பள்ளி மாணவர்களுக்கு முதல் நாளிலேயே பாடநூல்களை விநியோகிக்க உத்தரவு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, May 24, 2024

பள்ளி மாணவர்களுக்கு முதல் நாளிலேயே பாடநூல்களை விநியோகிக்க உத்தரவு

பள்ளி மாணவர்களுக்கு முதல் நாளிலேயே பாடநூல்களை விநியோகிக்க உத்தரவு

பள்ளி மாணவர்களுக்கு வழங்குவதற்கான பாடப் புத்தகங்கள் சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள கல்யாணம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இருப்பு வைக்கப்பட்டுள்ளத

சென்னை: பள்ளி திறக்கப்படும் முதல் நாளிலேயே மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள், நோட்டுகள் வழங்கப்பட வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.


இதுதொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:

புத்தகங்கள், நோட்டுகள் மே 31-க்குள் விநியோக மையங்களில்இருந்து பள்ளிகளுக்கு சென்றடைய வேண்டும். மேலும், புத்தகங்கள், நோட்டுகள் தேவையான அளவில் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதை உறுதி செய்து விவரங்களை எமிஸ் தளத்தில் பதிவேற்ற வேண்டும். அதேபோல், தங்கள் மாவட்டத்துக்கு தேவையான பாடநூல்கள், நோட்டுகள் பெறப்படவில்லை எனில்,முதன்மை கல்வி அலுவலர்கள், அருகே உள்ள மாவட்டத்தில் கூடுதலாக இருந்தால், அவற்றை பெற்று தேவையான பள்ளிகளுக்கு உடனே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அவற்றை பள்ளிகள் திறக்கப்படும் நாளிலேயே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.