TNEA 2024: ஜெனரல் ரேங்க் மற்றும் கம்யூனிட்டி ரேங்க், இவற்றுக்கு என்ன வித்தியாசம்? - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, July 3, 2024

TNEA 2024: ஜெனரல் ரேங்க் மற்றும் கம்யூனிட்டி ரேங்க், இவற்றுக்கு என்ன வித்தியாசம்?



TNEA 2024: ஜெனரல் ரேங்க் மற்றும் கம்யூனிட்டி ரேங்க், இவற்றுக்கு என்ன வித்தியாசம்?

தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான கவுன்சிலிங் செயல்முறை விரைவில் தொடங்க உள்ள நிலையில், தரவரிசை (ரேங்க்) தொடர்பான மாணவர்களின் குழப்பத்திற்கு இங்கே தெளிவு பெறுவோம்.

தற்போது பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் பொது தரவரிசை (General Rank) மற்றும் சாதி வாரியான தரவரிசை (Community Rank) ஆகிய இரண்டும் குறிப்பிடப்பட்டிருக்கும்.

ஜெனரல் ரேங்க் என்பது விண்ணப்பித்த அனைவருக்கும் அவர்களின் கட் ஆஃப் மதிப்பெண்கள் அடிப்படையில் வழங்கப்படுகிறது. இது தவிர இடஒதுக்கீட்டுப் பிரிவு மாணவர்களுக்கு கம்யூனிட்டி ரேங்க் தனியாக வழங்கப்படும்.

இந்த ஜெனரல் ரேங்க் என்பது உங்கள் கட் ஆஃப் மதிப்பெண்ணை சென்ற ஆண்டின் பட்டியலுடன் ஒப்பிட பயன்படும்.

கவுன்சிலிங் சுற்றுக்கு அழைக்கப்படுவது ஜெனரல் ரேங்க் அடிப்படையில் தான்.

கம்யூனிட்டி ரேங்க் என்பது உங்கள் இடஒதுக்கீட்டு பிரிவில் நீங்கள் எந்த இடத்தில் இருக்கிறீர்கள் என்பதை தெரிந்துக் கொள்ள உதவும். அதன்மூலம் நீங்கள் உங்களுக்கு கிடைக்க உள்ள இடத்தை கணிக்கலாம்.

நீங்கள் சாய்ஸ் பில்லிங் முடித்தப் பிறகு, நீங்கள் கொடுத்த சாய்ஸ் பொதுப்பிரிவில் இருந்தால் உங்கள் அந்த பொதுப்பிரிவில் (OC) இடம் கிடைக்கும், பொதுப்பிரிவில் இல்லை என்றால் உங்களுக்கு இடஒதுக்கீட்டு பிரிவில் கிடைக்கும். இதற்காக தான் கம்யூனிட்டி ரேங்க் வழங்கப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.