TNPSC Group 4 Exam - கடந்த ஆண்டு கட் ஆஃப் நிலவரம் என்ன? - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, June 5, 2024

TNPSC Group 4 Exam - கடந்த ஆண்டு கட் ஆஃப் நிலவரம் என்ன?



TNPSC Group 4 Exam; நெருங்கும் குரூப் 4 தேர்வு; கடந்த ஆண்டு கட் ஆஃப் நிலவரம் என்ன?

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், கடந்த 2022 ஆம் ஆண்டு நடந்த குரூப் 4 தேர்வுக்கான கட் ஆஃப் என்ன என்பதை இப்போது பார்ப்போம்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அமைச்சு பணிகள், வாரியங்கள், வனப் பணி மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் காலியாக உள்ள நான்காம் நிலை பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வை அறிவித்துள்ளது. மொத்தம் 6244 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தத் தேர்வு மூலம் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், வனக் காவலர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தக் குரூப் 4 தேர்வு இரண்டு பகுதிகளாக நடைபெறும். முதல் பகுதி கட்டாய தமிழ் மொழித் தகுதித் தேர்வு. இது 100 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இரண்டாம் பகுதியில் பொது அறிவில் 75 கேள்விகளும், திறனறி பகுதியில் 25 கேள்விகளும் இடம்பெறும்.

இந்தநிலையில், குரூப் 4 தேர்வு 09.06.2024 அன்று நடைபெறும் என டி.என்.பி.எஸ்.சி அறிவித்தது. அந்த வகையில் மே 27 குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டது. இதனையடுத்து தேர்வர்கள் மிகத் தீவிரமாக தேர்வுக்கு தயாராகி வருகின்றனர்.

இந்தநிலையில், குரூப் 4 தேர்வுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், கடைசியாக 2022 ஆம் ஆண்டில் நடந்த குரூப் 4 தேர்வுக்கான கட் ஆஃப் என்ன என்பதை இப்போது பார்ப்போம். இங்கு கட் ஆஃப் என்பது 200 கேள்விகளுக்கு எத்தனை பதில்கள் சரியானவை என்பதை குறிப்பதாகும்.

மேலும் வாசிக்க கீழே உள்ள லிங்கை Click செய்யவும் CLICK HERE TO DOWNLOAD TNPSC Group 4 Exam - கடந்த ஆண்டு கட் ஆஃப் நிலவரம் PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.