பள்ளிகளுக்கான இணைய சேவை கட்டணம் - ஏப்ரல் 2025 முதல் SPD அலுவலகம் நேரடியாக கட்டும் என அறிவிப்பு. - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, February 22, 2025

பள்ளிகளுக்கான இணைய சேவை கட்டணம் - ஏப்ரல் 2025 முதல் SPD அலுவலகம் நேரடியாக கட்டும் என அறிவிப்பு.



பள்ளிகளுக்கான இணைய சேவை கட்டணம் - ஏப்ரல் 2025 முதல் SPD அலுவலகம் நேரடியாக கட்டும் என அறிவிப்பு - Internet service fees for schools - announced that the SPD office will pay directly from April 2025.

BSNL வழங்கும் இணைய சேவையை அனைத்து அரசுப் பள்ளிகளும் பயன்படுத்த SPD உத்தரவு - ஏப்ரல் 2025 முதல் SPD அலுவலகம் நேரடியாக BSNL நிறுவனத்திற்கு இணைய சேவை கட்டணத்தை வழங்கும் எனவும் அறிவிப்பு!

2025 ஏப்ரல் முதல் இணைய சேவைக்கான மாதாந்திர சேவை கட்டணத்தை மாநிலத் திட்ட இயக்ககம் மூலமாக ( Centralized Bill Payment ) BSNL நிறுவனத்திற்கு நேரடியாக செலுத்துவதற்கு எதுவாக முதன்மைக் கல்வி அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பின்வருமாறு பார்வை 1ன் படி BSNL நிறுவனம் மாதாந்திர இணைய சேவைக் கட்டணத்தை பின்வரும் அட்டவணையின் படி அரசு பள்ளிகளுக்கு வழங்க ஒப்புதல் கடிதம் வழங்கியுள்ளது.

மேற்குறிப்பிட்ட மறுநிர்ணயம் செய்யப்பட்ட இணைய சேவை திட்டம் கீழுள்ள அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் பயன்பாட்டுக்கு வரும் என்பதை அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்குமாறு முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்

பார்வை 1 மற்றும் 2 -ன் படி, இணைய சேவை பெற தகுதி வாய்ந்த அரசு தொடக்க. நடுநிலை. உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் இணைய சேவைக்கான மாதாந்திர சேவை கட்டணம் பிப்ரவரி 2025 முதல் பின்வரும் அட்டவணையின் படி விடுவிக்கப்படும். இது சார்ந்த விவரங்களை அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் உடனடியாக கல்வி அலுவலர்களும் வழங்கிடுமாறு அனைத்து கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

2025 ஏப்ரல் முதல் இணைய சேவைக்கான மாதாந்திர சேவை கட்டணத்தை மாநிலத் திட்ட இயக்ககம் மூலமாக (Centralized Bill Payment) BSNL நிறுவனத்திற்கு நேரடியாக செலுத்துவதற்கு ஏதுவாக முதன்மைக் கல்வி அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பின்வருமாறு: BSNL இணைய சேவை பெற்று இதுவரை அதற்கான தரவுகள் மற்றும் BSNL Telephone Number யை பள்ளி EMIS Login வாயிலாக பதிவேற்றம் செய்யாத மீதமுள்ள அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் உடனடியாக இதற்கான தகவல்களை வழங்க தேவையான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் சில பள்ளிகள் BSNL நிறுவனத்தின் Samagra Shiksha திட்டம் தவிர பிற திட்டங்களின் மூலம் இணைய சேவை பெற்று பயன்படுத்தி வருகிறது. இவ்வகை பள்ளிகளின் சேகரித்து தகவல்களை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் eoffice@tnschools.gov.in 6r6oTM LOGOT அஞ்சல் முகவரிக்கு 25.02.2025 ஆம் தேதிக்குள் அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவை தவிர பிற இணைய சேவை நிறுவனங்கள் மூலமாக இணைய சேவை பெற்றுள்ள அரசு பள்ளிகள் BSNL நிறுவனத்தின் Samagra Shiksha திட்டத்தின் மூலம் இணைய வசதியை ஏற்படுத்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

நகல் :

இந்நாள்வரை இணைய சேவை ஏற்படுத்தாமல் இருக்கும் அரசு பள்ளிகள் BSNL நிறுவனத்தின் Samagra Shiksha திட்டத்தின் மூலம் இணைய வசதியை ஏற்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ளுமாறு முதன்மை கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இணைப்பு : BSNL கடித நகல்.

CLICK HERE TO DOWNLOAD SPD - Internet Monthly Rent PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.