முதுநிலை நீட் தேர்வு தேதியை வெளியிட்ட மத்திய சுகாதார அமைச்சகம்.. 2 ஷிப்டுகளில் நடைபெறும் என்று அறிவிப்பு! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, July 4, 2024

முதுநிலை நீட் தேர்வு தேதியை வெளியிட்ட மத்திய சுகாதார அமைச்சகம்.. 2 ஷிப்டுகளில் நடைபெறும் என்று அறிவிப்பு!

முதுநிலை நீட் தேர்வு தேதியை வெளியிட்ட மத்திய சுகாதார அமைச்சகம்..

2 ஷிப்டுகளில் நடைபெறும் என்று அறிவிப்பு!

2024ம் ஆண்டுக்கான முதுநிலை நீட் தேர்வு ஆகஸ்ட் 11 ஆம் தேதி இரண்டு ஷிப்டுகளில் நடைபெறும் என்று மருத்துவ அறிவியல் தேர்வுகளுக்கான தேசிய வாரியம் வெள்ளிக்கிழமை அறிவித்தது.

நீட் முதுகலை தேர்வு ஆனது முன்னதாக ஜூன் 23-ம் தேதி தேர்வு நடத்த திட்டமிடப்பட்டது.

இந்த நிலையில் மத்திய சுகாதார அமைச்சகம் நீட்-பிஜி நுழைவுத் தேர்வு குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், “22.06.2024 தேதியிட்ட NBEMS அறிவிப்பின் தொடர்ச்சியாக, NEET-PG 2024 தேர்வு நடத்துவது மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இப்போது ஆகஸ்ட் 11ம் தேதி இரண்டு ஷிப்டுகளாக நடத்தப்படும்.

NEET-PG 2024 இல் தோன்றுவதற்கான தகுதிக்கான கட்-ஆஃப் தேதி ஆகஸ்ட் 15, 2024 ஆக தொடரும்” என்று வாரியம் தெரிவித்துள்ளது.

சில போட்டித் தேர்வுகளின் நேர்மை குறித்த குற்றச்சாட்டுகளை அடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜூன் 23ஆம் தேதி நடைபெறவிருந்த நீட்-பிஜி நுழைவுத் தேர்வை ஜூன் 22ஆம் தேதி மத்திய சுகாதார அமைச்சகம் ஒத்திவைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அதன் பிறகு மத்திய சுகாதார அமைச்சகம், மருத்துவ அறிவியல் தேசிய தேர்வு வாரியம் (NBEMS) மற்றும் அதன் தொழில்நுட்ப கூட்டாளியான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), தேசிய மருத்துவ ஆணையம் (NMC) மற்றும் சைபர் செல் அதிகாரிகளுடன் பல கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.

இந்த முறை நடக்கவுள்ள நீட்-பிஜி நுழைவுத் தேர்வின் செயல்முறைகளின் வலுவான தன்மையை முழுமையாக மதிப்பீடு செய்ய சுகாதார அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

மருத்துவ மாணவர்களுக்கான தேசிய தகுதி நுழைவுத் தேர்வு-முதுகலை (NEET-PG) நுழைவுத் தேர்வை NBEMS டிசிஎஸ் உடன் இணைந்து நடத்துகிறது.


முதுநிலை நீட் தேர்வு ஆக.11ஆம் தேதி நடக்கிறது

3 முறை முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் ஆக.11ஆம் தேதி நடக்கும் என தேசிய மருத்துவக் கல்வி வாரியம் அறிவிப்பு

முதுநிலை நீட் தேர்வு காலை, மாலை என இரு வேளைகளில் நடைபெறும் என மருத்துவக் கல்வி வாரியம் அறிவிப்பு

PG NEET - முதுநிலை நீட் தேர்வு - புதிய தேதி அறிவிப்பு

முதுநிலை நீட் தேர்வு ஆக.11ஆம் தேதி நடக்கிறது.

*3 முறை முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் ஆக.11ஆம் தேதி நடக்கும் என தேசிய மருத்துவக் கல்வி வாரியம் அறிவிப்பு.

*முதுநிலை நீட் தேர்வு காலை, மாலை என இரு வேளைகளில் நடைபெறும் என மருத்துவக் கல்வி வாரியம் அறிவிப்பு 05.07.24

NATIONAL BOARD OF EXAMINATIONS IN MEDICAL SCIENCES NEW DELHI

NOTICE

Dated: 05.07.2024

Subject: Revised schedule for conduct of NEET-PG 2024

MINSTIO two shifts shall be published 4. Further details regarding the conduct of examination in on NBEMS website https://natboard.edu.in in due course.

1. In continuation of NBEMS notice dated 22.06.2024, the conduct of NEET-PG 2024 examination has been rescheduled.

2. The NEET-PG 2024 shall now be conducted on 11th August 2024 in two shifts.

ARD OF

3. The cut-off date for the purpose of eligibility to appear in the NEET-PG 2024 shall continue to be 15th August 2024. SCIENCE

5. For any query/clarification/assistance, please write to NBEMS at its Communication Web Portal: https://exam.natboard.edu.in/communication.php?page=main

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.