Sexual harassment - mental distress - Government school principal dies of heart attack! - பாலியல் புகார் - மன உளைச்சல் - அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர் மாரடைப்பால் மரணம்!
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி பகுதியில் அரசுப்பள்ளி தலைமை ஆசிரியராக சேட் ஆயூப்கான் என்பவர் பணியாற்றி வந்தார். இவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவிகளின் பெற்றோர், குழந்தைகள் நல அலுவலகம் மற்றும் காவல்துறைக்கு புகார் அளித்தனர்.
அதன்பேரில், கீழக்கரை அனைத்து மகளிர் போலீசார், வட்டார கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இதனால் அவர் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில், தலைமை ஆசிரியர் சேட் அயூப்கான் மாரடைப்பால் உயிரிழந்தாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். சடலத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.