ஊக்க ஊதிய உயர்வு வழக்கு சார்ந்து 10.03.2020க்கு முன்னர்/பின்னர் உயர்கல்வி தகுதிபெற்ற ஆசிரியர்களின் எண்ணிக்கை சார்ந்த விவரங்கள் கோரி - தமிழ்நாடு பள்ளி கல்வி இணை இயக்குனரின் செயல்முறைகள்
பள்ளிக் கல்வி - உயர்கல்வித் தகுதிக்கான ஊக்க ஊதிய உயர்வு - சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வழக்குகள் - மனிதவள மேலாண்மைத் துறையின் அரசாணை (நிலை) எண்.95, மனித வள மேலாண்மை (அ.வி-IV)த்துறை, நாள்.26.10.2023ற்கு எதிராக
எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்குகள் 03.10.2024 அன்று கேட்புக்கு வந்தது வழக்கு சார்ந்து 10.03.2020க்கு முன்னர்/பின்னர்
உயர்கல்வி தகுதிபெற்ற ஆசிரியர்களின் எண்ணிக்கை சார்ந்த விவரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய அரசு சிறப்பு வழக்கறிஞரால் கோரப்பட்டது விவரங்கள் அனுப்ப கோருதல் - சார்ந்து பார்வை
1. அரசாணை (நிலை) 6T 600T.37, பணியாளர் மற்றும் நிருவாக சீர்திருத்தத்துறை (அ.வி-IV) துறை, நாள்.10.03.2020.
2. மனிதவள மேலாண்மைத் துறையின் அரசாணை (நிலை) எண்.95, மனித வள மேலாண்மை (அ.வி-IV)த்துறை, நாள்.26.10.2023.
3. சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட தொகுப்பு மேல்முறையீட்டு வழக்குகள் W.A. No.2721/2024, W.A.N0.2703/2024, W.A.No.2815/2024 மற்றும் W.A.No.2816/2024.
உயர்கல்வி தகுதிக்காக ஊக்க ஊதிய உயர்வு 1963 முதல் அனுமதிக்கப்பட்டதன் வெளியிடப்பட்ட தொடர்ச்சியாக அரசாணைகளில் ஊக்க ஊதிய உயர்வுகள் அனுமதிக்கப்பட்டு வந்துள்ள நிலையில், அரசின் கொள்கை முடிவாக உயர்கல்வி தகுதிக்கு ஊக்க ஊதிய உயர்வு வழங்கும் திட்டம் முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டு ஒரே முறையில் ஒட்டு மொத்த தொகை (One time lumpsum amount) மட்டுமே வழங்கப்படும் என பார்வை (2)ல் காணும் அரசாணை வெளியிடப்பட்டது.
மேற்கூறிய அரசாணை எண்.95ஐ எதிர்த்து பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ள நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள கீழ்காணும் மேல்முறையீட்டு வழக்குகள் 03.10.2024 அன்று கேட்புக்கு வந்தன.
குறிப்பிடப்பட்டுள்ள நாளான 10.03.2020க்கு முன்னர்/பின்னர் உயர்கல்வி தகுதி பெற்றுள்ள ஆசிரியர்களின் எண்ணிக்கை விவரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு ஏதுவாக சமர்ப்பிக்குமாறு அரசு சிறப்பு வழக்கறிஞரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே, 10.03.2020க்கு முன்னர் உயர்கல்வி தகுதிபெற்ற ஆசிரியர்கள்/ஊக்க ஊ ஊதிய உயர்வு கோரி விண்ணப்பித்தவர்கள்/ விண்ணப்பித்தவர்களில் ஊக்க ஊதிய உயர்வு வழங்கப்படாமல் நிலுவை உள்ளவர்கள் / 10.03.2020க்கு முன்னர் உயர்கல்வி தகுதிபெற்று ஊக்க ஊதிய உயர்வு கோரி விண்ணப்பிக்காதவர்கள் / 10.03.2020க்குப் பின்னர் நாளதுவரை உயர்கல்வி தகுதிபெற்ற ஆசிரியர்கள் சார்ந்த எண்ணிக்கை விவரங்களை இணைப்பில் கண்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து 18.10.2024 அன்று மாலை 05.00 மணிக்குள் கடிதம் வாயிலாகவும், jdvocational@gmail.com மற்றும் dseksec@gmail.com மின்னஞ்சலுக்கும் தவறாமல் அனுப்பி வைக்குமாறும், மேற்கூறியவாறு எண்ணிக்கை விவரங்களை அனுப்புவது சார்பாக பள்ளிகளில் இருந்து பெறப்படும் விவரங்களை அரசு/அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் தலைமையாசிரியர்கள் உட்பட உயர்கல்வி தகுதிபெற்ற அனைத்து ஆசிரியர்களின் பதவி வாரியான பெயர் பட்டியலுடன் பெற்று முதன்மைக்கல்வி அலுவலகத்தில் சரிபார்த்த பின்னர், அதனடிப்படையில் இவ்வியக்ககத்திற்கு எண்ணிக்கை விவரங்களை மட்டும் தற்போது அனுப்புமாறும் தேவைப்படும் நேர்வில் ஆசிரியர்களின் முழு விவரங்கள் கோரப்படும் போது இவ்வியக்ககத்திற்கு அனுப்புவதற்கு தயார் நிலையில் வைத்திருக்குமாறும் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது. CLICK HERE TO DOWNLOAD Incentive Proceeding PDF
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.