900 மாணவர்களுக்கு கோடை சுற்றுலா - பள்ளிக்கல்வி துறை ஏற்பாடு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, June 1, 2024

900 மாணவர்களுக்கு கோடை சுற்றுலா - பள்ளிக்கல்வி துறை ஏற்பாடு900 மாணவர்களுக்கு கோடை சுற்றுலா - பள்ளிக்கல்வி துறை ஏற்பாடு Summer tour for 900 students - Department of School Education

பிளஸ் 1ல் சிறப்பாக படிக்கும், 900 மாணவர்கள், கோடை சுற்றுலா தலங்களுக்கு அழைத்து செல்லப்பட உள்ளனர்.

பிளஸ் 1 படிக்கும் மாணவர்களுக்கு, பிளஸ் 2 பாடம் நடத்தும் முன், தமிழகத்தில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு அழைத்து செல்ல, பள்ளிக்கல்வி துறை ஏற்பாடு செய்துள்ளது. கொல்லிமலை, ஏற்காடு, கொடைக்கானல் மற்றும் குற்றாலம் போன்ற இடங்களில், நான்கு பிரிவுகளாக, கோடை கொண்டாட்டத்துக்கான சிறப்பு பயிற்சி முகாம்கள், ஐந்து நாட்கள் நடக்க உள்ளன.

இதில், அரசு பள்ளிகளில் பிளஸ் 1 படிக்கும் மாணவர்களின் மதிப்பீட்டு சோதனை மற்றும் விளையாட்டு போட்டிகளில் சிறந்து விளங்கிய, 225 மாணவ, மாணவியர் வீதம், 900 பேர் இந்த பயிற்சியில் பங்கேற்க உள்ளனர்.

இவர்களுக்கு, பெற்றோரின் ஒப்புதல் கடிதம் அவசியம் என, பள்ளிக்கல்வி துறை அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.