அன்பாசிரியர் 2023' விருது: விண்ணப்பிக்க ஜூன் 25 வரை அவகாசம் நீட்டிப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, June 11, 2024

அன்பாசிரியர் 2023' விருது: விண்ணப்பிக்க ஜூன் 25 வரை அவகாசம் நீட்டிப்பு



அன்பாசிரியர் 2023' விருது: விண்ணப்பிக்க ஜூன் 25 வரை அவகாசம் நீட்டிப்பு Anpasaithir 2023' Award: Application deadline extended till June 25

இந்து தமிழ் திசை வழங்கும் இந்து தமிழ் திசை - அன்பாசிரியர் 2023' விருதுக்கு விண்ணப்பிப்பதற்கான காலஅவகாசம் வரும் 25-ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு வழக்கமான பாடங்கள் கற்பிப்பதுடன், மாறுபட்ட சிந்தனை, புதுமை உணர்வோடு அவர்களது திறன்களை வளர்த்து, சமூக அக்கறையுடன், நற்பண்புகளைப் போதித்து, பள்ளியையும் மேம்படுத்தும் அர்ப்பணிப்பு மிக்க ஆசிரியர்களுக்கு ‘அன்பாசிரியர்’ விருது வழங்கப்படுகிறது. இந்த விருதுக்கு விண்ணப்பிக்கும் தேதி ஜூன் 15 என்று அறிவிக்கப்பட்டிருந்தது. பெரும்பாலான ஆசிரியர்களின் வேண்டுகோளை ஏற்று, வரும் 25-ம் தேதிவரை காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த விருதை டெட்டால் பநேகா ஸ்வஸ்த் இந்தியா, லெட்சுமிசெராமிக்ஸ் மற்றும் வர்த்தமானன் பதிப்பகம் ஆகியவை இணைந்து வழங்குகின்றன.

தமிழ்நாடு, புதுச்சேரியைச் சேர்ந்த அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகளில் சிறப்பாகப் பணியாற்றும் ஆசிரியர்கள், தொடர்ச்சியாக கற்பித்துவரும் தலைமை ஆசிரியர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

ஏற்கெனவே அன்பாசிரியர் விருது மற்றும் மாநில, மத்திய அரசுவழங்கும் நல்லாசிரியர் விருது பெற்றவர்கள், சிபிஎஸ்இ பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்டோர் தயவுகூர்ந்து விண்ணப்பிக்க வேண்டாம். விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்ட பிறகு, தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு முதல்கட்ட நேர்காணல் ஆன்லைன் வழியாக நடைபெறும். தங்களது அனைத்து ஆவணங்களுடன் ஆன்லைன் முதல்கட்ட நேர்காணலில் ஆசிரியர்கள் பங்கேற்க வேண்டும். மண்டலஅளவில் தேர்வாகும் ஆசிரியர்களுக்கு, மூத்த கல்வியாளர்கள் மூலம் இறுதிக்கட்ட நேர்காணல் நேரில் நடத்தப்படும். ​

விருதுக்கு விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள், கீழே கொடுக்ப்பட்டுள்ள இணைய முகவரியில் உள்ள விண்ணப்பப் படிவத்தில் பதிவு செய்துகொள்ளுங்கள். அத்துடன் சுயவிவரக் குறிப்பு, சாதனைகள் அடங்கிய புகைப்படங்கள். வீடியோக்கள், ஊடக அங்கீகாரங்கள், ஆசிரியரின் நன்முயற்சிகளுக்குப் பிறகு மாணவர்களின் செயல்பாடுகளில் ஏற்பட்ட முன்னேற்றம் ஆகியவற்றுக்கான ஆதாரங்களையும் விண்ணப்பப் படிவத்தில் பதிவு செய்ய வேண்டும். ஆசிரியர்கள் https://www.htamil.org/AA2023 என்னும் இணையவழியில் விண்ணப்பிக்கலாம். கூடுதல் தகவல்களுக்கு மு.முருகேசனை 7401329364 என்ற செல்போன் எண் அல்லது murugesan.m@hindutamil.co.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம். வரும் 25-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இணையம் வழியே அனுப்ப முடியாதவர்கள், விண்ணப்பப் படிவத்தை https://www.htamil.org/AAFORM என்ற லிங்க் மூலம்டவுன்லோட் செய்து, ‘அன்பாசிரியர் விருதுக் குழு, இந்து தமிழ் திசை,124, வாலாஜா சாலை, சென்னை - 600 002’ என்ற முகவரிக்கு, மேற்குறிப்பிட்ட ஆதாரங்களின் நகலுடன் வரும்25-ம் தேதிக்குள் வந்து சேரும்படி அஞ்சல் வழியாக அனுப்பலாம். அதிகமான தகவல்கள் இருப்பின் தனிக் காகிதத்தில் எழுதி அனுப்பலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.