Complaint filed with the District Collector seeking action against the Regional Education Officer - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, December 29, 2024

Complaint filed with the District Collector seeking action against the Regional Education Officer



வட்டார கல்வி அலுவலர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட கலெக்டரிடம் புகார் மனு Complaint filed with the District Collector seeking action against the Regional Education Officer

காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகனிடம், மாணவர்களை தரைகுறைவாக பேசும் வாலாஜாபாத் வட்டார கல்வி அலுவலர் கிணிளி நந்தாபாய் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, விவசாயிகள் சங்கம் சார்பில் மனு அளித்தனர்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தலைவர் லாரன்ஸ், செயலாளர் ஆறுமுகம், பள்ளி மேலாண்மை குழு துணை தலைவர் வைஜயந்தி, உறுப்பினர் மணிமேகலை மற்றும் ஆறுமுகம் ஆகியோர், காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகனிடம் புகார் மனு அளித்தனர்.

அதில் கூறியிருப்பதாவது:

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் வட்டம், வட்டார கல்வி அலுவலர் (வாலாஜாபாத்) கிணிளி நந்தாபாய், தலைமை ஆசிரியர் ஆகியோர், மாணவர்களையும் ஒருமையில் பேசுவதும், அசிங்கமாகவும், தரக்குறைவாகவும் தொடர்ந்து பேசி வருகிறார். பொதுமக்கள், கிணிளிவை சந்தித்து இதுகுறித்து பேசினால், சரியான பதில் இல்லாமல் அலட்சியத்தோடு நடந்து கொள்வதுடன், தனியார் பள்ளிகளுக்கு ஆதரவாகவும் சிபாரிசு செய்யும் வகையிலும் செயல்படுகிறார்.

மேலும், வேளியூர் நடுநிலைப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் திருமலை நாராயணன், நந்தாபாய்க்கு (கிணிளி) ஆதரவாகவும் தொடர்ந்து செயல்படுகிறார். வேளியூர் பள்ளியில் ஒரு மரம் கூட வைக்காத திருமலை நாராயணன், சுற்றுப்புறச் சூழல் பாராட்டு சான்றுக்கு பரிந்துரை செய்துள்ளார்.

மேற்படி திருமலை நாராயணன் மீது ஏற்கனவே வேளியூர் ஊராட்சி மன்ற துணை தலைவர் ஜோதி பல்வேறு புகார்கள் திருமலை நாராயணன் மீது கொடுத்துள்ளார். ஆகவே, வாலாஜாபாத் வட்டார கல்வி அலுவலர் நந்தாபாய், வேளியூர் பள்ளி ஆசிரியர் திருமலை நாராயணன் மீதும் விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.