MPhil, PHd., படிப்பு தேர்வுகள் விண்ணப்பிக்க பல்கலை அறிவுரை
எம்.பில்., மற்றும் பி.எச்டி., படிப்புகளுக்கான தேர்வு ஜன.,ல் நடக்க உள்ள நிலையில் மாணவர்கள் விண்ணப்பிக்க பாரதியார் பல்கலை அறிவுறுத்தியுள்ளது.
பாரதியார் பல்கலையில், எம்.பில்., மற்றும் பி.எச்டி., படிப்புகள் பல்வேறு துறைகளில் பயிற்றுவிக்கப்படுகின்றன. கடந்த, டிச., 2021(பகுதி நேரம்) மற்றும் நவ., 2022 (பகுதி நேரம் மற்றும் முழு நேரம்) ஆகிய காலங்களில் எம்.பில்., மற்றும் பி.எச்டி., பயில பதிவு செய்தவர்களுக்கான தேர்வு வரும் ஜன., 21, 23 மற்றும், 25 ம் தேதிகளில் பாரதியார் பல்கலை எல்லைக்குட்பட்ட மையங்கள் மற்றும் டில்லியில்(திகார் மற்றும் திபாஸ்) நடக்க உள்ளது.
இதற்காக விண்ணப்பிக்க மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. விண்ணப்பம் மற்றும் இதர தகவல்களை பெற பல்கலையின், https://b-u.ac.in என்ற இணையதளத்தை பார்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. முதல் முறை தேர்வு எழுதும் மாணவர்கள் மூன்று தாள்களுக்கான தேர்வு கட்டணம், ரூ.2,000 மற்றும் அரியர் தேர்வுகளுக்கான, ரூ.1,000 ஐ செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. எம்.பில்., மாணவர்கள் விண்ணப்பங்களை தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் (பொறுப்பு), பாரதியார் பல்கலை, கோவை - 641046 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். பி.எச்டி., மாணவர்கள் இயக்குனர், ஆராய்ச்சி, மேம்பாட்டு மையம், பாரதியார் பல்கலை, கோவை - 641046 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்களை வரும், 22ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும். அபராதத்துடன் வரும், 27ம் தேதிக்குள் சமர்பிக்கலாம். மேலும், விபரங்களுக்கு, 0422 - 2428182 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.