MBBS & BDS படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை: தரவரிசை பட்டியல் இன்று வெளியீடு
எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை: தரவரிசை பட்டியல் இன்று வெளியீடு
நடப்பாண்டு எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட உள்ளது.இப்படிப்பு களுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு கலந்தாய்வு கடந்த 14ம் தேதி நடந்தது. அதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் வருகிற 21ம் தேதி மருத்துவத் தேர்வுக்குழு மூலமாக முதல் கட்ட கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. இதற்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட இருக்கிறது. இதனை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் வெளியிடுகிறார்.
முதற்கட்ட கலந்தாய்வு தொடங்கிய உடனேயே 7.5% அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு ஒதுக்கீடு பட்டியல், முன்னாள் ராணுவத்தினருக்கான இடஒதுக்கீடு பட்டியல், மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீடு பட்டியல் மற்றும் விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கான இடஒதுக்கீடு என 4 பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஆகஸ்ட் 22, 23 ஆகிய நாட்களில் நேரடியாக கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. பின்னர் பொதுக்கலந்தாய்வு ஆன்லைன் மூலமாக நடத்தப்படுகிறது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.