18 ஆயிரம் அரசு பணியிடங்களை நிரப்ப TNPSC மும்முரம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, August 28, 2024

18 ஆயிரம் அரசு பணியிடங்களை நிரப்ப TNPSC மும்முரம்

18 ஆயிரம் அரசு பணியிடங்களை நிரப்ப TNPSC மும்முரம்

கடந்த மூன்று ஆண்டுகளில் 65 ஆயிரத்து 483 அரசு பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு ஏற்கனவே அறிவிப்பு ஒன்றில் கூறியுள்ளது. இந்நிலையில் அடுத்த 17 மாதங்களில், 18 ஆயிரம் அரசு பணியிடங்களை நிரப்புவதற்கான பணிகளை டிஎன்பிஎஸ்சி தொடங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நன்றாக தேர்வு எழுதினால் நிச்சயம் அரசு பணி

எஸ்.கே.பிரபாகர் நம்பிக்கை

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் அடுத்த மாதம் 14-ந்தேதி 2,327 பணியிடங்களுக்கான குரூப்-2 முதல்நிலை தேர்வு, அக்டோபர் மாதம் 14ந் தேதி 654 பணியிடங்களுக்கு ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகள் தேர்வு, நவம்பர் மாதம் 9-ந் தேதி 861 பணியிடங்களுக்கு ஐ.டி.ஐ., டிப்ளமோ படித்தவர்க ளுக்கு தொழில்நுட்ப துறை பணியிட தேர்வுகள், அதே மாதம் 18-ந் தேதி ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவை பணியிடங்கள் தேர்வு, டிசம்பர் மாதம் 14-ந் தேதி குற்றவழக்கு தொடர்பு துறை பணியிடங்கள், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம். 4-ந் தேதி குரூப்- 5ஏ தேர்வு நடக்கிறது. அதன் தொடர்ச்சியாக ஒவ்வொரு தேர்வும் நடத்துவதற்கான அட்டவணை வெளியிடப்பட உள்ளன. இது குறித்து தேர்வாணையதலைவர் எஸ்.கே.பிரபாகரிடம் கேட்டபோது, நன்றாக தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நிச்சயம் அரசு பணி கிடைக்கும். அதற்கான பணிகளில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய குழு ஈடுபட்டுள்ளது என்றார்

டி.என்.பி.எஸ்.சி. மும்முரம்

சென்னை, ஆக.27- இன்னும் 17 மாதங்களில், 18 ஆயிரம் அரசு பணியி டங்களை நிரப்புவதற் கான பணிகளை தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என். பி.எஸ்.சி.) தொடங்கி உள்ளது. முதல்-அமைச்சர் நடவடிக்கை

தமிழகத்தை வருகிற 2030-ம் ஆண்டுக்குள் ஒருடிரில்லியன் டாலர் (ரூ.82 லட்சம் கோடி) பொருளாதாரமாக உயர்த்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டா லின் நடவடிக்கை எடுத்து வருகிறார். அதன் ஒரு பகுதி யாக தமிழகத்தில் வேலை வாய்ப்புகளை அதிகளவில் உருதாக் வேலைவாய்ப் பின்மை என்ற நிலை தமிழகத் தில் இருக்கக்கூடாது என்பதற் காக தனியார் துறை மட்டு மின்றி அரசு துறைகளிலும் வேலைவாய்ப்புகளை வழங் குவதற்கு நடவடிக்கை எடுத் துள்ளார்.

தி.மு.க. ஆட்சி பொறுப் பேற்ற கடந்த 3 ஆண்டுகளில் 65 ஆயிரத்து 483 அரசு பணி யிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. மேலும் 2026-ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் 7 ஆயி ரம்அரசு பணியிடங்கள் நிரப் பப்படும் என்று முதல்- அமைச்சர் அறிவித்துள்ளார். அதில் தமிழ்நாடு அரசு பணி யாளர் தேர்வாணையம் மூல மாக மட்டும் 17 ஆயிரத்து 595 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. எனவே கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாககாலி யாகஇருந்தடி.என்.பி.எஸ்.சி. தலைவர் பதவிக்கு, மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி எஸ். கே.பிரபாகர் நியமிக்கப்பட்டு உள்ளார். பொறுப்பேற்பு

பொதுவாக இந்ததலைவர் பணியிடங்களுக்கு ஓய்வு பெற்ற அதிகாரிகளைத்தான் நியமனம் செய்வார்கள். ஆனால் இந்த முறை, வரு வாய்த்துறை ஆணையராக இருந்த எஸ்.கே.பிரபாகர் நியமனம் செய்யப்பட்டுள் ளார். அவரது நியமனத்திற்கு கவர்னரும் உடனே ஒப்புதல் அளித்தார். அவர் தற்போது தலைவராக பொறுப்பேற்று இருக்கிறார்.

அதனைத்தொடர்ந்து அரசு பணியாளர் தேர்வா / ணையம் மும்முரமாகசெயல் படதொடங்கி உள்ளது. 2026- ம் ஆண்டு ஜனவரி மாதத்தை இலக்காக கொண்டுஇன்னும் 17 மாதங்களில் குறைந்தது 18 ஆயிரம் அரசு பணியிடங் களை நிரப்ப திட்டமிட்டுள் ளது. இந்த எண்ணிக்கை மை ளது. தற்போது அரசு துறை களில் காலி பணியிடங்கள் குறித்த தகவல்களை சேகரிக் கும் பணிகள் தொடங்கப்பட் டுள்ளது. துறை வாரியான பட்டியல் தயாரிக்கப்பட்டு, அந்த அடிப்படையில் தேர்வு கள் குறித்த அறிவிப்புகள் வெளியாக உள்ளன. அதேபோல்தேர்வுமுடிவுக ளையும் முன்பு போல் அல் லாமல் மிக விரைவாக வெளி யிடவும் அரசு பணியாளர் தேர்வாணையம் திட்டமிட்டு வருகிறது. எனவே அரசு பணியை விரும்புபவர்கள் தங்களை முழு அளவில் தேர் வுக்கு தயார்படுத்தி கொள்ள லாம். இனி ஒவ்வொரு மாத மும் அரசு பணிகளுக்கான அறிவிப்புகள் வெளிவரலாம்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.