இல்லம் தேடிக் கல்வி | 2024 25 ஆம் கல்வியாண்டிற்கான முதல் பருவ தன்னார்வலர் பயிற்சி - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, June 20, 2024

இல்லம் தேடிக் கல்வி | 2024 25 ஆம் கல்வியாண்டிற்கான முதல் பருவ தன்னார்வலர் பயிற்சி



இல்லம் தேடிக் கல்வி | 2024 25 ஆம் கல்வியாண்டிற்கான முதல் பருவ தன்னார்வலர் பயிற்சி -

இல்லம் தேடிக் கல்வி | 2024 25 ஆம் கல்வியாண்டிற்கான முதல் பருவ தன்னார்வலர் பயிற்சிக்கான மாவட்ட கருத்தாளர்களுக்கு மாநில அளவிலான பயிற்சி வழங்குதல் சார்பு சிறப்பு பணி அலுவலரின் செயல்முறைகள் கரோனா பெருந்தொற்றுப் பரவல் காரணமாக 1 முதல் 8 வகுப்புகள் வரை அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் இடைவெளி மற்றும் கற்றல் இழப்பினை ஈடுசெய்வதற்காகத் தன்னார்வலர்களைக் கொண்டு தினசரி ஒன்றரை மணி நேரம் குறைதீர் கற்றல் செயல்பாடுகளை மேற்கொண்டு மாணவர்கள் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் இல்லம் தேடிக் கல்வி மையங்கள் 38 மாவட்டங்களிலும் செயல்பட்டு வருகிறது, 2024 25 ஆம் கல்வியாண்டில் தொடக்க நிலை இல்லம் தேடிக் கல்வி மைய தன்னார்வலர்களுக்கான முதல் பருவ பயிற்சிக்கான மாவட்ட கருத்தாளர்களுக்கு மாநில அளவிலான இரு நாள் பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இப்பயிற்சிக்கான கருத்தாளர்களுக்கு மாநில அளவிலான பயிற்சி இரு பிரிவுகளாக இரண்டு நாட்கள் விதம் நடைபெறவுள்ளது. Batch-1க்கான பயற்சி - 21.06.2024 & 22.06.2024 மற்றும் Batch IIக்கான பயற்சி 24.06.2024 & 25.06.2024 ஆகிய தேதிகளில் மதுரையிலுள்ள பில்லர் ஹால், பில்லர் சாலை, நாகமலை புதுக்கோட்டையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இப்பயிற்சிக்கு இல்லம் தேடிக் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், Batch 1 மற்றும் Batch -II வில் கலந்துகொள்ள வேண்டிய மாவட்டங்கள் மற்றும் பங்குபெற வேண்டியவர்களின் எண்ணிக்கை விவரம் இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது பயிற்சிக்கு வரும் பொழுது மாவட்டத்திற்கு இரண்டு மடிக் கணினி விதம் கொண்டு வர வேண்டும். இப்பயிற்சியானது மதுரையிலுள்ள பில்லர் ஹால், பில்லர் ஹால், பில்லர் சாலை, நாகமலை புதுக்கோட்டையில் நடைபெற உள்ளது. மாநில அளவிலான பயிற்சிக்கு மாவட்ட வாரியாக ஒதுக்கப்பட்டுள்ள நாட்களில் இணைப்பிலுள்ளவாறு கலந்துக்கொள்ள வேண்டும். பயிற்சியில் பங்கேற்கும் மாவட்ட கருத்தாளர்கள் பயிற்சி தொடங்குவதற்கு முதல் நாள் மாலை 05:00 மணிக்கு முதல் 09:00 மணிக்குள் அல்லது மறுநாள் காலை 06:00 மணிக்கு முதல் 08:30 மணிக்குள் தவறாமல் பயிற்சி மையத்தில் பதிவு செய்ய வேண்டும். மாநில அளவிலான பயிற்சிக்கு வரும் பங்கேற்பாளர்களுக்கான பயணப்படி சம்பந்தப்பட்ட மாவட்டத்தில். இல்லம் தேடிக் கல்வி இல்லம் தேடிக் கல்வி நிதியிலிருந்து மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. எனவே மாநில அளவிலான பயிற்சிக்கு மாவட்ட கருத்தாளர்களை உரிய நாளில் பணிவிடுப்பு செய்து அனுப்புமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Proceedings CLICK HERE TO DOWNLOAD PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.