ஆதிதிராவிடர் மாணாக்கரின் கல்வி இறுதி ஆண்டில் அவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான “பணவுறுதி ஆவணம்” (Skill Vouchers) வழங்க “உயர் திறன் ஊக்கத்திட்டம்“ - ஆணை வெளியீடு. - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, January 30, 2025

ஆதிதிராவிடர் மாணாக்கரின் கல்வி இறுதி ஆண்டில் அவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான “பணவுறுதி ஆவணம்” (Skill Vouchers) வழங்க “உயர் திறன் ஊக்கத்திட்டம்“ - ஆணை வெளியீடு.



"High Skill Incentive Scheme" - Order issued to provide "Skill Vouchers" for skill development training to Adi Dravidar students in their final year of education. - ஆதிதிராவிடர் மாணாக்கரின் கல்வி இறுதி ஆண்டில் அவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான “பணவுறுதி ஆவணம்” (Skill Vouchers) வழங்க “உயர் திறன் ஊக்கத்திட்டம்“ - ஆணை வெளியீடு.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் – கல்வி உதவித்தொகை – 2024-2025–ஆம் ஆண்டிற்கான அறிவிப்புகள் - மாண்புமிகு அமைச்சர் ஆதிதிராவிடர் நலன் அவர்களின் அறிவிப்பு – உயர்கல்வியில் சிறந்து விளங்கும் ஆதிதிராவிடர் / பழங்குடியினர் / கிறித்துவ ஆதிதிராவிடர் மாணாக்கரின் கல்வி இறுதி ஆண்டில் அவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான “பணவுறுதி ஆவணம்” (Skill Vouchers) வழங்க “உயர் திறன் ஊக்கத்திட்டம்“ - ஆணை வெளியிடப்படுகிறது. மேற்படி அரசாணையின் இணைப்பில், பத்தி 7-இல் உள்ள, III. IV. கட்டண சேர்க்கை பெறப்பட்டபின், அப்பயிற்சிக்கான விவரங்கள் மற்றும் நிறுவனத்தின் வங்கி கணக்கு விவரங்களைப் பயிற்சி நிறுவனத்திடமிருந்து பெற்று ஆதிதிராவிடர் நல இயக்குநருக்கு இணையதளத்திலும் பதிவேற்றம் செய்ய வேண்டும். பயிற்சி நிறுவனத்தின் கட்டண விவரங்கள் மற்றும் வங்கி கணக்கு விவரங்கள் இணையதளத்தில் பெறப்பட்டவுடன், அவ்விவரங்கள் ஆதிதிராவிடர் நல இயக்குநரகத்தில் சரிபார்க்கப்பட்டு, மாணவரின் பயிற்சிக்கானக் கட்டணங்கள் பயிற்சி நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும்.

என்ற சொற்றொடர்களுக்கு பதிலாக பின்வருமாறு படிக்கப்பட வேண்டும்.

2 III. சேர்க்கை விவரங்களை அப்பயிற்சிக்கான பெறப்பட்டபின், பயிற்சி நிறுவனத்திடமிருந்து கட்டண பெற்று ஆதிதிராவிடர் நல இயக்குநருக்கு இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். IV. பயிற்சி நிறுவனத்தின் சேர்க்கை மற்றும் கட்டண விவரங்கள் இணையதளத்தில் பெறப்பட்டவுடன், அவ்விவரங்கள் ஆதிதிராவிடர் நல இயக்குநரகத்தில் சரிபார்க்கப்பட்டு, மாணவரின் பயிற்சிக்கானக் கட்டணங்கள் மாணவரின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும் (Direct Benefit Transfer).

👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼

CLICK HERE TO DOWNLOAD PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.