Teachers' salaries in government-aided schools should not be suspended - DEE Proceedings (23-04-2015) - அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்களின் சம்பளத்தை நிறுத்தம் செய்யக் கூடாது - DEE Proceedings (23-04-2015)
அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பள்ளி குழு மற்றும் பள்ளியின் அங்கீகாரம் புதுப்பித்தலுக்கு ஏற்படும் கால தாமதத்திற்கு பள்ளியில் பணி புரியும் ஆசிரியர்களின் சம்பளத்தை நிறுத்தம் செய்யக் கூடாது - தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண் : 9533 / எச்2 / 2015, நாள் : 23-04-2015
தொடக்கக் கல்வித்துறைக்குட்பட்ட நிதி உதவி பெறும் பள்ளிகளில் பள்ளிக்குழு புதுப்பித்தல் மற்றும் அங்கீகாரம் பெறப்படாமை சார்பாக ஏற்படும் காலதாமதத்தினை குறிப்பிட்டு நிதிஉதவி பெறும் சில பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஊதியம் நிறுத்தம் செய்யப்படுவதாக புகார் பெறப்பட்டுள்ளது. நிதி உதவி பெறும் பள்ளிகளில், பள்ளிக்குழு புதுப்பித்தல் சார்பாக ஏற்படும் காலதாமதம் நிர்வாகியை சார்ந்ததாகும். இதற்கு ஆசிரியர்கள் எவ்விதத்திலும் பொறுப்பேற்க நேரிடாது. எனவே, மேற்காணும் காலதாமதங்கள் காரணமான சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்தின் மீதோ/நிர்வாகியின் மீதோ தனியார் பள்ளிகள் சட்டம் 1973 விதிகள் 1974ல் தெரிவித்துள்ள வழிகாட்டுதல்படி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் அல்லது நேரடி மான்யத்திற்கு உட்படுத்தப்பட வேண்டும். பள்ளிக்குழு புதுப்பித்தல் காலதாமதம் தொடர்பாக ஆசிரியர்களின் ஊதியத்தை மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்/உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் நிறுத்தம் செய்யக் கூடாது
இச் சுற்றறிக்கையினை உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு சார்பு செய்து ஒப்புதல் பெற்று அதனை கோப்பில் வைத்துக் கொள்ள வேண்டுமென மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
Click Here to Download - Aided School Teachers Salary - DEE Proceedings (23-04-2015)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.