அரசு ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்க கல்லுாரிகளுக்கு தடை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, August 18, 2024

அரசு ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்க கல்லுாரிகளுக்கு தடை



அரசு ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்க கல்லுாரிகளுக்கு தடை

சென்னை: 'அரசு ஒதுக்கீட்டில் இலவசமாக படிக்கும் மாணவ - மாணவியரிடம், கட்டணம் வசூலிக்கும் கல்லுாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என, தொழில்நுட்ப கல்வி ஆணையர் ஆபிரகாம் எச்சரிக்கை விடுத்துள்ளார். அவரது அறிக்கை:

அரசு பள்ளிகளில் படித்து, இன்ஜினியரிங் கல்லுாரிகளில், 7.5 சதவீதம் முன்னுரிமை அடிப்படையில், அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேரும் மாணவர்களுக்கு, படிப்பு கட்டணம், விடுதி கட்டணம், போக்குவரத்து கட்டணம் உள்ளிட்ட அனைத்து கட்டணங்களையும் அரசு வழங்கும்.

எனவே, 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களிடம், அனைத்து இன்ஜினியரிங் கல்லுாரிகளும், எந்தவித கட்டணங் களையும் வசூலிக்கக் கூடாது.

அதேபோல, அரசு, அரசு உதவி பெறும் தனியார் இன்ஜினியரிங் கல்லுாரிகளில், ஒற்றை சாளர கலந்தாய்வு வழியே சேரும் முதல் பட்டதாரி மாணவர்களுக்கு, கல்விக் கட்டண சலுகை வழங்கப்படும் என, அரசு தெரிவித்துள்ளது. எனவே, அவர்களிடமும் கல்வி கட்டணம் வசூலிக்கக்கூடாது. சுயநிதி கல்வி நிறுவனங்களில், அரசு ஒதுக்கீடு செய்யும் இடங்களில் படிக்கும் ஆதிதிராவிடர், பழங்குடியினர், கிறிஸ்தவ மதம் மாறிய மாணவ - மாணவியரின் பெற்றோர் ஆண்டு வருமானம், 2.50 லட்சம் ரூபாய்க்குள் உள்ளவர்களுக்கு, கட்டாய கட்டணங்கள் வழங்கப்படும் என, அரசு அறிவித்துள்ளது.

அக்கட்டணங்கள் அனைத்தும், மாணவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்ட பின், அவர்கள் கல்லுாரிக்கு செலுத்த வேண்டும். வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கும் முன், மாணவர்களிடம் எந்தவித கட்டணங்களையும் வசூலிக்கக் கூடாது.

ஆனால், சில கல்லுாரிகளில் அரசு ஒதுக்கீட்டில் சேர வரும் மாணவ - மாணவியரிடம், அனைத்து கட்டணங்களையும் செலுத்த சொல்வதாக புகார்கள் வருகின்றன.

அவ்வாறு கல்லுாரி நிர்வாகங்கள் கட்டணம் வசூலிக்கக்கூடாது. இதை மீறும் கல்லுாரி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.