தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட்ட தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு 6 மாதங்களுக்கான மதிப்பூதியம் ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, February 7, 2025

தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட்ட தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு 6 மாதங்களுக்கான மதிப்பூதியம் ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு!



Government Order issued allocating 6 months' honorarium to vocational education teachers filled on a temporary basis! - தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட்ட தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு 6 மாதங்களுக்கான மதிப்பூதியம் ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு!

தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட்ட தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு 6 மாதங்களுக்கான மதிப்பூதியம் ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு!

சுருக்கம்

பள்ளிக் கல்வி - அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 2024-2025-ஆம் கல்வியாண்டில் தொழிற்கல்வி பிரிவுகளுக்கு போதிய தொழிற்கல்வி ஆசிரியர்கள் இன்மையால் அவற்றை தகுதிவாய்ந்த நபர்களைக் கொண்டு தற்காலிக அடிப்படையில் நிரப்புதல் - அனுமதி மற்றும் நிதி ஒதுக்கீடு செய்தல் - ஆணை - வெளியிடப்படுகிறது.

பள்ளிக் கல்வி (பக7(1))த் துறை அரசாணை (நிலை) எண்.267 நாள். 16.12.2024

திருவள்ளுவர் ஆண்டு-2055. குரோதி வருடம், மார்கழி -01. படிக்கப்பட்டவை:-

1. அரசாணை (நிலை) எண்.07, பள்ளிக்கல்வி (ப.க.5(1))த் துறை, நாள்.07.01.2023.

2. அரசாணை (நிலை) எண்.173, பள்ளிக்கல்வி (ப.க.7(1))த் துறை, நாள்.13.12.2021.

3. பள்ளிக் கல்வி கல்வி இயக்குநர் அவர்களின் கடித 15.85.61600T.13758/ வி1/இ1/2013, நாள்.13.09.2024.

ஆணை:

மேலே முதலாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில், 2022-2023-ஆம் கல்வியாண்டில் தொடக்கக் கல்வி இயக்ககம்/ பள்ளிக்கல்வி ஆணையரகத்தின் கீழ் காலியாக உள்ள 4989 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள், 5154 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் 3876 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் என மொத்தம் 14,019 பணியிடங்களை நேரடி நியமனம்/ பதவி உயர்வு மூலம் நிரப்பும் வரை பள்ளி மேலாண்மைக் குழு மூலமாக தற்காலிக ஆசிரியர் நியமனம் செய்யப்பட்டதற்கு அனுமதியும், அவ்வாறு நியமனம் செய்யப்பட்ட ஒரு இடைநிலை ஆசிரியருக்கு மதிப்பூதியம் (Honorarium) ரூ.12,000/- மற்றும் ஒரு பட்டதாரி ஆசிரியருக்கு மதிப்பூதியம் ரூ.15,000/- மற்றும் ஒரு முதுகலை ஆசிரியருக்கு மதிப்பூதியம் (Honorarium) ரூ.18,000/- என மொத்தம் 14,019 இடைநிலை/பட்டதாரி/ முதுகலை ஆசிரியர்களுக்கு மதிப்பூதியம் வழங்குவதற்கு ஆகும் செலவினம் ரூ.109,91,52,000/- நிதி ஒப்பளிப்பு வழங்கியும் மேலும், வரும் ஆண்டுகளில் தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் மற்றும் பள்ளிக்கல்வி ஆணையரகத்தின் கீழ் ஏற்படும் ஆசிரியர் காலிப்பணியிடங்களை நேரடி நியமனம்/ பதவி உயர்வு மூலம் நிரப்பும் வரை, மாணவ-மாணவிகளின் கல்வி நலன் கருதி, ஒவ்வொரு ஆண்டும் பள்ளி மேலாண்மைக் குழு மூலம் தற்காலிக ஆசிரியர் நியமனம் செய்ய பள்ளிக் கல்வி ஆணையருக்கு அதிகாரம் அளித்தும் அவ்வாறு நியமனம் செய்யும்போது ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை அமைப்பின்படி (IFHRMS) அனுமதிக்கப்பட்ட பணியிடங்களில், IFHRMS-ன்படி நிரப்பப்பட்ட பணியிடங்களை தவிர்த்து மீதமுள்ள பணியிடங்களுக்கு மட்டுமே தற்காலிக ஆசிரியர் நியமனம் செய்யப்பட வேண்டும் என பள்ளிக்கல்வி ஆணையருக்கு அறிவுறுத்தியும் ஆணை வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து மேலே இரண்டாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில், தொழிற்கல்வி பாடத்திட்டம் மற்றும் பாடநூல்களை சீரமைத்து ஆணை வெளியிடப்பட்டது.

2. மேலே மூன்றாவதாகப் படிக்கப்பட்ட கடிதத்தில், பள்ளிக்கல்வி இயக்குநர், பள்ளிக்கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் 222 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் தொழிற்கல்விப் பிரிவுகள் ஆசிரியர் இன்றி மாணவர் சேர்க்கை உள்ள பள்ளிகள்/ நடைமுறையில் உள்ள தொழிற்கல்வி ஆசிரியர் இல்லாத பள்ளிகள் ஆகியவற்றிற்கு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் கீழ் முதற்கட்டமாக தொழிற்கல்வி பயிற்றுநர்களை வெளிமுகமை வாயிலாக (VTP) நியமனம் செய்யக் கோரப்பட்ட நிலையில், மத்திய அரசிடமிருந்து நிதி ஒதுக்கீடு பெறப்படாததால், தொழிற்கல்வி பயிற்றுநர்கள் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் வாயிலாக நியமனம் செய்ய சாத்திய கூறுகள் இல்லை என் தெரிவிக்கப்பட்டுள்ளதால், 2024-2025 ஆம் கல்வி ஆண்டில் தொழிற்கல்வி பாடப்பிரிவுகளில் பயிலும் மாணவர்களின் கல்வி நலன் கருதி சார்ந்த தொழிற்கல்வி பாடப்பிரிவுகளில் பணிபுரிய தகுதிவாய்ந்த தற்காலிக ஆசிரியர்களை (SMC வழியாக) நியமித்திட அனுமதியும் அவ்வாறு நியமனம் செய்யப்படும் தற்காலிக ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.15,000/- வீதம் 6 மாதங்களுக்கு (செப்டம்பர் 2024 முதல் பிப்ரவரி 2024 வரை) வழங்கிட அனுமதியும் கேட்டுக் கொண்டுள்ளார். ஆசிரியர் இன்றி தொழிற்கல்விப் பாடப்பிரிவுகள் இயங்கும் பள்ளிகளின் விவரம் மற்றும் தற்காலிகமாக நியமனம் செய்யப்படவுள்ள தொழிற்கல்வி ஆசிரியருக்கு தேவைப்படும் மதிப்பூதியம் ஆகியவற்றின் விவரங்களை பின்வருமாறு தெரிவித்துள்ளார்:-

3. பள்ளிக்கல்வி இயக்குநரின் கருத்துருவினை பரிசீலித்த அரசு, அதனை ஏற்று, பள்ளிக்கல்வி இயக்ககத்தின்கீழ் ஏற்படும் ஆசிரியர் காலிப் பணியிடங்களை நேரடி நியமனம்/ பதவி உயர்வு மூலம் நிரப்பும் வரை மாணவ மாணவிகளின் நலன் கருதி, ஒவ்வொரு ஆண்டும் பள்ளி மேலாண்மைக் குழு வாயிலாக தற்காலிக ஆசிரியர் நியமனம் செய்து கொள்ள ஏற்கனவே மேலே ஒன்றாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில் அனுமதி அளித்து ஆணை வெளியிடப்பட்டுள்ள நிலையில், தற்போது, 2024-2025-ம் கல்வியாண்டில், அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 222 தொழிற்கல்வி பிரிவுகளில் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நேரடி நியமனம்/ பதவி உயர்வு வாயிலாக நிரப்பும் வரை பள்ளி மேலாண்மைக் குழு வாயிலாக (SMC வழியாக) தகுதிவாய்ந்த பணியாளர்களை தற்காலிக தொழிற்கல்வி ஆசிரியர்களாக நியமனம் செய்திட அனுமதி வழங்கியும் மற்றும் அதற்கான நிதி ரூ.1,99,80,000/- (ரூபாய் ஒரு கோடியே தொண்ணூற்று ஒன்பது இலட்சத்து எண்பதாயிரம் மட்டும்) (ஒரு நபருக்கு மாதம் ஒன்றிற்கு ரூ.15,000/- வீதம் 222 நபர்களுக்கு 6 மாதங்களுக்கு= ரூ.1,99,80,000/-) ஒதுக்கீடு செய்தும் ஆணையிடுகிறது.

4. மேலே பத்தி-3-இல் ஒப்பளிப்பு செய்யப்பட்ட செலவினம் கீழ்க்காணும் கணக்குத் தலைப்பின் கீழ் பற்று வைக்கப்பட வேண்டும்:- பொதுக் கல்வி இடைநிலைப் பள்ளிகள் 02 இடைநிலைக் கல்வி மாநிலச் செலவினங்கள் - 109 அரசு - AA அரசு - இடைநிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் மற்றும் பணியாளர்களின் சம்பளம் - 333 - தொழில்முறை, சிறப்புப் பணிகளுக்குத் தொகை கொடுத்தல்-04 ஒப்பந்த ஊதியம் (IFHRMS த.தொ.கு. 2202-02-109-AA-33304)

5. மேலே பத்தி 3-இல் ஒப்பளிக்கப்பட்ட செலவினத்திற்கான நிதி ரூ.1,99,80,000/-, 2024-2025-ம் ஆண்டிற்கான திருத்த மதிப்பீடு/ இறுதி திருத்த நிதியொதுக்கத்தில் ஒதுக்கீடு செய்யப்படும். அத்தகைய ஒதுக்கீட்டினை எதிர்நேர்க்கி மேலே பத்தி 3-இல் ஒப்பளிக்கப்பட்ட செலவினத்தை மேற்கொள்ள பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இருப்பினும் சட்டமன்றத்தின் ஒப்புதலை பெறும் பொருட்டு. ஒரு சிறப்பு நிகழ்வாக கருத்தி (SI) இச்செலவினத்தை 2024-2025-ம் ஆண்டிற்கான துணை மதிப்பீடுகளில் சேர்க்கப்பட வேண்டும்.

இச்செலவினத்திற்கான உரிய கருத்துருவினை 2024- 25-ஆம் ஆண்டிற்கான திருத்த மதிப்பீடு/ இறுதி திருத்த நிதியொதுக்கம் மற்றும் துணை மதிப்பீடுகளில் சேர்க்கத் தக்க வகையில் உரிய விவரங்களுடன் நிதி (கல்வி-II/ வ.செ.பொ.-1)த் துறைக்கு அனுப்புமாறு பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்.

6. மேலும், இந்நேர்வுக்காக ஒவ்வொரு ஆண்டும் நிதி ஒதுக்கீடு கோரும்போது, அனைத்து மாவட்டங்களிலிருந்தும் பெறப்பட்ட செலவின (த.பி.பா)/- விவரங்கள், மீதமுள்ள தொகை, செலவினத்திற்கான பயனீட்டு சான்று, விரிவான கணக்கீட்டுத்தாள் மற்றும் உள்ளாட்சி துறையின் தணிக்கை அறிக்கை போன்ற அனைத்தும் உள்ளடக்கிய முழு விவரங்களுடன் அரசுக்கு கருத்துருவை சமர்ப்பிக்குமாறும் பள்ளிக்கல்வி இயக்குநர் கேட்டுக்கொள்ளப்படுகிறார்.

7. இவ்வாணை மின் கோப்பு எண்.efile/9068/ப.க.7(1)/2024, நாள்:10.12.2024-ல் நிதித்துறையின் இசைவு பெற்று வெளியிடப்படுகிறது. கூடுதல் நிதியொதுக்கப் பேரேடு எண்.1646 (ஆயிரத்து அறுநூற்று நாற்பத்து ஆறு) (IFHRMS ASL No.2024121646)

CLICK HERE TO DOWNLOAD G.O.Ms.No.267 - PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.