Retirement of teachers due to old age in the middle of the academic year Appointment of teachers until the end of the academic year - Order containing guidelines
ஆசிரியர்கள் கல்வியாண்டின் இடையில் வயது முதிர்வின் காரணமாக ஓய்வு பெறுவது ஆசிரியர்களுக்குக் கல்வியாண்டு இறுதிவரை நியமனம் அளிப்பது - வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய ஆணை
பள்ளிக் கல்வி – மறுநியமனம் - அரசு / அரசு நிதி உதவி பெறும் தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் - உபரி ஆசிரியர்கள் கல்வியாண்டின் இடையில் வயது முதிர்வின் காரணமாக ஓய்வு பெறுவது ஆசிரியர்களுக்குக் கல்வியாண்டு இறுதிவரை நியமனம் அளிப்பது - வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய ஆணை வெளியிடப்படுகிறது .
அரசு / அரசு நிதி உதவி பெறும் தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் - உபரி ஆசிரியர்கள் கல்வியாண்டின் இடையில் வயது முதிர்வின் காரணமாக ஓய்வு பெறுவது ஆசிரியர்களுக்குக் கல்வியாண்டு இறுதிவரை நியமனம் அளிப்பது - வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய ஆணை வெளியிடப்படுகிறது.
பள்ளிக் கல்வி [பக5(2)]துறை அரசாணை (நிலை) எண்.261
நாள்: 20.12.2018. (திருவள்ளுவர் ஆண்டு 2049, மார்கழி 5.) படிக்கப்பட்டவை:-
1. அரசாணை (நிலை) எண். 249, பள்ளிக் கல்வித் துறை, நாள் 09.02.1959. 2. அரசாணை (நிலை) எண். 1643, பள்ளிக் கல்வித்(யு.2) துறை, நாள் 27.10.1988 3. அரசாணை (நிலை) எண். 170, பள்ளிக் கல்வித் (ப.க 5(2)) துறை, நாள் 23.10.2014. 4. W.P.(MD).No.19848/2018, மற்றும், W.M.P.(MD).No.17628/2018-ன்மீது சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் இடைக்கால தீர்ப்பு நாள் 19.09.2018.
5. பள்ளிக் கல்வி இயக்குநரின் கடித ந.க.எண்.59963/ சி5/இ3/2018, நாள் 11.09.2018 மற்றும் கடித ந.க.எண்.72033/டபள்யு.2/இ2/2018, நாள் 07.12.2018.
ஆணை:-
கல்வியாண்டின் இடையில் ஓய்வு பெறும் வயது அடையும் ஆசிரியர்களை பணி ஓய்வில் செல்ல அனுமதிக்கப்படின், கல்வியாண்டு முடியும் வரை அப்பணியிடம் பூர்த்தி செய்யப்படாத நிலையில், பாடம் போதிக்க ஆசிரியர்கள் இல்லாத நிலையினைத் தவிர்க்கவும், மாணவர்களின் கல்வி நலன் பெரிதும் பாதிப்புக்குள்ளாகும் நிலையினைத் தவிர்க்கவும், கற்பித்தல் பணி பாதிக்கக் கூடாது என்பதைக் கருதியும், ஆசிரியர்களுக்கு கல்வியாண்டின் இறுதிவரை மறுநியமனம் வழங்கலாம் என்பது அரசின் பொதுவான ஆணையாகும்.
2.மேலே ஒன்றில் படிக்கப்பட்ட அரசாணையில், கீழ்க்கண்ட முன்நிபந்தனைகளின் (Pre-requisite) அடிப்படையில் மறுநியமனம் வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டது:- ஆசிரியரின் பண்பு மற்றும் நடத்தை திருப்திகரமாக இருத்தல் வேண்டும்.
(ii) தொடர்ந்து பணிபுரியும் வகையில் உடற்தகுதி பெற்றிருக்க வேண்டும். மேற்கண்ட இரு நிபந்தனைகளுடன் பணியிலிருந்து ஓய்வு பெறும் நாளுக்கு ஓராண்டிற்கு முன்னர் ஆசிரியரின் ஓய்வூதிய கருத்துருக்கள் மாநிலக் கணக்காயருக்கு அனுப்பப்பட்டிருக்க வேண்டும் (Pre-requisite) என்று கூடுதலாக, மேலே இரண்டில் படிக்கப்பட்ட அரசாணையில், மூன்றாவது நிபந்தனையாக விதிக்கப்பட்டது. மேலும், 2003-ஆம் ஆண்டு முதல் பங்களிப்பு ஓய்வுத் திட்டம் நடைமுறைக்கு வந்ததை முன்னிட்டு 2003-ஆம் ஆண்டிற்குப் பிறகு நியமனம் பெற்று ஓய்வூதியத் திட்டத்தின் கீழ்வரும் ஆசிரியர்களுக்கு பணியிலிருந்து ஓய்வு பெறும் நாளுக்கு ஓராண்டிற்கு முன்னர் ஓய்வூதிய கருத்துருக்கள் மாநிலக் கணக்காயருக்கு அனுப்பப்பட்டிருக்க வேண்டும் என்ற நிபந்தனை பொருந்தாது என்பதால், அவர்களுக்கு அந்நிபந்தனையை தவிர்ப்பு வழங்கி அவர்களுக்கு மறுநியமனம் அளிக்கும் போது ஓய்வு பெறுவதற்கு முன்னர் கடைசியாக பெற்ற ஊதியமே (Pay last drawn at the time of retirement) மறுபணி காலத்திற்கான ஊதியமாக வழங்கப்படும் என மேலே மூன்றில் படிக்கப்பட்ட அரசாணையில் ஆணையிடப்பட்டது.
3.மேற்தெரிவிக்கப்பட்ட நிலையில், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில், மறுநியமனம் வேண்டி, தற்போது தொடரப்பட்டுள்ள W.P(MD)No.18902/ 2018 மற்றும் W.P(MD)No.17894/2018 ஆகிய இரு வழக்குகளின் விசாரணையின் போது, உபரிப் பணியிடங்களில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு மறுநியமனம் கல்வியாண்டு இறுதிவரை அளிப்பது குறித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை பின்வருமாறு ஆலோசனை வழங்கியுள்ளதாக அரசு வழக்குரைஞர் 06.09.2018 நாளிட்ட கடிதத்தில் தெரிவித்துள்ளார்:-
"Honourable Court directed to verify whether any G.O. is there to deny re-employment and if not, based on earlier G.O., the writ petition would be allowed. The Honourable Court was pleased to direct the Government to issue G.O. in this issue of re-employment. Therefore, it is advised to issue Government Order in the issue of surplus teachers need not be granted re-employment until the end of academic year." 4. மேலே பத்தி 3-ல், அரசு வழக்குரைஞர் தெரிவித்துள்ளவாறு, உபரியாக (Surplus) உள்ள ஆசிரியர்களுக்கு மறு நியமனம் வழங்குவது குறித்து, பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்கள், மேலே ஐந்தில் படிக்கப்பட்ட 11.09.2018 நாளிட்ட கடிதத்தில் கீழ்க்காணுமாறு கருத்துரு அனுப்பியுள்ளார்:-
ஏராளமாக உள்ள “தற்போது ஒவ்வொரு ஆண்டும் 1.8 நிலவரப்படி பணியாளர் நிர்ணயம் (Staff Fixation) செய்யும் போது Teacher-pupil ratio அடிப்படையில் ஆசிரியருடன் கண்டறியப்பட்டுள்ளதால், உபரி உபரி பணியிடங்கள் பணியிடங்களில் பணிபுரியும் ஆசிரியர்களால் மாணவர்களது கல்வி நலன் உபரியாக மேலும், எவ்விதத்திலும் பாதிப்புக்குள்ளாகாது. ஆசிரியர்களுக்கு தொடர்ந்து அக்கல்வியாண்டு முடியும் வரை மறு நியமனம் அளிப்பதால் அவர்களுக்கு போதிய பணிப்பங்கீடு (Period Allocation) இல்லாத நிலையில் மாணவர்களுக்கு எவ்வித கல்வி நலனும் அளிக்க வாய்ப்பில்லை, மாறாக அரசுக்கு நிதி இழப்பு ஏற்பட காரணமாகிவிடும். ஆகவே உபரி பணியிடங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் வயது முதிர்வின் காரணமாக ஓய்வு பெறும் பட்சத்தில் அவர்களின் ஓய்வு பெறும் நாள் அடிப்படையில் அம்மாத இறுதி நாளிலேயே ஓய்வு அளிக்கப்பட வேண்டுமென்றும், மறு நியமனம் கல்வியாண்டு இறுதி வரை அளித்திட தேவையில்லை”-என அரசாணை வழங்கிட பள்ளிக் கல்வி இயக்குநர் வேண்டியுள்ளார்.
5. பிரிதொரு வழக்கில், திருநெல்வேலி மாவட்டம், திருக்குறுங்குடி அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை தாவரவியல் பாட ஆசிரியர் திரு.த.பால்ராஜ் என்பவர் தொடர்ந்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் W.P.(MD). W.M.P.(MD).No.17628/2018-ல், 19.09.2018 நாளிட்ட No:19848/2018 மற்றும் W.M.P.(MD).No.17628/2018-ல், இடைக்கால தீர்ப்பில், உபரி ஆசிரியர்களுக்கு மறுநியமனம் வழங்குவது சார்பாக, அரசாணை வெளியிடும்போது, சில வழிகாட்டு நெறிமுறைகளைக் குறிப்பிட்டு, அதனை உள்ளடக்கி அரசாணை வெளியிடுமாறு ஆலோசனை வழங்கி மேலே நான்கில் படிக்கப்பட்ட தீர்ப்பில், மாண்புமிகு நீதிமன்றத்தால் பின்வருமாறு ஆணையிடப் பட்டுள்ளது:-
"11. The above guidelines, if forming part of the Government Order, shall take effect from the academic year 2019-2020 and this Court expects that the Government will issue orders at the earliest. The guidelines mentioned supra are only illustrative and it is open to the Government to incorporate such other conditions as may be required in the interest of student community and not in the interest of teachers.".
6. மேற்குறிப்பிட்ட, மாண்புமிகு நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட ஆலோசனைகளுக்கு பள்ளிக் கல்வி இயக்குநர், மேலே ஐந்தில் படிக்கப்பட்ட 07.12.2018 நாளிட்ட கடிதத்தில் கீழ்க்கண்டவாறு தனது கருத்தினை தெரிவித்துள்ளார்:- பணி
“பொதுவாக உபரிப் பணியிடங்களில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு அவர்கள் பணி ஓய்வு பெற்று அக்கல்வியாண்டு இறுதிவரை பணிநீட்டிப்பு வழங்கப்படின் அவ்வாசிரியர்களுக்கு கால அட்டவணைப்படி கற்பித்தல் வழங்கப்படுவதில்லை. எனவே அவர்கள் பணி ஓய்வுக்கு முன்னர் மேற்கொண்ட கற்பித்தல் பணியினைப் போன்று பணிநீட்டிப்புக் காலத்தில் மேற்கொள்ளாமையால் மாணவர்களின் கல்வித்திறன் எந்த விதத்திலும் பாதிக்காது என்பதால் உபரிப்பணியிடத்தில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்க வேண்டிய அவசியம் இல்லை என்ற விவரத்தினை தெரிவித்துள்ளார். மேலும் ஆசிரியர்கள் பதவி உயர்வு பெற்று உயர்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்/மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர் பதவிக்கு இணையான நேர்முக உதவியாளர்/உதவித் திட்ட அலுவலர் போன்ற நிர்வாகப் பொறுப்புள்ள பதவிக்கு வரும்போது, அவர்களால் மாணவர்களது கல்வி நலன் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்பதை கருத்தில் கொண்டு கல்வியாண்டு இறுதிவரை பணிநீட்டிப்பு வழங்கப்படுவது இல்லை. அதனால் தீர்ப்பாணையில் தெரிவித்துள்ளவாறு உபரி ஆசிரியர்களுக்கு நிர்வாகப் பொறுப்புள்ள அலுவலகம் சார்ந்த பணிகள் வழங்கிட விதிகளில் வழிவகை இல்லை என்றும், மேலும் இவ்வாறான ஆசிரியர்களுக்கு நிர்வாகப்பணி அளிக்கப்படுமேயானால் நிர்வாகத்தில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட வழி ஏற்படும் என்ற விவரத்தினையும் தெரிவித்துள்ளார். சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கு எண்.W.P(MD).No. 19848 of 2018 and W.M.P(MD).No.17628/2018-ன்மீது 19.09.2018 அன்று வழங்கப்பட்ட தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகள் உள்ளடக்கிய அரசாணையினை பிறப்பிக்குமாறும், 2019-2020-ம் கல்வி ஆண்டு முதல் அதனை நடைமுறைப்படுத்தலாமெனவும் கேட்டுக் கொண்டு கருத்துருவை பள்ளிக் கல்வி இயக்குநர் அனுப்பி வைத்தார்.
7. இந்நிலையில், பள்ளிக் கல்வி இயக்குநரின் 11.09.2018 மற்றும் 07.12.2018 நாளிட்ட இரு கருத்துருக்களையும், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அளித்த ஆலோசனைகள் அடிப்படையில், அரசு கவனமுடன் பரிசீலித்தது. அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் கல்வியாண்டின் இடையில் ஓய்வுபெறும் ஆசிரியர்களுக்கு மறு நியமனம் வழங்குவது குறித்து கீழ்க்கண்ட ஒருங்கிணைந்த வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற அரசு ஆணையிடுகிறது:-
கல்வியாண்டின் இடையில் வயது முதிர்வு காரணமாக ஆசிரியர்கள் பணியிலிருந்து ஓய்வுபெறும்போது ஆசிரியரின்றி மாணவர்களின் கல்வி நலன் பாதிக்கக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு அத்தகைய ஆசிரியர்களுக்கு கீழ்க்கண்ட நிபந்தனைகளின் அடிப்படையில் மறுநியமனம் வழங்கலாம்:-
> ஆசிரியரின் பண்பு மற்றும் நடத்தை திருப்திகரமாக இருத்தல் வேண்டும். > தொடர்ந்து பணிபுரியும் வகையில் உடற்தகுதி பெற்றிருக்க வேண்டும். மாணவர்களின் நலன் கருதி அரசின் கொள்கை முடிவுப்படி, 58 வயது நிறைவு செய்த ஆசிரியர்கள், அக்கல்வியாண்டு முடியும் வரை பணிக்காலம் மறுநியமனம் செய்யும் போது உபரி ஆசிரியர் பணியிடங்கள் இருக்கும் போது மறு நியமனம் செய்யக் கூடாது. மாணவர்களின் நலன் கருதி, உபரிப் பணியிடம் அல்லாத ஆசிரியர்களை மறு நிர்ணயம் செய்யக் கருதும்போது, அரசாணை (நிலை) எண்.170, பள்ளிக் கல்வித் (ப.க.5-2) துறை, நாள் 23.10.2014-ல் ஆணையிடப்பட்டவாறு, கல்வியாண்டின் இடையில், ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு விருப்பத்தின் அடிப்படையில் மறு நியமனம் வழங்கப்படும் உபரிப் பணியிடம் அல்லாத ஆசிரியர்களுக்கும் ஓய்வு பெறுவதற்கு முன்னர் கடைசியாக பெற்ற ஊதியத்தையே மறு நியமனம் ஊதியமாக வழங்கவேண்டும்.
உபரிப் பணியிடங்களைப் பொறுத்தவரையில் உயர்நிலைப் பள்ளிகள் சார்பாக மாவட்டக் கல்வி அலுவலராலும், மேல்நிலைப் பள்ளிகளைப் பொறுத்தவரையில் முதன்மைக் கல்வி அலுவலராலும், தொடக்கப் பள்ளிகள் சார்பாக, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலராலும், சராசரி மாணவர் எண்ணிக்கையின் அடிப்படையில் அவ்வப்போது வெளியிடப்படும் அறிவுரைகளுக்கிணங்க பணியாளர் நிர்ணய அறிக்கையினை ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 30-ம் தேதிக்குள் தயார் செய்யப்பட வேண்டும்.
கூட்டு மேலாண்மைப் பள்ளிகளைப் பொறுத்தவரையில் அதன்கீழ் செயல்படும் அனைத்து பள்ளிகளும் ஒரே அலகாகக் கருதப்பட வேண்டும். மேலும் அவற்றில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப ஆசிரியர் மாணவர் விகிதாச்சாரத்தைக் கணக்கிட்டு உபரி ஆசிரியர்கள் பணியிடம் இருப்பின் அதனை அப்பள்ளி மேலாண்மைக்குத் தெரிவிக்கப்பட வேண்டும்.
உபரி (vi) அவ்வாறு கூட்டு மேலாண்மைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப பணியாளர் நிர்ணய அறிக்கையினைக் கணக்கிட்டு கூடுதலாகப் பணிபுரிந்து வரும் ஆசிரியர் பணியிடங்களை அம்மேலாண்மையின் கீழ் வரும் பிற பள்ளிகளில் பணிநிரவல் மூலம் உரிய அலுவலரால் நிரவல் செய்துவிட்டு அதன் அறிக்கையினை சார்ந்த அலுவலருக்கு அனுப்பி வைக்க அறிவுரை வழங்கப்படவேண்டும். மாவட்டக் கல்வி அலுவலர், முதன்மைக் கல்வி அலுவலர், மற்றும், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களால் தயாரிக்கப்பட்ட பணியாளர் நிர்ணய அறிக்கையினை அக்டோபர் 31-ஆம் தேதிக்குள் முறையே பள்ளிக் கல்வி இயக்குநர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநருக்கு சமர்ப்பிக்க வேண்டும். (viii) அவ்வாறு கீழ்நிலை அலுவலர்களால் சமர்ப்பிக்கப்படும் பணியாளர் நிர்ணய அறிக்கையில் உபரி எனத் தெரிவிக்கப்பட்டுள்ள பள்ளிகளைக் கண்டறிந்து, அப்பள்ளியில் உபரியாகப் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களை தேவையுள்ள பள்ளிகளுக்கு பணியிடத்துடன் மாற்றம் செய்வது குறித்து உதவிபெறும் பள்ளிகளைப் பொறுத்தவரையில் சார்ந்த பள்ளியின் மேலாளர்/நிர்வாகிக்கு அறிவிக்கை மூலம் அனுப்பி 2 மாத காலத்திற்குள் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். அதாவது ஒவ்வொரு கல்வியாண்டும் டிசம்பர் 31-க்குள் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
அவ்வாறு சார்ந்த ஆசிரியர் பணிபுரியும் பள்ளியில் உபரி எனக் கண்டறியப்பட்டு உரிய அலுவலரால் பணிநிரவல் செய்து ஆணை வழங்கப்பட்டவுடன், அடுத்த கல்வியாண்டு தொடங்கும் போதோ அல்லது அதற்கு முன்னரோ பணிநிரவல் செய்து ஆணை வழங்கப்பட்ட பள்ளியில் பணியில் சேர வேண்டும். தொடர்புடைய பள்ளியில் எண்ணிக்கை . பின்வரும் ஆண்டுகளில் மாணவர்களின் அதிகரிக்கும் பட்சத்தில் அந்த மேலாண்மையானது தொடர்புடைய அலுவலர்களுக்கு விண்ணப்பித்து உரிய ஆய்விற்குப்பின் அந்தப் பணியிடத்தை மீண்டும் பழைய பள்ளிக்கே அடுத்த கல்வியாண்டு தொடங்கும்போதோ அல்லது அதற்கு முன்னரோ பெற்றுக்கொள்ளலாம்.
அரசு உதவிபெறும் பள்ளிகளில் மானியம் தொடர்ந்து வழங்கி வரும் நிலையில், உபரியாகக் கண்டறியப்பட்ட ஆசிரியர்களை வேறு பள்ளிக்கு மாற்றம் செய்ய அப்பள்ளி நிர்வாகம் மறுத்தால், அப்பள்ளிக்கு மான்யம் நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். மேலும், உபரியாகக் கண்டறியப்பட்ட ஆசிரியர் பணியிடத்துடன் பணிநிரவல் செய்து, தேவையுள்ள பள்ளிக்கு மாறுதல் அளித்து, பணியிலிருந்து விடுவிக்கப்பட்டபின், அவ்வாசிரியர் பணி நிரவல் செய்த பள்ளிக்கு மாறுதலில் செல்ல மறுத்தால், அவ்வாறு பணியிலிருந்து விடுவிக்கப்பட்ட நாளிலிருந்து உபரியாகப் பணிபுரிந்த நாட்களுக்கு பணப்பலன்கள் மறுக்கப்பட வேண்டும். மேற்தெரிவிக்கப்பட்ட நெறிமுறைகள் 2019-20-ஆம் கல்வியாண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும்.
CLICK HERE TO DOWNLOAD SUPER ANNUATION GO 262 - Date : 20.12.2018 - PDF
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.