சென்னைக்கும் பரவிய HMPV வைரஸ்: -2 குழந்தைகளுக்கு பாதிப்பு! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, January 6, 2025

சென்னைக்கும் பரவிய HMPV வைரஸ்: -2 குழந்தைகளுக்கு பாதிப்பு!



சென்னைக்கும் பரவிய எச்எம்பிவி வைரஸ்:

-2 குழந்தைகளுக்கு பாதிப்பு!

சென்னை, சேத்துப்பட்டு தனியார் மருத்துவமனை மற்றும் கிண்டியில் உள்ள தனியார் மருத்துவமனை ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்ட குழந்தைகள் இருவருக்கு HMPV வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.

சீனாவில் உருவான HMPV வைரஸ், இந்தியாவில் 3 குழந்தைகளுக்கு உறுதி செய்யப்பட்டு உள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்திருந்த நிலையில், சென்னையில் 2 குழந்தைகளுக்கும் பரவி உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

குறிப்பாக சேத்துப்பட்டில் உள்ள தனியார் மருத்துவமனை மற்றும் கிண்டியில் உள்ள தனியார் மருத்துவமனை ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்ட குழந்தைகள் இருவருக்கு HMPV வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

சளி, காய்ச்சல், இருமல் ஆகிய அறிகுறிகளுடன் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. *இந்தியாவில் காலடி வைத்த HMPV வைரஸ்!*

பெங்களூரில் 2 குழந்தைகளுக்கு தொற்று உறுதி.

இதன் மூலம் நாடு முழுவதும் ஒரே நாளில் 5 பேருக்கு எச்எம்பிவி வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

*அறிகுறிகள் என்னென்ன?*

இருமல், காய்ச்சல், மூக்கடைப்பு, மூச்சுத்திணறல் ஆகியவை அறிகுறிகளாகக் கூறப்படுகிறது.

குழந்தைகள், முதியவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு அதிகம் பரவும் அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது. ஆஸ்துமா, சிஓபிடி எனப்படும் நுறையீரல் பாதிப்பு உள்ளவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

தும்மலில் இருந்து வெளிவரும் நீர்த்துளிகள் மூலமாகவும் இந்த வைரஸ் பரவுதாக கூறுகின்றனர்.

இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு முதல் 5 நாட்களில் அறிகுறிகள் தெரியும்.

இந்த வைரஸுக்கு இதுவரை தடுப்பூசி கண்டுபிடிக்கப்படவில்லை. இதன் அறிகுறிகளை கட்டுப்படுத்த மட்டுமே சிகிச்சை தரப்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.