How much can you save with no income tax up to Rs. 12 lakh? - ரூ.12 லட்சம் வரை வருமான வரி இல்லாததால் எவ்வளவு சேமிக்க முடியும்?
மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட வருமான வரி சலுகை மூலம் ஆண்டுக்கு ரூ. 12 லட்சம் வரை வருமான வரி இல்லை. இதுதவிர, நிலையான வருமான வரி விலக்கு ரூ.75 ஆயிரம் உள்ளது. எனவே, சம்பளம் பெறுவோர் ஆண்டுக்கு ரூ.12 லட்சத்து 75 ஆயிரம் வரை வருமான வரி செலுத்தத் தேவையில்லை. வரி செலுத்துவோர் ஆண்டுக்கு ரூ.12 லட்சம் வரை வருமானம் இருந்தால் அவர்கள் ரூ.80,000 அளவுக்கு பலன் பெறுவர். இது தற்போதுள்ள விகிதங்களின்படி செலுத்த வேண்டிய வரியில் 100 சதவீதம் ஆகும்.
ஆண்டுக்கு ரூ.18 லட்சம் வரை வருமானம் பெறுவோர் ரூ.70,000 வரை வரியை சேமிக்க முடியும். இது தற்போதைய வரி விகிதத்தில் 30 சதவீதம் ஆகும். ரூ. 25 லட்சம் வரை வருமானம் உள்ள ஒருவர் ரூ.1,10,000 அளவுக்கு வரி பலன் கிடைக்கும். இது தற்போதைய வரியில் 25 சதவீதம் ஆகும்.
Increase in income tax ceiling! How will it benefit? - வருமான வரி உச்ச வரம்பு அதிகரிப்பு!
எவ்வாறு பயனளிக்கும்?
மாதச் சம்பளம் மட்டுமல்லாமல் மூலதன ஆதாயங்கள் உள்ளிட்ட இதர வருவாய்கள் மூலம் ஈட்டும் வருமானத்துக்கான வரி விகிதங்கள்
ஆண்டு வருமானம் ரூ. 4 லட்சம் வரை - வருமான வரி கிடையாது
ரூ. 4 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரை - 5% வருமான வரி
ரூ. 8 லட்சம் முதல் ரூ. 12 லட்சம் வரை - 10% வரி
ரூ. 12 லட்சம் முதல் ரூ. 16 லட்சம் வரை - 15% வரி
ரூ. 16 லட்சம் முதல் ரூ. 20 லட்சம் வரை - 20% வரி
ரூ. 20 லட்சம் முதல் ரூ. 24 லட்சம் வரை - 25%
ரூ. 24 லட்சத்துக்கு மேல் - 30% வரி செலுத்த வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ரூ.12 லட்சம் வரை வருவாய் ஈட்டுவோருக்கு ரூ.80 ஆயிரம் வரை வரி மிச்சமாகும். மாத வருவாய் ஈட்டுவோராக இருந்தால், மொத்த வரியும் அவர்களுக்கு மிச்சமாகும்.
ஒருவேளை ரூ.12 லட்சத்துக்கும் மேல் வருவாய் ஈட்டுபவர்களாக இருந்தால்,அவர்களது வருவாயின் அளவுக்கு ஏற்ப, வரி விகிதம் பொருந்தும்.
ரூ.12 லட்சம் வருவாய் ஈட்டுபவர்கள் மாதம் ரூ.7000 மிச்சம் பிடிக்கலாம்.
ரூ.18 லட்சம் வருவாய் ஈட்டுபவர்களுக்கு ரூ.6,000 வரை சேமிக்கலாம், ரூ.25 லட்சம் வரை வருவாய் ஈட்டுபவர்கள் கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு ரூ.9,000 வரை சேமிக்கலாம் என்று கூறப்படுகிறது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.