வங்கிப் பணியாளா் போட்டித் தோ்வுக்கு விண்ணப்பிக்க காலம் அவகாசம் நீட்டிப்பு! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, August 27, 2024

வங்கிப் பணியாளா் போட்டித் தோ்வுக்கு விண்ணப்பிக்க காலம் அவகாசம் நீட்டிப்பு!



வங்கிப் பணியாளா் போட்டித் தோ்வுக்கு விண்ணப்பிக்க காலம் அவகாசம் நீட்டிப்பு!

வங்கிப் பணியாளர் போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை வரும் 28 ஆம் தேதி வரை நீட்டித்து வங்கிப் பணியாளா் தோ்வு மையம் உத்தரவிட்டுள்ளது. வங்கிப் பணியாளா் தோ்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

நாடு முழுவதும் அரசு அங்கீகாரம் பெற்று பல்வேறு மாநிலங்களில் செயல்பட்டு வரும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் காலியாக உள்ள 3,955 அலுவர் பணிடங்களுக்கான போட்டித் தோ்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வரும் 28 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தகுதியுள்ளவர்கள் www.ibps.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

இரண்டு கட்டங்களாக நடைபெறும் இந்த தேர்வின் முதல்நிலைத் தேர்வு அக்டோபரிலும், முதன்மைத் தேர்வு நவரிலும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.