*அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் இனிய காலை வணக்கம்*
*இன்று(25.10.2024) நடைபெற உள்ள பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் பின்வருமாறு*
* அனைத்து பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் குறிப்பிட்ட நேரத்தில் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும்.
* TNSED parent app ஐ பதிவிறக்கம் செய்து அல்லது update செய்து உறுப்பினர்களின் வருகையை பள்ளியின் தலைமை ஆசிரியர் அல்லது SMC தலைவர் தற்பொழுது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உறுப்பினர்களின் வருகையை பதிவு செய்ய வேண்டும்.
* user name: Registered mobile number, password : Smc@last four digit of the mobile number
* இன்று நடைபெறும் பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பதிவேற்றம் செய்த தீர்மானங்கள் parent app ல் காண்பிக்கும். அதில் தொடர விரும்பும் தீர்மானத்திற்கு countinue என்றும் தொடர விரும்பாத தீர்மானத்திற்கு discountinue என்ற option ஐ பதிவு செய்ய வேண்டும்.
* countinue என பதிவு செய்த தீர்மானத்திற்கு தற்போதைய நிலை குறித்து பதிவு செய்ய வேண்டும் அதாவது Not started/Inprogress /completed என்பதில் ஏதேனும் ஒன்றை பதிவிட வேண்டும்.
* *இன்று நடைபெறும் பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் மாநிலத் திட்ட இயக்குநர் அவர்களின் செயல்முறை கடிதத்தில் அறிவுறுத்தியுள்ள முதல் ஐந்து தீர்மானங்களான புகையிலை தடுத்தல் அதற்கான விழிப்புணர்வு உதவி எண் போதைப் பொருள் இல்லாத தமிழ்நாடு உள்ளிட்ட ஐந்து தீர்மானங்களை கூட்டப்பொருளில் விவாதித்து பெற்றோர் செயலியில் தீர்மானங்களின் பட்டியல் என்ற பகுதியில் முதல் ஐந்து தீர்மானங்களை ஒவ்வொன்றாக தேர்வு செய்து OK என பதிவிட வேண்டும்.
* *மேலும் தீர்மானங்கள் பள்ளியின் தேவைக்கு ஏற்ப தீர்மானங்களை பள்ளி மேலாண்மை குழு கூட்டப் பதிவேட்டில் பதிவு செய்து உறுப்பினர்களின் கையொப்பங்களை பெற வேண்டும். அதன் நகலை பெற்றோர் செயலில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.*
* ஏற்கனவே இருந்த புதிய திட்டமிடல் என்ற பகுதி அடுத்த கூட்டத்திற்குள் பெற்றோர் செயலியில் enable செய்யப்படும்.
மேற்குறிப்பிட்ட வழிமுறைகளை முறையாக பின்பற்றி எவ்வித புகாருக்கும் இடமளிக்காமல் இவ்வாண்டு நடைபெறும் முதல் பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தை சிறப்பாக நடத்திட அனைத்து தலைமை ஆசிரியர்களையும் கனிவுடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
நன்றி
Thursday, October 24, 2024
New
இன்று(25.10.2024) நடைபெற உள்ள பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.