தொடக்கப் பள்ளியில் ஸ்கோப் பயிற்சி முகாம்!
கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை ஊராட்சி, வெள்ளியணை அரசு தொடக்கப் பள்ளியில், சர்.சி.வி. ராமன் அறிவியல் கழகம் சார்பில், ஸ்கோப் பயிற்சி முகாம் நடந்தது.
தலைமை ஆசிரியர் தர்மலிங்கம் தலைமை வகித்தார். மக்களிடையே அடிப்படை அறிவியல் விளக்கங்களை புரிய வைக்கும் வகையில், தமிழகத்தில், 200 இடங்களில் ஸ்கோப் திருவிழா என்ற அறிவியல் திருவிழாவை தமிழ்நாடு அஸ்ட்ரானமி மற்றும் சயின்ஸ் சொசைட்டி, ராமன் ரிசேர்ச் பவுண்டேசன் ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்துகின்றன. அதன் ஒரு பகுதியாக, வே டூ சக்சஸ் ஆதவுடன் பள்ளி மாணவர்களுக்கு ஸ்கோப் கார்டுகள் வழங்கப்பட்டு பயிற்சியளிக்கப்பட்டு வருகிறது. ஸ்கோப் தயாரிப்பது மற்றும் அதன் பயன்பாடு குறித்த விளக்கம் அளிக்கப்பட்டது. ஆசிரியர்கள் மனோகர், வாசுகி, வெங்கடேசன் ஆகியோர் பயிற்சியளித்தனர். பெரிஸ்கோப், கலைடாஸ்கோப், மடிப்பு நுண்ணோக்கி ஆகியவற்றை செய்து காண்பித்து பயிற்சியளித்தனர்.
மைக்ரோஸ்கோப் மற்றும் ஸ்டெதஸ்கோப்பை பயன்படுத்தி காண்பித்தனர். டெலஸ்கோப், ஸ்டீரியோஸ் கோப், கைரோஸ்கோப் ஆகியவற்றை ஸ்மார்ட் போர்டு மூலம் இணைய வழியில் காண்பித்தனர். ஸ்டெதஸ்கோப், மைக்ரோஸ்கோப், பெரிஸ்கோப், கலைடாஸ்கோப், மடிப்பு நுண்ணோக்கி போன்றவற்றை மாணவர்கள் பயன்படுத்தி மகிழ்ந்தனர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.