பிளஸ் 2 செய்முறை தேர்வு பள்ளிகளில் ஆயத்தப்பணி Plus 2 practical exam preparation work in schools
பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறைத்தேர்வுகள், பிப்., முதல் வாரத்தில் துவங்குகிறது.
பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச், 3ல் துவங்கி, 25ம் தேதி வரை நடக்கிறது. முன்னதாக செய்முறைத்தேர்வை பிப்., முதல் வாரம் துவங்க தேர்வுத்துறை இயக்குனரகம் ஆயத்தமாகியுள்ளது. அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள செய்முறைத் தேர்வு அட்டவணையில், பிப்., 7 முதல், 14க்குள் பிளஸ் 2 செய்முறைத் தேர்வு நடத்தி முடிக்க வேண்டும். பிப்., 15 முதல், 21க்குள், பிளஸ் 1 வகுப்புக்கும், பிப்., 22 முதல் 28ம் தேதிக்குள் பத்தாம், வகுப்புக்கும் செய்முறைத் தேர்வு நடத்தி முடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
செய்முறைத் தேர்வுகளை நடத்த பள்ளிகள், ஆய்வகத்தை தயார்படுத்த வேண்டும். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தலைமையிலான தேர்வுக்குழு, பொதுத்தேர்வு, செய்முறைத்தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள், அவர்களுக்கான பணி ஒதுக்கீடுகளை இறுதி செய்ய வேண்டும், என்பன உட்பட வழிகாட்டுதல் விரிவாக அரசு தேர்வுகள் இயக்ககம் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.