளர் – உறுப்பினர் -3- iii. iv. தலைமை தணிக்கை இயக்குநர் - உறுப்பினர் எந்த துறையின் தணிக்கைத் தடைகள் எடுத்துக்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளதோ பரிசீலனைக்கு அத்துறையின் தலைவர்/ வாரியத்தின் உறுப்பினர் செயலர்/தலைமைச் செயல் அலுவலர்/ மேலாண்மை இயக்குநர் - உறுப்பினர் V. இயக்குநர், மாநில அரசு தணிக்கைத் துறை - உறுப்பினர் (குழு கூட்டுநர் (ம) ஒருங்கிணைப்பாளர்)
4. தலைமை தணிக்கை இயக்குநரின் கோரிக்கையினை அரசு கவனமுடன் ஆய்வு செய்து அதனை ஏற்று, மாநில அரசு தணிக்கைத் துறையால் தணிக்கை மேற்கொள்ளும் தணிக்கை நிறுவனங்களின் நிலுவை தணிக்கை தடைகள் / எதிர்காலத்தில் எழுப்பக்கூடிய தணிக்கைத் தடைகள் /எதிர்காலத்தில் மாநில அரசு தணிக்கைத் துறைக்கு ஒப்படைக்கப்படும் தணிக்கை நிறுவனங்களின் தணிக்கையின் போது எழுப்பப்படும் தணிக்கை தடைகள் அகியவற்றை உரிய விதிமுறைகளைப் பின்பற்றி நீக்கம் செய்யும் பொருட்டு மாவட்ட அளவிலான குழு, துறைசார்/ வாரிய அளவிலான அலுவலர்கள் அடங்கிய உயர்மட்ட குழு மற்றும் மாநில அளவிலான உயர்மட்ட குழு மூன்று அடுக்கு குழுக்களை மேலே பத்தி -1- ல் குறிப்பிடப்பட்டுள்ளவாறு அமைக்க முடிவு செய்து, அவ்வாரே ஆணையிடுகிறது 5. மாவட்ட உயர்மட்ட குழு, துறைசார் / வாரிய அளவிலான உயரமட்ட குழு மற்றும் மாநில உயர்மட்ட குழுக்களின் எல்லை (Terms of Reference) ஆகியவை இவ்வரசாணையின் பின்இணைப்பு -1-ல் இணைக்கப்பட்டுள்ளது.
6. பொது தணிக்கை அறிக்கை வெளியிடும் அலுவலரின் கடமைகள் / பொறுப்புகள் மற்றும் பொதுவான வழிகாட்டுதல்கள் ஆகியவை இவ்வரசாணையின் பின் இணைப்பு -2-ல் இணைக்கப்பட்டுள்ளது.
பெறுநர்
(ஆளுநரின் ஆணைப்படி) மாவட்ட உயர்மட்ட குழுவின் ஆய்வு எல்லை (Terms of reference of District High Level Committee) 1. மாவட்ட அளவிலான உயர்மட்டக்குழு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கூடுவதை உறுதி செய்தல்.
2. தணிக்கை அறிக்கை வெளியிடப்பட்ட நாளிலிருந்து ஆறுமாத காலத்திற்குள் தீர்வு செய்ய இயலாத பத்திகளை மாவட்ட அளவிலான உயர்மட்டக் குழுவின் பரிசீலனைக்கு உட்படுத்துதல்.
3. இரண்டு முறை மாவட்டக் குழுவின் பரிசீலனைக்கு பின்னரும் தீர்வு செய்ய இயலாத பத்திகள் மற்றும் மாவட்ட குழுவால் பரிந்துரை செய்யப்படும் இதர பத்திகளை துறைசார் அளவிலான உயர்மட்ட குழுவின் பரிசீலனைக்கு அனுப்புவதை உறுதி செய்தல்.
4. குழு ஒருங்கிணைப்பாளர் குழுவின் கூட்டத்தில் சேர்க்கப்படவுள்ள தணிக்கைத் தடைகள் குறித்த விவரத்தினை சம்பந்தப்பட்ட ஓய்வு பெற்ற / ஓய்வு பெறவுள்ள அலுவலர்களுக்கு முன்கூட்டியே விவரம் அளித்தல்.
5. இவ்வாறு தணிக்கை தடைகளுக்குட்படுத்தப்பட்ட ஓய்வுப் பெற்ற / ஓய்வு பெறவுள்ள அலுவலர்கள் தாங்கள் சம்பந்தப்பட்ட தணிக்கைத் தடைகளுக்கு தாங்கள் கூற விரும்பும் கருத்துக்களை குழுவின் முன் ஆஜராகி கூடுதல் விளக்கங்கள் ஏதேனும் இருப்பின் அளிக்க நடவடிக்கை எடுத்தல்.
6. முறைகேடுகள் பற்றிய அறிக்கையினை குழுவின் முன் வைத்து பரிசீலனை செய்தல்.
7. தணிக்கைத் தடை இழப்புகளுக்கு காரணமான அலுவலர்கள் மீது பொறுப்பு நிர்ணயம் செய்தல். உம். விகிதாச்சார முறையில் நிதிசார்ந்த பொறுப்பு நிர்ணயம் அல்லது வேறு உசிதமான முறையில் நிதிசார்ந்த பொறுப்பு நிர்ணயம் செய்தல். (இது குறித்து தொடர்புடைய துறைகள் தனியே முன்மொழிவுகள் அனுப்பி அரசிடமிருந்து உரிய ஆணைகள் வழங்கப்பட்டிருப்பின் அந்த அரசாணையின்படி பொறுப்பு நிர்ணயம் செய்யப்பட வேண்டும்).
8. நிதியிழப்பு ஏற்படுத்தாத தகுதியான நிகழ்வுகளில் பணம் திரும்பப் பெறுவதை முழுவதுமாக கைவிடுதல்.
9. ஒவ்வொரு முறைகேடுகளையும், முறைகேடுகளில் தன்மையின் அடிப்படையில் உரிய முடிவுகள் எடுத்தல்.
உள்ள 10. எந்த ஒரு தணிக்கை தடைக்காவது துறை அளவில் / அரசு அளவில் பிழை பொறுத்தல் ஆணை பெறப்பட வேண்டும் எனில் குழுவானது முடிவெடுக்கும் பட்சத்தில் அத்தகைய நிகழ்வினை துறைசார் அளவிலான உயர்மட்ட குழுவிற்கு பரிந்துரைத்தல்.
11. இக்குழு பரிந்துரைத்துள்ளவைகள் மற்றும் கோரப்பட்டுள்ளவை குறித்து நடவடிக்கை தணிக்கையில் மேற்கொள்ள தொடர்புடைய தணிக்கை நிறுவனத்தின் நிர்வாக அலுவலருக்கு அறிவுறுத்துதல்.
12. முறைகேடுகள் குறித்து மாநில அரசு தணிக்கைத் துறையால் சுட்டிக் காட்டப்பட்ட அனைத்து நிதியாண்டுகளுக்குரிய தணிக்கைத் தடைகளை பரிசீலித்தல்.
13. லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணையில் உள்ள நிகழ்வுகள், நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ள இனங்கள் மற்றும் சட்டமன்ற குழுக்கள் முன் சமர்ப்பிக்கப்பட்ட தணிக்கை பத்திகள் குறித்து இக்குழுவின் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளாமல் விடல்.
14.தலைமை தணிக்கை இயக்குநரால் அவ்வப்போது வெளியிடப்படும் மாவட்ட உயர்நிலைக்குழு தொடர்பான நெறிமுறைகளை பின்பற்றுதல்.
15.குழுக்களின் தலைவர், துணைத் தலைவர் மற்றும் இதர அலுவலர்களுக்கு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் தணிக்கைத் தடைகள் மற்றும் அவற்றிற்கு அளிக்கப்படும் பதில்கள் குறித்த விவரங்கள் அடங்கிய கூட்டப்பொருள் விவரம் (Agenda) ஏழு தினங்களுக்கு முன்னரே அளிக்கப்பட வேண்டும். எனினும், இக்கால கெடுவினை குழுவின் விருப்புரிமை அடிப்படையில் தளர்த்திக்கொள்ளலாம்.
16.குழுவின் கூட்டங்கள் குறித்து கூட்ட நடவடிக்கை பதிவேடுகள் பராமரிப்பது உறுதி செய்தல் வேண்டும். இந்த கூட்ட நடவடிக்கை பதிவேட்டில் சமர்ப்பிக்கப்பட்ட தணிக்கை தடைகளின் விவரம். நிவர்த்தி செய்யப்பட்ட தணிக்கை தடைகள், நிலுவையில் வைக்கப்பட்ட தணிக்கை தடைகள், அடுத்த உயர்குழுவிற்கு பரிந்துரை செய்யப்பட்ட பத்திகள் குறித்த விவரங்கள் எழுதப்பட்டு அலுவலர்களின் கையொப்பம் பெறப்பட வேண்டும்.
II துறைசார் / வாரிய அளவிலான உயர்மட்ட குழுவின் ஆய்வு எல்லை (Terms of reference of committee)
1. ஆறு மாதத்திற்கு ஒருமுறை தலைமை தணிக்கை இயக்குநர்
தலைமையிலான உயர்மட்டக்குழு கூடுவதை உறுதி செய்தல்.
2. மாவட்ட உயர்மட்டக் குழுவால் பரிந்துரை செய்யப்படும் தணிக்கைப் பத்திகள் குறித்து முடிவெடுத்தல்.
3. மாவட்ட உயர்மட்டக் குழுவின் முன் இருமுறை சமர்ப்பிக்கப்பட்ட போதும் தீர்வு எட்ட இயலாத தணிக்கைத் தடை பத்திகள் குறித்து பரிசீலனை செய்தல்.
4. சட்டப்பூர்வ வாரியங்களின் (பொது நிறுவனங்கள்) தணிக்கை தடைகளை பொறுத்தமட்டில் தணிக்கை அறிக்கை வெளியிடப்பட்ட நாளிலிருந்து 1 வருட காலத்திற்குள் தீர்வு செய்ய இயலாத பத்திகளை மாநில அளவிலான உயர் மட்டக் குழுவின் முடிவிற்கு அனுப்பப்பட வேண்டும். 5. எந்த ஒரு தணிக்கை தடைக்காவது அரசின் பிழை பொறுத்தல் ஆணை பெறப்பட வேண்டும் போன்ற நிகழ்வுகள் மற்றும் இதுதொடர்பான மாவட்டக் குழுவின் பரிந்துரைகளை பரிசீலித்து மாநில உயர்மட்டக் குழுவிற்கு பரிந்துரைத்தல்.
6. குழு ஒருங்கிணைப்பாளர் குழுவின் கூட்டத்தில் சேர்க்கப்படவுள்ள தணிக்கைத் தடைகள் குறித்த விவரத்தினை சம்பந்தப்பட்ட ஓய்வு பெற்ற / ஓய்வு பெறவுள்ள அலுவலர்களுக்கு முன்கூட்டியே விவரம் அளித்தல்.
7. இவ்வாறு தணிக்கை தடைகளுக்குட்படுத்தப்பட்ட, ஓய்வுப் பெற்ற / ஓய்வு பெறவுள்ள அலுவலர்கள் தாங்கள் சம்பந்தப்பட்ட தணிக்கைத் தடைகளுக்கு, தாங்கள் கூற விரும்பும் கருத்துக்களை குழுவின் முன் ஆஜராகி கூடுதல் விளக்கங்கள் ஏதேனும் இருப்பின் அளிக்க நடவடிக்கை எடுத்தல்.
8. முறைகேடுகள் பற்றிய அறிக்கையினை குழுவின் முன் வைத்து பரிசீலனை செய்தல்.
9. நிதியிழப்பு ஏற்பட்டதாக கருதப்படும் ஒவ்வொரு நிகழ்வினையும் ஆராய்ந்து நிதியிழப்பு ஏற்படுத்தாத தகுதியான நிகழ்வுகளில் பணம் திரும்பப் பெறுவதை முழுவதுமாக கைவிடுதல்.
உள்ள 10. ஒவ்வொரு முறைகேடுகளையும், முறைகேடுகளில் தன்மையின் அடிப்படையில் உரிய முடிவுகள் எடுத்தல்.
11. இக்குழு பரிந்துரைத்துள்ளவைகள் மற்றும் தணிக்கையில் கோரப்பட்டுள்ளவை குறித்து நடவடிக்கை மேற்கொள்ள தொடர்புடைய தணிக்கை நிறுவனத்தின் நிர்வாக அலுவலருக்கு அறிவுறுத்துதல், உத்தரவுகள் பிறப்பித்தல், தேவைப்படின் தணிக்கை துறைக்கும் தேவையான உத்தரவுகள் அறிவுறுத்தல்கள் பிறப்பித்தல்.
/ நிதியாண்டுகளுக்குரிய
12. முறைகேடுகள் குறித்து மாநில அரசு தணிக்கைத் துறையால் சுட்டிக் காட்டப்பட்ட அனைத்து தணிக்கைத் தடைகளை பரிசீலித்தல். 13. லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணையில் உள்ள நிகழ்வுகள், நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ள இனங்கள் மற்றும் சட்டமன்ற குழுக்கள் முன் சமர்ப்பிக்கப்பட்ட தணிக்கை பத்திகள் குறித்து இக்குழுவின் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளாமல் விடல்.
14. குழுக்களின் தலைவர் மற்றும் இதர அலுவலர்களுக்கு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் தணிக்கைத் தடைகள் மற்றும் அவற்றிற்கு அளிக்கப்படும் பதில்கள் குறித்த விவரங்கள் அடங்கிய கூட்டப்பொருள் விவரம் (Agenda) ஏழு தினங்களுக்கு முன்னரே அளிக்கப்பட வேண்டும். எனினும், இக்கால கெடுவினை குழுவின் தளர்த்திக்கொள்ளலாம். விருப்புரிமை அடிப்படையில் 15. குழுவின் கூட்டங்கள் குறித்து கூட்ட நடவடிக்கை பதிவேடுகள் பராமரிப்பது உறுதி செய்தல் வேண்டும். இந்த கூட்ட நடவடிக்கை பதிவேட்டில் சமர்ப்பிக்கப்பட்ட தணிக்கை தடைகளின் விவரம், நிவர்த்தி செய்யப்பட்ட தணிக்கை தடைகள். நிலுவையில் வைக்கப்பட்ட தணிக்கை தடைகள், அடுத்த உயர்குழுவிற்கு பரிந்துரை செய்யப்பட்ட பத்திகள் குறித்த விவரங்கள் எழுதப்பட்டு அலுவலர்களின் கையொப்பம் பெறப்பட வேண்டும்.
III. மாநில உயர்மட்டக் குழுவின் ஆய்வு எல்லை (Terms of reference of committee) 1. ஆண்டிற்கு ஒருமுறை மாநில உயர்மட்டக்குழு கூடுவதை உறுதி செய்தல்.
2. துறைசார்/வாரிய அளவிலான உயர்மட்ட குழு பரிந்துரை செய்யும் தணிக்கைப் பத்திகள் குறித்து முடிவெடுத்தல்.
3. மாநில உயர்மட்ட குழு தணிக்கை தடைகள் குறித்து விசாரிக்க. மறுவிசாரணை செய்ய, தணிக்கை தடைகளை நீக்கம் செய்ய அல்லது தடைநீக்கம் செய்யப்பட்ட பத்திகளை திரும்ப தடை பத்தியாக தொடர அனுமதிக்க தேவையான உத்தரவுகளையும், அமைப்பாக வழிகாட்டுதல்களையும் வழங்க ஏதுவான செயல்படும். 4. எந்த ஒரு தணிக்கை தடைக்காவது அரசின் பிழை பொறுத்தல் ஆணை பெறப்பட வேண்டும் போன்ற நிகழ்வுகள், Write off (போக்கெழுதுதல்) தொடர்பான விவரங்கள் மற்றும் இதர விவரங்களை பரிசீலித்து உரிய முடிவுகள் எடுத்தல்.
5. தணிக்கை தடைகள் குறித்தும் மற்றும் நிர்வாகத்தால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்து தேவையான நிகழ்வுகளில் தணிக்கைத் துறையாலும், நிர்வாக எடுக்கப்பட வேண்டிய துறையாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள், தொழில்நுட்பங்கள், பேணப்பட வேண்டிய பதிவேடுகள் மற்றும் பணியாளர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய தேவையான பயிற்சிகள் குறித்து ஆலோசனைகள் / உத்தரவுகள் வழங்குதல். ஒருங்கிணைப்பாளர்
6. குழு குழுவின் கூட்டத்தில் சேர்க்கப்படவுள்ள தணிக்கைத் தடைகள் குறித்த விவரத்தினை சம்பந்தப்பட்ட ஓய்வு 1 பெற்ற ஓய்வு பெறவுள்ள அலுவலர்களுக்கு முன்கூட்டியே விவரம் அளித்தல்.
7. இவ்வாறு தணிக்கை தடைகளுக்குட்படுத்தப்பட்ட ஓய்வுப் பெற்ற / ஓய்வு பெறவுள்ள அலுவலர்கள் தாங்கள் சம்பந்தப்பட்ட தணிக்கைத் தடைகளுக்கு தாங்கள் கூற விரும்பும் கருத்துக்களை குழுவின் முன் ஆஜராகி கூடுதல் விளக்கங்கள் ஏதேனும் இருப்பின் அளிக்க நடவடிக்கை எடுத்தல்.
8. முறைகேடுகள் பற்றிய அறிக்கையினை குழுவின் முன் வைத்து பரிசீலனை செய்தல்.
9. நிதியிழப்பு ஏற்பட்டதாக கருதப்படும் ஒவ்வொரு நிகழ்வினையும் ஆராய்ந்து நிதியிழப்பு ஏற்படுத்தாத தகுதியான நிகழ்வுகளில் பணம் திரும்பப் பெறுவதை முழுவதுமாக கைவிடுதல்.
10. ஒவ்வொரு முறைகேடுகளையும், முறைகேடுகளில் உள்ள தன்மையின் அடிப்படையில் உரிய முடிவுகள் எடுத்தல். 11. இக்குழு பரிந்துரைத்துள்ளவைகள் மற்றும் தணிக்கையில் கோரப்பட்டுள்ளவை குறித்து நடவடிக்கை மேற்கொள்ள தொடர்புடைய அலுவலருக்கு அறிவுறுத்துதல்.
12. முறைகேடுகள் குறித்து மாநில அரசு தணிக்கைத் துறையால் சுட்டிக் காட்டப்பட்ட அனைத்து நிதியாண்டுகளுக்குரிய தணிக்கைத் தடைகளை பரிசீலித்தல்.
13. லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணையில் உள்ள நிகழ்வுகள்,நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ள இனங்கள் மற்றும் சட்டமன்ற குழுக்கள் முன் சமர்ப்பிக்கப்பட்ட தணிக்கை பத்திகள் குறித்து இக்குழுவின் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளாமல் விடல்.
14.குழுவின் தலைவர் மற்றும் இதர அலுவலர்களுக்கு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் தணிக்கைத் தடைகள் மற்றும் அவற்றிற்கு அளிக்கப்படும் பதில்கள் குறித்த விவரங்கள் அடங்கிய கூட்டப்பொருள் விவரம் (Agenda) ஏழு தினங்களுக்கு முன்னரே அளிக்கப்பட வேண்டும். எனினும், இக்கால கெடுவினை குழுவின் விருப்புரிமை அடிப்படையில் தளர்த்திக்கொள்ளலாம்.
15. குழுவின் கூட்டங்கள் குறித்து கூட்ட நடவடிக்கை பதிவேடுகள் பராமரிப்பது உறுதி செய்தல் வேண்டும்.
இந்த பதிவேட்டில் சமர்ப்பிக்கப்பட்ட கூட்ட தணிக்கை நடவடிக்கை தடைகளின் விவரம், நிவர்த்தி செய்யப்பட்ட தணிக்கை தடைகள், நிலுவையில் வைக்கப்பட்ட தணிக்கை தடைகள், அடுத்த உயர்குழுவிற்கு பரிந்துரை செய்யப்பட்ட பத்திகள் குறித்த விவரங்கள் எழுதப்பட்டு அலுவலர்களின் கையொப்பம் பெறப்பட வேண்டும்.
//உண்மை நகல்// பிரிவு அலுவலர். S. Munatchi 04/02/2025 அரசாணை (நிலை) எண்.27, நிதி (உ.நி)த் துறை, நாள். 04.02.2025. இணைப்பு-2
பொது - தணிக்கை அறிக்கை வெளியிடும் அலுவலரின் கடமைகள் / பொறுப்புகள் 1. தணிக்கை அறிக்கைகள் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் வெளியிடப்படுவது உறுதி செய்யப்பட வேண்டும்.
2. தணிக்கை துவக்கம், தணிக்கை பத்திகள் வரைதல் (ம) தணிக்கை அறிக்கை வெளியிடுதல் வரையில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் வழுவாது பின்பற்றப்பட வேண்டும். 3. தணிக்கையானது சீரான முறையில் நடைபெறுவது உறுதி செய்யப்பட வேண்டும். தணிக்கை நிறுவனங்களின் தணிக்கை பணியானது அனுமதிக்கப்பட்ட பணித்திட்டத்தின் மேற்கொள்ளப்படுவது உறுதி செய்யப்பட வேண்டும். படி 4. தணிக்கையின் போது கண்டறியப்படும் கடுங்குறைபாடுகள் உடனுக்குடன் தலைமை தணிக்கை இயக்குநரின் கவனத்திற்கு கொண்டு வரும் வகையில் உரிய ஆதார ஆவணங்களை தடை பத்திகளுடன் இணைத்து கடுங்குறைபாடுகள் கண்டறியப்பட்ட 15 தினங்களுக்குள் அனுப்பப்பட வேண்டும்.
5. தணிக்கை பணிக்கான அனுமதிக்கப்படும் மனித நாட்கள் விரையமாகாமல் இருக்க ஏதுவான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
6. தணிக்கை அறிக்கையில் இடம்பெற்றுள்ள பத்திகள் தணிக்கை அறிக்கை வெளியிடப்பட்டதிலிருந்து ஒரு மாத காலத்திற்குள் தணிக்கை அறிக்கை வெளியிட்ட அலுவலரால் தீர்வு செய்வது குறித்து வாலாய் முறையில் தற்போது பின்பற்றப்படும் நடைமுறைகளின்படியே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம். 1 மாத காலத்தினை கடந்த தணிக்கை பத்திகளைத் தொகுத்து மாநில அரசு தணிக்கைத் துறை இயக்குநருக்கு அனுப்பப்பட வேண்டும்.
7. நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவினை கடந்த நிலுவை தணிக்கை பத்திகள் உரிய குழுக்களின் முன்னர் சமர்ப்பிக்கப்பட்டு தீர்வுகள் எடுக்கப்படுவதற்கு செயலாற்ற வேண்டும். நிலுவை தணிக்கை பத்திகள் விவரம் சரியாக பராமரிக்கப்படவேண்டும்.
8. நிலுவைத் தணிக்கைத் தடை பத்திகள், தொடர்புடைய தணிக்கை நிறுவனங்களுடன் அவ்வப்போது ஒத்திசைவு செய்து சான்றளிக்கப்பட வேண்டும்.
9. மாநில அரசு தணிக்கைத் துறையால் வெளியிடப்பட்ட தணிக்கை அறிக்கைகள் இந்த அரசாணை வெளியிடும் நாளுக்கு முன்னர் வெளியிடப்பட்டவை மற்றும் அரசாணை வெளியிடப்பட்ட நாளிலிருந்து வெளியிடப்பட்டவை என வகைப்படுத்தப்பட வேண்டும். அரசாணை வெளியிடும்
நாளுக்கு முன்னர் வெளியிடப்பட்ட தணிக்கை அறிக்கைகள் அரசாணை வெளியிடப்பட்ட நாளிலேயே வெளியிடப்பட்டதாக கருத்தில் கொண்டு அந்த அடிப்படையில் உரிய அளவிலான குழுக்களுக்கு மாநில அரசு தணிக்கைத் துறை இயக்குநர் உரிய தகவல்களை அளித்து தணிக்கை பத்திகளை தீர்வு செய்ய வழிவகுக்க வேண்டும்.
பொதுவான வழிகாட்டுதல்கள் 10. மாநில அரசு தணிக்கை துறையின் தணிக்கை கட்டுப்பாட்டில் உள்ள சட்ட பூர்வ வாரியங்களை (பொது நிறுவனங்கள்) பொறுத்தமட்டில் தொகுப்பு தணிக்கை அறிக்கை வாலாயமாக சட்டமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படுகின்றது. தேர்ந்தெடுக்கப்பட்ட முக்கிய பத்திகள் பொது நிறுவனக் குழுவின் பரிசீலனைக்கு கொண்டு செல்லப்பட்டு குழுவினால் பத்திகள் குறித்து முடிவுகள் எடுக்கப்படுகிறது.
இவ்வாறு கொண்டு செல்லப்பட்ட பத்திகள் குறித்து எவ்வித தொடர் நடவடிக்கையும் மாநில அரசு தணிக்கை துறையால் மேற்கொள்ள இயலாது. எனவே, தீர்வு செய்ய இயலாத கடுங்குறைபாடுகள், முறைகேடுகள் என துறைசார் / மாநில அளவிலான உயர் மட்டக் குழுவினால் கண்டறியப்பட்ட இனங்களை மட்டுமே Committee On Public Undertakings (பொது நிறுவனங்கள் குழு) / Committee on Public Accounts (பொதுக் கணக்குக் குழு) பார்வைக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.
//உண்மை நகல்//
CLICK HERE TO DOWNLOAD G.O.Ms.No.27 - PDF
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.