பிப்.10 உள்ளூர் விடுமுறை - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு - Feb. 10 local holiday - District Administration announcement.
நாகை மாவட்டத்திற்கு வரும் பிப்ரவரி 10ஆம் தேதி திங்கள் அன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் நாகை நீலாயதாச்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இது ஆண்டுதோறும் கோலாகலமாக கொண்டாடப்படும்.
இதையொட்டி நாகை மற்றும் திருமருகல் ஒன்றியத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மட்டும் வரும் பிப்ரவரி 10ஆம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. அதேசமயம் 11 மற்றும் 12 ஆகிய வகுப்புகளுக்கான அரசு செய்முறை தேர்வுகள் வழக்கம் போல் நடைபெறும்.
இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் வரும் பிப்ரவரி 15ஆம் தேதி சனிக்கிழமை அன்று வேலை நாளாக இருக்கும். இதுதொடர்பான அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் வெளியிட்டுள்ளார்.
விடுமுறை
பேரூர் தாலுகாவில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு (பிப்ரவரி 10ஆம் தேதி) உள்ளூர் விடுமுறை அறிவித்து கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.