மாணவர்களின் பெற்றோர் செல்போன் எண்களை சரிபார்க்க பள்ளிக் கல்வி இயக்ககம் அறிவுறுத்தல் . - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, May 14, 2024

மாணவர்களின் பெற்றோர் செல்போன் எண்களை சரிபார்க்க பள்ளிக் கல்வி இயக்ககம் அறிவுறுத்தல் .



மாணவர்களின் பெற்றோர் செல்போன் எண்களை சரிபார்க்க பள்ளிக் கல்வி இயக்ககம் அறிவுறுத்தல் .

பள்ளிக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் 1.35 கோடி மாணவர்கள் படிக்கின்றனர்.

1.35 கோடி மாணவர்களின் பெற்றோர் மொபைல் எண்களை சரிபார்க்க வேண்டும். மாணவர்களின் அனைத்து விவரங்களும், எமிஸ் எனப்படும் பள்ளி தகவல் மேலாண்மை இணையத்தில் பதிவேற்றி தனி ஐடி வழங்கப்பட்டுள்ளது. மொபைல் எண்களை சரிபார்க்கும் பணியை போர்க்கால அடிப்படையில் முடிக்க வேண்டும்.

எமிஸ் எனப்படும் பள்ளி தகவல் மேலாண்மை இணையதளத்தில் மாணவர்களின் பெற்றோர் மொபைல் எண்களை உறுதி செய்ய வேண்டும்.

பெற்றோர்களின் ஓடிபி எண்களை கேட்டு உறுதி செய்வது சவாலாகவும், சிக்கலாகவும் உள்ளதாக ஆசிரியர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

ஒரு கோடிக்கும் அதிகமான மொபைல் எண்களை உடனடியாக எப்படி சரிபார்ப்பது என்று தெரியாமல் ஆசிரியர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

செல்போன் எண்களை தொடர்பு கொண்டு பெற்றோரிடம் ஓடிபி எண்கள் கேட்டால் எதற்காக கேட்கிறீர்கள், வங்கியில் இருந்து பணம் எடுக்கப் போகிறீர்களா என பல்வேறு கேள்விகளை பெற்றோர் கேட்பதால் சிக்கலாக உள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.