ஊக்க ஊதிய உயர்வு சார்ந்து வழங்கப்படும் நீதிமன்ற தீர்ப்புகளுக்கு தற்போதுள்ள அரசாணைகள் படி பலனை வழங்க பள்ளி கல்வித்துறை இயக்குனர் உத்தரவு. - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, August 7, 2024

ஊக்க ஊதிய உயர்வு சார்ந்து வழங்கப்படும் நீதிமன்ற தீர்ப்புகளுக்கு தற்போதுள்ள அரசாணைகள் படி பலனை வழங்க பள்ளி கல்வித்துறை இயக்குனர் உத்தரவு.



ஊக்க ஊதிய உயர்வு சார்ந்து வழங்கப்படும் நீதிமன்ற தீர்ப்புகளுக்கு தற்போதுள்ள அரசாணைகள் படி பலனை வழங்க பள்ளி கல்வித்துறை இயக்குனர் உத்தரவு. அரசு / அரசு உதவி பெறும் உயர்நிலை / மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் உயர்கல்வித் தகுதி பெற்ற அனைத்து வகை ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு வழங்குதல் சார்ந்து வெளியிடப்பட்ட அரசாணைகள் அரசாணைகளின்படி பள்ளிக் கல்வி இயக்ககத்தால் மேற்கொள்ளப்பட்ட தொடர் நடவடிக்கைகள் நடைமுறையில் உள்ள அரசாணையினை கருத்தில் கொண்டு ஊக்க ஊதிய உயர்வு வழங்குதல் சார்ந்து சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழங்கப்பட்ட தீர்ப்பாணைகளுக்கு வரையறுக்கப்பட்ட கால அவகாசத்திற்குள் நடைமுறையில் உள்ள அரசாணைகளை கருத்தில் கொண்டு உரிய ஆணையினை வழங்குவதற்கு அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு தெரிவித்தல் தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை - 06

ந.க.எண்.069381/கே/இ1/2018 நாள். 19.07.2024

- -

பொருள் பள்ளிக் கல்வி அரசு / அரசு உதவி பெறும் உயர்நிலை / மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் உயர்கல்வித் தகுதி பெற்ற அனைத்து வகை ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு வழங்குதல் சார்ந்து வெளியிடப்பட்ட அரசாணைகள் அரசாணைகளின்படி பள்ளிக் கல்வி இயக்ககத்தால் மேற்கொள்ளப்பட்ட தொடர் நடவடிக்கைகள் நடைமுறையில் உள்ள அரசாணையினை கருத்தில் கொண்டு ஊக்க ஊதிய உயர்வு வழங்குதல் சார்ந்து சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழங்கப்பட்ட தீர்ப்பாணைகளுக்கு வரையறுக்கப்பட்ட கால அவகாசத்திற்குள் நடைமுறையில் உள்ள அரசாணைகளை கருத்தில் கொண்டு உரிய ஆணையினை வழங்குவதற்கு அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு தெரிவித்தல் - சார்ந்து பார்வை 1. அரசாணை நிலை எண்.37 எண்.37 பணியாளர் பணியாளர் மற்றும் நிருவாக சீர்திருத்த (அ.வி-IV)த் துறை நாள்.10.03.2020

2. அரசாணை நிலை எண்.116 பணியாளர் மற்றும் நிருவாக சீர்திருத்த (அ.வி-IV)த் துறை நாள்.15.10.2020

3. Q60T600601-6, (தொழிற்கல்வி)

4. மனிதவள பள்ளிக் கல்வி இணை செயல்முறைகள் 069381/கே/இ1/2018, நாள்22/02/2021 இயக்குநரின் ந.க.எண். (நிலை) (அ.வி-IV)த்துறை. மேலாண்மைத் துறையின்அரசாணை 6T 600T.120, மனித வள் மேலாண்மை நாள்.01.11.2021.

5. அரசுக் கடித எண்.6192/ப.க.5(2)/2021-2, நாள்.07.04.2022 13.05.2022, 13/10/2022 mm 31/07/2023

6. 1601 60601-6, பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் (தொழிற்கல்வி)செயல்முறைகள்.ந.க.எண்.069381/கே/இ1/2018 நாள்.26.04.2022. 7. மனிதவள மேலாண்மைத் துறையின் அரசாணை (நிலை) எண்.95, மனித வள மேலாண்மை (அ.வி-IV)த்துறை. நாள்.26.10.2023. பார்வை 1 மற்றும் 2-ல் காணும் அரசாணைகளின்படி அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் பல்வேறு வகையான ஆசிரியர்கள் 10.03.2020க்கு முன்னர் பெற்ற உயர் கல்வி தகுதிக்கு, ஊக்க ஊதிய உயர்வு அனுமதித்தல் குறித்து, இவ்வியக்ககத்தின் இதே எண்ணிட்ட பார்வை (3)-ல் காணும் 22.02.2021 நாளிட்ட கடிதத்தின் வாயிலாக அரசிற்கு 12382 ஆசிரியர்களின் விவரம் அனுப்பப்பட்டது

அரசிற்கு அனுப்பப்பட்ட மேற்படி கருத்துருவினை, பரிசீலிக்கும் பொருட்டு, பார்வை-4ல் காணும் அரசுக் கடித எண்.6192/பக5(2)/2021-2, நாள்.07.04.2022ல், அரசால் கோரப்பட்ட கூடுதல் விவரங்கள் பார்வை (5)ல் காணும் 26.04.2022 நாளிட்ட கடிதம் வாயிலாக அரசுக்கு தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, ஒன்றிய அரசினால் அறிவிக்கப்பட்ட, வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படையில், சட்டமன்ற பேரவை விதிகளில் விதி 110-இன் கீழ் தமிழ்நாடு மாநில அரசுப் பணியாளர்களுக்கு கூடுதல் கல்வி தகுதிக்கான ஊக்கத் தொகை வழங்கப்படும் என 07.09.2021 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் சட்டமன்ற பேரவையில் அறிவிக்கப்பட்டது.

மேற்படி அறிவிப்பின் அடிப்படையில், 10/03/2020க்குப் பின்னர் கூடுதல் கல்வித்தகுதி பெற்ற மாநில அரசு ஊழியர்களுக்கு, ஊக்க ஊதிய உயர்வினை ஒரே முறையில் ஒட்டு மொத்த தொகையாக (One time lumpsum amount) வழங்கும் பொருட்டு வெளியிடப்பட்ட அரசாணை நிலை எண்.120, மனித வள மேலாண்மை (அ.வி-IV) த்துறை, நாள்.01.11.2021ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வரசாணையின் பக்கம் 2 மற்றும் 3ல் I முதல் XII வரை வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கூடுதல் கல்வித் தகுதிக்கான ஊக்கத் தொகை பின்வருமாறு வழங்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வ.எண் கூடுதல் கல்வித்தகுதி தேர்ச்சி தொகை (ரூ) 1 முனைவர் (Ph.D) படிப்பு 25,000/- 2 3 பட்ட மேற்படிப்பு (PG) அல்லது அதற்கு சமமானது பட்டப்படிப்பு /பட்டயப்படிப்பு 20,000/- 10,000/- இதனை தொடர்ந்து வெளியிடப்பட்ட பார்வை-7ல் மனிதவள மேலாண்மைத் துறையின் அரசாணை (நிலை) எண்.95, மனித வள மேலாண்மை (அ.வி-IV)த்துறை, 26/10/2023 நாளிட்ட அரசாணையில் பின்வருமாறு தெரிவித்துள்ளது. (iii) (i) பணி (ii) அமர்வு விதிகளுக்கிணங்க ஒரு பதவியில் பணியமர்த்த தெரிவிக்கப்பட்டுள்ள அவசியமான/தேவையான கல்வித் தகுதிகளுக்கு ஊக்க ஊதிய உயர்வு வழங்கப்படமாட்டாது. முற்றிலும் அறிவுசார் மற்றும் இலக்கியம் சார்ந்த உயர்கல்வி தகுதிகளுக்கு, ஊக்க ஊதிய உயர்வு வழங்கப்படமாட்டாது. தனியர் மேற்கொண்டுள்ள கல்வித் தகுதிகள் அவர்கள் ஆற்றும் பணிக்கு நேரடி தொடர்புடையதாக இருக்க வேண்டும் அல்லது தனியர் பணியாற்ற உள்ள அடுத்த உயர் பதவிக்கு தொடர்புடையதாக கல்வித் தகுதி அமைந்திருக்க வேண்டும். பணியாளர் பெற்ற கல்வித் தகுதி, குறிப்பிட்ட பணியில் அப்பணியாளர் செயல்படுவதற்கு நேரடியான தொடர்புள்ளதாகவும் மற்றும் அப்பணியாளரின் பணித்திறத்தினை மேம்படுத்த பங்களிப்பு அளிப்பதாகவும் இருக்க வேண்டும்.

ஊக்க ஊதிய உயர்வுத்தொகையின் அளவு அனைத்து பதவிகளுக்கும், நிலை, பிரிவு மற்றும் துறை வேறுபாடு இன்றி சமமாக இருக்க வேண்டும். உயர்கல்வி பயிலுவதற்கு விடுப்பு அனுமதிக்கப்பட்டவர்கள் மற்றும் அரசின் சலுகை மூலம் உயர் கல்வி பயிலுபவர்களுக்கு, மேற்படி ஊக்க ஊதிய உயர்வு அனுமதிக்க இயலாது.

அரசுப் பணியில் சேர்ந்த பின்னர் பெறப்பட்ட உயர்கல்வித் தகுதிகளுக்கு மட்டுமே ஊக்க ஊதிய உயர்வு வழங்கப்படவேண்டும்.

கல்வித்தகுதியில் தளர்வு செய்து பணி நியமனம் பெற்ற பணியாளர்களுக்கு, ஊக்க ஊதிய உயர்வினை அனுமதிக்க இயலாது. பணியாளர் அப்பணி நியமனத்திற்குத் தேவையான கல்வித் தகுதியினை பின்னாளில் பெற்றிருந்தால் ஊக்க ஊதிய உயர்வினை அனுமதிக்கக்கூடாது. மத்திய மாநில அரசுகளினால் அமைக்கப்பட்ட / AI CTE போன்ற அங்கீகாரம் பெற்ற மற்றும் பல்கலைக்கழக மானிய குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி தகுதிகளுக்கு மட்டுமே ஊக்க ஊதிய உயர்வு வழங்க இயலும்.

(viii) அரசுப் பணியாளரின் பணிக்காலத்தில் அவருக்கு வழங்கப்படும் மொத்த ஊக்க ஊதிய உயர்வின் எண்ணிக்கை 2ஆண்டுகள் இடைவெளியில் அதிகபட்சமாக 2 முறைக்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

(ix) இனி வரும் காலங்களில் ஊக்க ஊதிய உயர்வுக்கான கோரிக்கையை அரசு பணியாளர் உயர்கல்வி பெற்ற நாளிலிருந்து 6 மாதங்களுக்குள் அளிக்க வேண்டும்.

(x) அரசுத் துறையினால் ஏற்கனவே நிராகரிக்கப்பட்டகோரிக்கைகள் ஒட்டு மொத்த தொகையினை (One time lumpsum amount) பெறுவதற்கு தகுதியற்றதாகும்.

(xi) உயர்கல்வித் தகுதி பெற்று, இந்நாள் வரையில் முன்ஊக்க ஊதிய உயர்வு அனுமதிக்கப்படாத பணியாளர்களுக்கு மட்டுமே ஒட்டு மொத்த தொகையினை (One time lumpsum amount) அனுமதிக்க இயலும்.

அரசு பணியாளர்களுக்குப் பணியாளர்களின் கடமைகள், அவர்தம் பங்களிப்பு மற்றும் பணி சார்ந்த பொறுப்புகளை ஆற்றுவதற்கு, இன்றைய நிலையில் பணி விதிகளில் வரையறை செய்யப்பட்டுள்ளதின்படியுள்ள கல்வி தகுதிகளை ஆய்வு செய்து, பணியாளர் பெற்ற உயர்க்கல்வித் தகுதிகளுக்கு ஊக்க ஊதியம் வழங்குவது சார்ந்து நிர்வாகத் துறை இதற்கான ஆணையினை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பணியாளர் பெற்ற உயர் கல்வி, ஒட்டு மொத்தமாக எந்தவிதத்தில் பணியாளர் வகிக்கும் பதவிக்கு மற்றும் அவருடைய துறை சார்ந்த வளர்ச்சிக்கு பலன் அளிக்க இயலும் என்பதை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு மனித வள மேம்பட்டுத்துறை மற்றும் நிதிதுறையின் இசைவினை பெற்ற பின்னர் ஊக்க ஊதியம் வழங்க இயலும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாணை எண்.120, நாள்:01-11-2021இல் தெரிவிக்கப்பட்ட முடிவுகள் (அரசு ழியர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு தொகையினை ஒரே முறையில் ஒட்டு மொத்த தொகையாக One time lumpsum amount வழங்குதல்) இந்திய அரசின் 7 வது மத்திய ஊதிய குழுவின் பரிந்துரைகளை பெரும்பாலும் பின்பற்றி அமைந்துள்ளது என பார்வை (7)ல் காணும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் வாயிலாக 10/03/2020 நிலவரப்படி பெறப்பட்ட நிலுவையில் உள்ள உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு சார்ந்த விண்ணப்பங்களுக்கு ஊக்க ஊதிய உயர்வினை ஒட்டு மொத்த தொகையாக (One time lumpsum amount) மட்டுமே வழங்கி, உயர்க்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு கோரும் விண்ணப்பங்களை தீர்வு செய்வதற்கு வழிவகை செய்யப்பட்டது. மேலும், இதற்கு முன் நடைமுறையிலிருந்த ஊக்க ஊதிய உயர்வினை ஊதியத்துடன் வழங்கி வரும் திட்டம் இனிவரும் காலத்தில் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு ஊக்க ஊதிய உயர்வினை ஒட்டு மொத்த தொகையாக (One time lumpsum amount) வழங்கும் அரசின் நிலைப்பாடு. நிலுவையிலுள்ள ஊக்க ஊதிய உயர்வு சார்ந்த விண்ணப்பங்களை விரைவாக தீர்வு செய்வதற்கும், இன்றைய நிலையில் உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு பெறுபவர்களுக்கும் மற்றும் எதிர்காலங்களில் ஊக்க ஊதிய உயர்வினை பெறப்போகிறவர்களுக்கும் இடையே சமத்துவம் மற்றும் ஒரே மாதிரியான நடைமுறையினை கையாளுவதற்கு உறுதி அளிப்பதாக உள்ளது எனவும் பார்வை 7ல் காணும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பார்வையில் குறிப்பிடப்பட்டுள்ள அரசாணைகள் உரிய இவ்வியக்ககத்தினால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுவருகிறது

சார்ந்து நடவடிக்கைகள் இந்நிலையில், ஊக்க ஊதிய உயர்வு வழங்கக் கோரி சென்னை மற்றும் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடரப்பட்ட வழக்குகளில் வழங்கப்பட்ட பெரும்பாலான தீர்ப்பாணைகளில் மேற்படி வழக்கினை தீர்வை செய்வதற்கு சம்பந்தப்பட்ட பிரதிவாதிகள் நடைமுறையில் உள்ள அரசாணைகளை கருத்தில் கொண்டு மனுதாரரின் கோரிக்கையின் தகுதியினை பரிசீலித்து பணப்பயன்களை வழங்குவதற்கு ஆணையிட்டு தீர்ப்புரைகள் பெறப்பட்டு வருகின்றன. தீர்ப்பாணைகள் செயல்படுத்துதல் சார்பாக, சார்ந்த பிரதிவாதிகளால் (முதன்மைக்கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் தலைமையாசிரியர்) வழங்கப்படும் இறுதியாணையில் நடைமுறையில் உள்ள அரசாணைகளை கருத்தில் கொள்ளாது ஊக்க ஊதிய உயர்வு பெற தகுதி வாய்ந்த ஆசிரியர்களின் பட்டியலில் மனுதாரரின் பெயரும் இடம் பெற்றுள்ளதெனவும், ஊக்க ஊதிய உயர்வு வழங்கலாம் என அரசாணை பெறப்படும் நிலையில் ஊக்க ஊதிய உயர்வு வழங்கப்பெறும் எனவும், பள்ளிக்கல்வி இயக்ககத்தினால் செயல்முறை ஆணைகள் பெறப்பட்டவுடன், ஊக்க ஊதிய உயர்வு பணப்பலன்கள் கிடைக்கப்பெறும் எனவும் தன்னிச்சையாக தெரிவித்து தீர்ப்பாணை பெற்ற மனுதாரர்களுக்கு மேற்படி பிரதிவாதிகளால் இறுதியாணைகள் வழங்கப்பட்டு அதன் நகல்கள் இவ்வியக்ககத்தில் கிடைக்கப்பெற்றுள்ளன.

இதை தவிர வழக்கு கேட்புக்கு வரும் தருணத்தில் மேற்குறிப்பிட்ட பிரதிவாதிகளால் வழக்கின் பிரதிவாதிகள் என்ற முறையில் வழங்கப்படும் ஒப்புதல் கடிதங்களிலும் ஊக்க ஊதிய உயர்வு பெற தகுதி வாய்ந்த ஆசிரியர்களின் பட்டியலில் மனுதாரரின் பெயரும் இடம்பெற்றுள்ளதெனவும், ஊக்க ஊதிய உயர்வு சார்ந்த கருத்துருக்கள் அரசினால் நிதி துறைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் நிதி துறையினால் ஒப்புதல் பெறப்பட்ட பின்பு சாதகமான ஆணை வழங்கப்படும் எனவும் ஊக்க ஊதிய உயர்வு வழங்கலாம் என அரசாணை பெறப்படும் நிலையில் ஊக்க ஊதிய உயர்வு வழங்கப்பெறும் எனவும் மற்றும் பள்ளிக்கல்வி இயக்ககத்தினால் செயல்முறை ஆணைகள் பெறப்பட்டவுடன் ஊக்க ஊதிய உயர்வு பணப்பலன்கள் கிடைக்கப்பெறும் எனவும் தெரிவித்து ஒப்புதல் கடிதங்கள் அரசு வழக்கறிஞர்களுக்கு வழங்கப்பட்ட நிலையில் இவ்விவரத்தினையும் இவ்விவரத்தினையும் தீர்ப்பாணையில் தெரிவித்து தீர்ப்பாணைகள் பெறப்படுகின்றன. உரிய காலங்களில் வெளியிடப்படும் அரசாணைகளை நடைமுறைப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்படும் தொடர் நடவடிக்கைகளாக இவ்வியக்ககத்தின் செயல்முறை கடிதங்கள் இவ்வியக்ககத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அலுவலகங்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு மேற்கொள்ளப்படும் தொடர் நடவடிக்கை விவரங்களை உரிய காரணங்கள் இன்றி, நீதிமன்றங்களில் துறைக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ள மனுதாரர்களுக்கு தெரிவிக்க வேண்டிய அவசியம் ஏதும் உள்ளதாக அறியப்படவில்லை.

ஊக்க ஊதிய உயர்வு வழங்கக் கோரி சென்னை மற்றும் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடரப்பட்ட வழக்குகளில் வழங்கப்பட்ட தீர்ப்பாணைகளில் வழக்கினை தீர்வை செய்வதற்கு நடைமுறையில் உள்ள அரசாணைகளை கருத்தில் கொண்டு மனுதாரரின் கோரிக்கையின் தகுதியினை பரிசீலித்து பணப்பயன்களை வழங்குவதற்கு ஆணையிட்டு தீர்ப்புரைகள் பெறப்பட்ட நிகழ்வுகளில் இன்றைய நிலையில் இறுதியாக பெறப்பட்டுள்ள பார்வை(7)ல் காணும் அரசாணையினை கருத்தில் கொண்டு மட்டுமே நடவடிக்கை மேற்கொள்ள இயலும் என்பதால் பெறப்பட்ட தீர்ப்பாணைகளுக்கு அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரங்களுக்கு மாறான தன்னிச்சையான கருத்துக்களை தெரிவித்து இறுதியாணை வழங்குவது இனி வரும் காலங்களில் கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டும் என அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

மேலும், நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பாணைகளை தீர்வை செய்வதற்கு பள்ளிக் கல்வி இயக்ககத்தின் இசைவுடன் அரசு வழக்கறிஞரிடத்தில்/நீதிமன்றங்களில் வழங்கப்பட்ட இறுதியாணைகளின் நகலினை உடன் இவ்வியக்ககத்திற்கு தவறாமல் அனுப்புவதற்கும் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

பெறுநர்

அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலவலர்கள்

பள்ளிக்கல்வி இயக்குநர்



CLICK HERE TO DOWNLOAD DSE - Direction With Respect To Final Order - Proceedings PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.