குறைவாக பள்ளிப் பார்வை மேற்கொண்ட வட்டாரக் கல்வி அலுவலர்கள் பட்டியல் வெளியீடு - விளக்கம் கேட்டு தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, October 17, 2024

குறைவாக பள்ளிப் பார்வை மேற்கொண்ட வட்டாரக் கல்வி அலுவலர்கள் பட்டியல் வெளியீடு - விளக்கம் கேட்டு தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு!



குறைவாக பள்ளிப் பார்வை மேற்கொண்ட வட்டாரக் கல்வி அலுவலர்கள் பட்டியல் வெளியீடு - விளக்கம் கேட்டு தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு!

குறைவாக பள்ளிப் பார்வை மேற்கொண்ட வட்டாரக் கல்வி அலுவலர்களிடம் விளக்கம் கேட்டு தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு!

தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப்பணி - வட்டாரக் கல்வி அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய பள்ளிகள் பார்வை (School Visits) மற்றும் ஆண்டாய்வு (Annual Inspection) மேற்கொள்ளுதல் இதனை சரிவர தொடர்பாக அறிவுரைகள் வழங்கப்பட்டமை பின்பற்றாத வட்டாரக்கல்வி அலுவலரிடம் விளக்கம் கோருதல் சார்பு தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்.012448/ஜே2/2015, நாள்.10.06.2015.

பார்வையில் கண்டுள்ள செயல்முறைகளில், பள்ளிகளை ஆண்டாய்வு செய்தல் மற்றும் பள்ளிகளை பார்வையிட்டு மாணவர்களின் கல்வித்திறன்களை மேம்படுத்துதல் பொருட்டு. செப்டம்பர் மாதம் குறைந்தபட்சம் 12 பள்ளிகளை பார்வையிடவும் 2 கல்வி அலுவலர்களுக்கு பள்ளிகளில் ஆண்டாய்வு ஆண்டாய்வு மேற்கொள்ளவும் மேற்கொள்ளவும் வட்டாரக் ஆணையிடப்பட்டது.

2024-செப்டம்பர் மாதம். கல்வி வட்டாரக் அலுவலர்கள் பள்ளிப்பார்வை மேற்கொள்ளப்பட்ட விவரங்கள் கல்வி மேலாண்மைத் தகவல் முகமை (EMIS) வாயிலாக பெறப்பட்டுள்ளது. இங்ஙனம் பெறப்பட்ட பள்ளிப்பார்வை விவரங்களை கூர்ந்தாய்வு செய்ததில் செப்டம்பர்-2024 ஆம் மாதம். பல வட்டாரக் கல்வி அலுவலர்கள் 12க்கு குறைவான பள்ளிகளை பார்வை செய்துள்ளனர் என்பது தெரிய வருகிறது.

பள்ளிகளைச் சரிவர பார்வையிடாத பட்சத்தில், மாணவ/மாணவியரின் கற்றல் அடைவுத்திறன் குறைய வாய்ப்புள்ளது. மாணவ/மாணவியரின் நலன், பாதுகாப்பை உறுதிப்படுத்திடவும் கல்வித்திறனை மேம்படுத்திடவும் பள்ளிகள் ஆண்டாய்வு (Annual Inspection) மற்றும் பள்ளிகள் பார்வை (School Visits) மிகவும் அவசியமாகிறது. செப்டம்பர்-2024 ஆம் மாதம் 12க்கும் குறைவான பள்ளிகளை பார்வையிட்ட வட்டாரக் கல்வி அலுவலர்களின் பெயர் பட்டியல் இத்துடன் இணைத்து அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் (தொடக்கக் கல்வி) அனுப்பப்படுகிறது. 2024- பள்ளிப்பார்வை 12 மாதத்தில், செப்டம்பர் பள்ளிகளுக்குக் குறைவாக கிடைக்க பெற்ற 7 கல்வி) மேற்கொண்டமைக்கான விளக்கத்தினை. இச்செயல்முறைகள் தினங்களுக்குள் சார்ந்த வட்டாரக் கல்வி அலுவலரிடமிருந்து பெற்று இவ்வியக்கத்திற்கு அனுப்பிவைக்குமாறு சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்.

மேலும், இப்பட்டியலில் இடம் பெற்றுள்ள வட்டாரக் கல்வி அலுவலர்களில் எவரேனும் ஓய்வு அல்லது மாறுதல் பெற்று இருப்பின் அன்னார்களின் பெயர்களை தவிர்த்து மற்ற வட்டாரக் கல்வி அலுவலர்களிடமிருந்து மட்டும் விளக்கம் பெற்று அனுப்புமாறு தெரிவிக்கப்படுகிறது.

இணைப்பு -

2024-செப்டம்பர் மாதம் 12 பள்ளிக்கு குறைவாக பாள்ளிப்பார்வை மேற்கொண்ட வ.க.அ பெயர் பட்டியல் CLICK HERE TO DOWNLOAD DEE - School Visit ,Inspection Guidelines To Beo's -- Dee Proceedings PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.