ஆசிரியர்கள் 150 பேர் வரை டிஸ்மிஸ்? - புற சூழலுக்கு ஆட்படாமல் நடவடிக்கை மேற்கொள்ள ஆசிரியர்கள் கோரிக்கை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, February 22, 2025

ஆசிரியர்கள் 150 பேர் வரை டிஸ்மிஸ்? - புற சூழலுக்கு ஆட்படாமல் நடவடிக்கை மேற்கொள்ள ஆசிரியர்கள் கோரிக்கை



ஆசிரியர்கள் 150 பேர் வரை டிஸ்மிஸ்? - புற சூழலுக்கு ஆட்படாமல் நடவடிக்கை மேற்கொள்ள ஆசிரியர்கள் கோரிக்கை

பள்ளிகளில் பாலியல் புகார் - 150 பேர் வரை டிஸ்மிஸ்? பாலியல் வழக்குகளில் சிக்கிய ஆசிரியர்கள் குற்றம் நிரூபிக்கப்பட்டால் டிஸ்மிஸ்

2012 முதல் இதுவரை 20க்கும் அதிகமான ஆசிரியர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர் தற்போது 300 வழக்குகள் நிலுவையில் உள்ளன

இதில் குற்றம் நிரூபிக்கப்படும் வழக்குகளில் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள், பணியாளர்கள் பணியில் இருந்து நீக்கப்படுவார்கள்

இவ்வாறான தகவல்கள் செய்தித்தாள்களும் பல்வேறு வகையான ஊடகங்களிலும் வெளி வருகின்றன. இவ்வாறான புகார்களில் எவ்விதமான புற சூழலுக்கு ஆட்படாமல் நடுநிலைமையுடன் அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று ஆசிரியர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்

பல்வேறு வகையான பாலியல் புகார்களில் உண்மைக்கு மாறான தகவல்கள் இருக்கக்கூடும் என்றும் ஆசிரியர்கள் தரப்பில் கூறப்படுகிறது எனவே அரசு இவ்வாறான புகார்களை ஆசிரியர் சமுதாயத்தின் மீது திணிக்கப்படும்போது அதை நேர்மையாகவும் நடுநிலைமையுடனும் கையாள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்படுகிறது

புகார்கள் உண்மையாக இருக்கும் பட்சத்தில் அரசு மேற்கொள்ளும் எவ்விதமான நடவடிக்கைக்கும் அனைத்து ஆசிரியர்களும் ஆதரவளிப்பர் என்றும் அவ்வாறான ஆசிரியர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க ஆசிரியர் தரப்பில் கூறப்படுகிறது.

பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தகவல்

பாலியல் புகாரில் சிக்கி குற்றச்சாட்டுக்கு நிரூபிக்கப்படும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள், பணியாளர்கள் உடனடியாக டிஸ்மிஸ் செய்யப்படுவார்கள் என்று பள்ளிக்கல்வித்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாலியல் புகாரில் எத்தனை ஆசிரியர்கள் உள்ளனர்? அவர்கள்மீது என்ன நடவடிக்கை? விரிவான தகவல்களோடு இணைகிறார் செய்திளார் சங்கரன்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.