பிஇ-பிஎட் முடித்தவர்கள் பட்டதாரி ஆசிரியராக பணிபுரியலாம்: உயா்கல்வித் துறை அரசாணை வெளியீடு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, February 27, 2025

பிஇ-பிஎட் முடித்தவர்கள் பட்டதாரி ஆசிரியராக பணிபுரியலாம்: உயா்கல்வித் துறை அரசாணை வெளியீடு



PE-B.Ed graduates can work as graduate teachers: Higher Education Department issues government order பிஇ-பிஎட் முடித்தவர்கள் பட்டதாரி ஆசிரியராக பணிபுரியலாம்: உயா்கல்வித் துறை அரசாணை வெளியீடு

பி.இ., பட்டத்துடன் பி.எட்., முடித்தவர்கள் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியராக பணிபுரிவதற்கு தகுதியானவர்கள் என்று உயா்கல்வித் துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து உயா்கல்வித் துறைச் செயலா் கே.கோபால் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:

கொல்கத்தாவில் உள்ள மேற்கு வங்க தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் பி.டெக்., எலக்ட்ரிக்கல் பொறியியல் படிப்பு வேலைவாய்ப்பு வகையில் பி.இ., எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் படிப்புக்குச் சமமானது.

இதேபோல், பி.இ., படிப்பில் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டம் பெற்றவர்கள் பி.எட்., (இயற்பியல் அறிவியல்) முடித்திருந்தால் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியராக( இயற்பியல்) பணிபுரியலாம். அந்த ஆசிரியர்கள் பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடங்களை பயிற்றுவிக்க தகுதியானவர்களாவர், என்று அதில் கூறப்பட்டுள்ளது. அரசு வேலை வாய்ப்புகளில் எந்தெந்த பட்டப்படிப்புகள், எந்த பட்டப்படிப்புக்கு இணையானது என்பது குறித்து, இணை கல்விக்குழு கூடி ஆராய்ந்து அதற்கான உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. அந்த வகையில் இணை கல்விக்குழு கூட்டம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் அடிப்படையில், உயர்கல்வித்துறை அரசாணை ஒன்றை தற்போது பிறப்பித்துள்ளது.

அந்த அரசாணையில் கூறியிருப்பதாவது:- கொல்கத்தா மாநிலம் மேற்கு வங்க பல்கலைக்கழகத்தில் கற்பிக்கப்படும் பி.டெக் எலக்ட்ரிக்கல் என்ஜினீயரிங் பட்டப்படிப்பு, அரசு வேலை வாய்ப்புகளில், பி.இ., எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங் பட்டப்படிப்புக்கு இணையானது.

அதேபோல், பி.இ. பட்டப்படிப்புடன் பி.எட் (இயற்பியல், அறிவியல்) முடித்தவர்கள், பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையில் பட்டதாரி ஆசிரியர் (இயற்பியல்) பணிக்கு தகுதியுடைவர்கள் ஆவார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.