தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு 3 மாத ஊதிய ஆணை வெளியீடு! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, February 6, 2025

தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு 3 மாத ஊதிய ஆணை வெளியீடு!



3-month salary order issued for promoted secondary school teachers! - தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு 3 மாத ஊதிய ஆணை வெளியீடு!

2023-2024ஆம் கல்வியாண்டில் தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு 3 மாத ஊதிய ஆணை வெளியீடு!

School Education Department - Temporary Posts Sanctioned 60 (6 HM (HSS) + 54 PGT) Teaching posts Further Continuance Orders awaited from Government Certificate for the period of 3 months from 13-12-2024 Issued - Regarding.

Ref 1. G.O.(Ms). No.236, School Education (SE2(2)) Department,

2.

Dated.13.12.2023. Chennai 06, Office note of the Joint Director (Higher Secondary) School Education, R.C. No. 018710 / W4 / S1 / 2021, Dated.06.02.2025 ***** In the reference to the order cited, orders were issued towards continuance of certain 60 (6 HM (HSS) +54 PGT) teaching temporary posts as mentioned in the Annexure of the reference G.O cited (1) above, for the period of one year upto 12.12.2024.

2.Necessary proposal towards continuance of posts have been sent to the Government and orders are awaited in this regard.

3.As prescribed in paragraph 3 of G.O. (Ms) No.104, Finance [D] Department, dated 20.01.1974, the under mentioned Offices are requested to admit the pay bill for these 60 (6 HM (HSS) + 54 PGT) teaching temporary posts as mentioned in Annexure to a further period of 3 months w.e.f. 13-12- 2024. The details of these posts have been mentioned overleaf.

4.The concerned PAO / Treasury Officers are requested to admit the pay bill, as and when presented and pass necessary orders if they are found to be in order.

சுருக்கம் வரவு செலவு திட்ட நிதிநிலை அறிக்கையில் வெளியிடப்பட்ட அறிவிப்பு - 2023-24ஆம் கல்வியாண்டில் 6 அரசு உயர்நிலைப் பள்ளிகளை அரசு பள்ளிகளாகத் தரம் உயர்த்துதல் மற்றும் பணியிடங்கள் மேல்நிலைப் தோற்றுவித்தல் ஆணை வெளியிடப்படுகிறது.

பள்ளிக் கல்வித் (ப.க.2(2) ) துறை அரசாணை (நிலை) எண்.236 நாள் 13.12.2023

திருவள்ளுவர் ஆண்டு-2054 சோபகிருது வருடம், கார்த்திகை-27. படிக்கப்பட்டவை:-

1. பள்ளிக் கல்வி ஆணையர் / இயக்குநரின் கடித ந.க.எண். 018710/ டபிள்யு4/இ1/2021, நாள் 25.05.2022, 02.11.2022, 09.01.2023, 20.03.2023 மற்றும் 26.07.2023.

2. அரசாணை (நிலை) எண். 163 பள்ளிக் கல்வித் (அகஇ2) துறை, நாள் 13.09.2023.

ஆணை:

2021-2022-ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை திருத்த வரவு செலவு திட்ட நிதிநிலை அறிக்கையில் பள்ளிக் கல்வித் துறை தொடர்பான அறிவிப்புகளில் "22 பள்ளிகள் தரம் உயர்த்தப்படும்" என்ற அறிவிப்பும் ஒன்றாகும். 2. நிதிநிலை அறிக்கையில் வெளியிடப்பட்ட அறிவிப்பினை செயல்படுத்தும் பொருட்டு, மேலே இரண்டாவதாக படிக்கப்பட்ட அரசாணையில், 2023-2024-ஆம் கல்வி ஆண்டில் 4 ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தி ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன.

அரசு 3. மேலே முதலாவதாகப் படிக்கப்பட்ட கடிதங்களில், 15 உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்திடக் கோரி பள்ளிக் கல்வி ஆணையர் / இயக்குநரிடமிருந்து பெறப்பட்ட கருத்துருக்கள் அரசால் விரிவாக ஆய்வு செய்யப்பட்டது, ஆய்வுக்குப் பின்னர், மேற்படி 15 அரசு உயர்நிலைப் பள்ளிகளுள், மேல்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்துவதற்கு தேவையான நிபந்தனைகளை பூர்த்தி செய்த கீழ்கண்ட 6 உயர்நிலைப் பள்ளிகளை 2023-24ஆம் கல்வியாண்டில் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தி கீழ்கண்டவாறு அரசு ஆணையிடுகிறது:- (i). மேல்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்தப்படும் மேற்படி 6 அரசு யர்நிலைப் பள்ளிகளில் ரூ.36,900-1,35:100(ஊதிய நிலை-18) என்ற ஊதிய நிலையில் உள்ள உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பணியிடங்களை, ரூ.56,900-2,09,200 (நிலை- 23) என்ற ஊதிய நிலையில் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பணியிடங்களாக தரம் (upgraded) உயர்த்திட அனுமதி வழங்கப்படுகிறது. இவ்வாறு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்கள் தரம் உயர்த்தப்படுவதினால் ஆண்டொன்றிற்கு ஏற்படும் தொடர் உத்தேச செலவினத் தொகை ரூ.16,48,152/-( ரூபாய் பதினாறு இலட்சத்து நாற்பத்தி எட்டு ஆயிரத்து நூற்று ஐம்பத்து இரண்டு மட்டும்) ஒப்பளிப்பு செய்யப்படுகிறது.

(ii). மேல்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்தப்படும். மேற்படி 6 அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு, ரூ.36,900-1,35,100 (நிலை-18) என்ற ஊதிய நிலையில் ஒவ்வொரு பள்ளிக்கும் தலா 9 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் வீதம் (தமிழ், ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம், வரலாறு, பொருளியல் மற்றும் வணிகவியல் ஆகிய பாடங்களுக்கு) பாடவாரியாக ஆக மொத்தம் 54 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் (இவ்வரசாணையின் இணைப்பு-இல் உள்ளவாறு) தோற்றுவிக்கப்படுகிறது. இவ்வாறு புதிதாக தோற்றுவிக்கப்பட்ட 54 பணியிடங்களுக்கு நிகரான (EQUAL VALUE OF LIVE POST) 54 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் (இவ்வரசாணையின் இணைப்பு- 11இல் உள்ளவாறு) அரசுக்கு சரண் செய்யப்படுகிறது. மேலும் 6 அரசு உயர்நிலைப் பள்ளிகளை அரசு மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படுவதனால் ஆண்டொன்றிற்கு ஏற்படும் தொடர் உத்தேச செலவினத் தொகை ரூ.6,55,97,040/-( ரூபாய் ஆறு கோடியே ஐம்பத்து ஐந்து இலட்சத்து தொண்ணூற்று ஏழு ஆயிரத்து நாற்பது மட்டும்) ஒப்பளிப்பு செய்யப்படுகிறது.

ii) இவ்வாறு தோற்றுவிக்கப்படும் பணியிடங்களை தற்போது நடைமுறையில் உள்ள விதிமுறை / வழிமுறைகளின்படி நிரப்பிட வேண்டும்.

(iv) மேலே குறிப்பிடப்பட்டுள்ள பணியிடங்களில் பணியமர்த்தப்படுவோர் அப்பணியிடங்களுக்குரிய ஊதியம் மற்றும் ஏனைய படிகளை பெறத் தகுதியுடையவர்களாவர்.

4. பள்ளிகள் தரம் உயர்த்தப்படும் போது, 1:40 என்ற ஆசிரியர்-மாணவர் விகிதம் பின்பற்றப்படுதல், நடைமுறையில் உள்ள விதிமுறைகளை நிறைவு செய்தல் ஆகியவற்றை பள்ளிக் கல்வி இயக்குநர் உறுதி செய்ய வேண்டும். தரம் உயர்த்தப்படும் பள்ளிகளில் கூடுதல் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை உருவாக்கிட சட்டமன்ற / பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி உதவியை பெற முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட நெறிமுறைகளை

கண்காணிக்க பூர்த்தி செய்வது குறித்து சம்பந்தப்பட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு விரிவான ஆணைகளை வழங்கிடுமாறு பள்ளிக் கல்வி இயக்குநர் அறிவுறுத்தப்படுகிறார். இப்பள்ளிகள் 5. மேலே பத்தி 3இல் குறிப்பிடப்பட்டுள்ள தரம் உயர்த்தப்படும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் சம்பளம் குறித்த செலவினம் கீழ்க்கண்ட கணக்குத் தலைப்புகளின் கீழ் பற்று வைக்கப்பட வேண்டும்.-

1. அரசுப் பள்ளிகளுக்கான கணக்குத் தலைப்பு:-ரூ.16,48,152/- "2202-பொதுக்கல்வி- 02 இடைநிலைக் கல்வி- 109 அரசு இடைநிலைப் பள்ளிகள் மாநிலச் செலவினங்கள் AA அரசு இடைநிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் மற்றும் பணியாளர்களின் சம்பளம்- 01 சம்பளங்கள். (த.தொ.கு 2202-02-109 AA 30100)"

i. நகராட்சி, மாநகராட்சிப் ரூ.6,55,97,040/-

பள்ளிகளுக்கான கணக்குத் தலைப்பு:-- "2202-பொதுக்கல்வி - 02 இடைநிலைக் கல்வி- 109 அரசு இடைநிலைப் பள்ளிகள் மாநிலச் செலவினங்கள் - AB நகராட்சி மற்றும் மாநகராட்சி இடைநிலை / மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்குச் சம்பளங்கள்-01- சம்பளங்கள். (த.தொ.கு.2202-02-109-AB-30100)"

6. மேலே பத்தி 3 (i) மற்றும் (ii)-இல் ஒப்பளிக்கப்படும் செலவினத்திற்கான நிதியொதுக்கம் ரூ.16,48,152/- ரூ.6,55,97,040/- 2024-2025-ஆம் ஆண்டிற்கான திருத்திய மதிப்பீடு / இறுதி திருத்த நிதியொதுக்கத்தில் ஒதுக்கீடு செய்யப்படும். 7. புதிய மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் தத்தம் பள்ளியின் தலைமை அலுவலராக (Head of Office) கருதப்படுவர். அவர்களால் அளிக்கப்படும் சம்பளம் மற்றும் இதர செலவிற்கான பட்டியல்களை சரியாக இருக்கும் நிலையில் ஏற்றுக்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட சம்பளக் கணக்கு அலுவலர்கள் / கருவூல் அலுவலர்கள் / உதவிக் கருவூல அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.

8. இவ்வரசாணை நிதித் துறையின் அ.சா.கு.எண். பெற்ற அத்துறையின் 316/ADS(GKT)/மைம்ஆபி/நாள் 13.12.2023இல் இசைவுடன் வெளியிடப்படுகிறது. (PSL No. 202312 PSL O238)

//ஆளுநரின் ஆணைப்படி//

CLICK HERE TO DOWNLOAD HSS Pay Certificate PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.