மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, October 17, 2024

மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு!



மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு!

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 3 சதவிகித அகவிலைப்படி உயர்த்தி வழங்க மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அகவிலைப்படி 3 சதவிகிதம் உயர்த்தப்பட்டதன் மூலம் சுமார் 1 கோடிக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுளள்து.

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி (டிஏ), ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலை நிவாரணம் (டிஆர்) ஆகியவற்றை 3 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பிறகு மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

அகவிலைப்படி (டிஏ) மற்றும் அகவிலை நிவாரணம் (டிஆர்) உயர்வு ஜூலை 1, 2024 முதல் அமலுக்கு வரும் என்று மத்திய அமைச்சர் தெரிவித்தார். மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்தாண்டு ஜனவரி 1 2024 முதல் அகவிலைப்படி 4% உயர்த்தப்பட்டதன் மூலம் மொத்த அகவிலைப்படி 50 சதவிகிதமாக இருந்த நிலையில், தற்போது 3% உயர்த்தப்பட்டுள்ளதால், 53 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு: 01-07-2024 முதல் முன் தேதியிட்டு வழங்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்!*

_இதன் மூலம் மத்திய அரசு ஊழியர்களுக்கு 50% இலிருந்து 53% ஆக அகவிலைப்படி இருக்கும்

Cabinet approves additional instalment of three percent of Dearness Allowance to Central Government employees and Dearness Relief to Pensioners Posted On 16 OCT 2004 2:20PM by D The Union Cabinet, chaired by the Prime Minister Shri Narendra Modi, has approved an additional instalment of Dearness Allowance (DA) to Central Government employees and Dearness Relief (DR) to pensioners w.e.f. 01.07.2024 representing an increase of three percent (3%) over the existing rate of 50% of the Basic Pay/Pension, to compensate against price rise. This increase is in accordance with the accepted formula, which is based on the recommendations of the 7th Central Pay Commission. The combined impact on the exchequer on account of both DA and DR would be Rs.9.448.35 crore per annum. This will benefit about 49.18 lakh central government employees and 64.89 lakh pensioners.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.