வருமான வரி ரீபண்ட் வருகிறது புதிய விதிமுறை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, October 4, 2024

வருமான வரி ரீபண்ட் வருகிறது புதிய விதிமுறை



வருமான வரி ரீபண்ட் வருகிறது புதிய விதிமுறை

தாமதமாக வருமான வரி தாக்கல் செய்பவர்கள், சுலபமாக 'ரீபண்ட்' பெற புதிய விதிமுறையை மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ளது

வருமான வரி கணக்கை ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 31க்குள் தாக்கல் செய்ய வேண்டும். தவறியவர்கள், தாமதத்திற்கான சரியான காரணத்தை குறிப்பிட்டு விண்ணப்பிக்கலாம். விபத்து, வெள்ளம், இயற்கை பேரழிவு உட்பட உண்மையாக பாதிக்கப்பட்டவர்களின் கோரிக்கை ஏற்கப்படும். இவர்கள், அதிகமாக கட்டிய வரித்தொகையை திரும்ப பெறுவதில் சில நேரங்களில் சிக்கல் ஏற்படும். இதற்கு தீர்வு காண எளிய விதிமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பத்தை பரிசீலித்து முடிவு எடுக்கும் அதிகாரம் வருமான வரி ஆணையர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இவர்கள் பரிசீலிக்கும் 'ரீபண்ட்' தொகைக்கான வரம்பு 50 லட்சம் ரூபாயிலிருந்து, 1 கோடிரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்பு, 3 கோடி ரூபாய்க்கு அதிகமான 'ரீபண்ட்' தொகை பற்றி வருமான வரி வாரியம் பரிசீலித்தது. தற்போது அதிகாரிகளே நடவடிக்கை எடுக்கலாம். இதன்படி,

 வருமான வரி தாக்கல் செய்யப்பட்ட ஆண்டில் 1 கோடி ரூபாய்க்கு மிகாமல் இருக்கும் 'ரீபண்ட்' விண்ணப்பங்களை ஏற்க அல்லது நிராகரிக்கும் அதிகாரம் வருமான வரி முதன்மை ஆணையர்கள்/வருமான வரி ஆணையர்களுக்கு வழங்கப்படுகிறது

 ஒரு கோடி ரூபாய்க்கு அதிகமாகவும் 3 கோடி ரூபாய்க்கு குறைவாகவும் இருந்தால், விண்ணப்பங்களை ஏற்க அல்லது நிராகரிக்கும் அதிகாரம் வருமான வரி தலைமை ஆணையர்களுக்கு உண்டு

 மூன்று கோடி ரூபாய்க்கு அதிகமான 'ரீபண்ட்' தொகை மீது முடிவு எடுக்கும் அதிகாரம் முதன்மை தலைமை வருமான வரி ஆணையருக்கு வழங்கப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.