Deployment Counselling For Teachers - உபரி ஆசிரியர் பணியிடங்கள் கலந்தாய்வு - Director Proceedings - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, April 25, 2024

Deployment Counselling For Teachers - உபரி ஆசிரியர் பணியிடங்கள் கலந்தாய்வு - Director Proceedings



விரைவில் Surplus கலந்தாய்வு - அறிவுரைகள் வழங்கி தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு. Soon after Surplus Consultation - Director of Elementary Education orders giving instructions.

தொடக்கக்கல்வி துறையில் ஆசிரியருடன் உபரியாக உள்ள 2236 இடைநிலை ஆசிரியர்களுக்கு விரைவில் பணி நிரவல் கலந்தாய்வு

30-4-24 க்குள் கூடுதல் மாணவர்களை சேர்த்துவிட்டால் பணிநிரவலில் இருந்து தவிர்ப்பு வழங்கப்படும் - தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்

தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை 600006.

பொருள்:

பார்வை:

ந.க.எண் 020254 /இ1/2023, நாள். 23.04.2024

தொடக்கக் கல்வி - ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / மாநகராட்சி அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 01.08.2023 நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தமை ஆசிரியருடன் உபரியாக உள்ள பணியிடங்கள்(Surplus post with Teacher)-கண்டறியப்பட்டுள்ளது - அறிவுரை வழங்குதல் சார்ந்து,

1. அரசாணை (நிலை) எண்.231, பள்ளிக் கல்வி (சி2) துறை, நாள்.11.08.2010.

2. இவ்வியக்கக இதே எண்ணிட்ட செயல்முறைகள் நாள் 18.08.2023 pm min 3108.2023.

3. அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களிடமிருந்து (தொடக்கக்கல்வி) பெறப்பட்ட விவரங்கள்.

4. அரசாணை (நிலை) எண்.48, பள்ளிக் கல்வித் (பக5(1)) துறை, நாள்.21.02.2024.

பார்வை 4ல் காணும் அரசாணையின் நகல் இத்துடன் இணைத்து அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு (தொடக்கக் கல்வி) தக்க தொடர் நடவடிக்கையின் பொருட்டு அனுப்பலாகிறது. 01.08.2023 நிலவரப்படி இவ்வியக்ககக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஊராட்சி ஒன்றிய/ நகராட்சி / மாநகராட்சி / அரசு தொடக்க நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009-ன்படியும், அரசாணை (நிலை) எண்.231, பள்ளிக் கல்வி (சி2) துறை, நாள்.11.08.2010 நாளிட்ட அரசாணையின்படியும், ஆசிரியர் மாணவர்கள் பணியிட நிர்ணயம் பள்ளிகளின் மாதாந்திர அறிக்கை மற்றும் EMIS அடிப்படையில் நிர்ணயம் செய்யப்பட்டதில், ஆசிரியருடன் உபரி என கண்டறியப்பட்ட பணியிடங்களின் (Surplus post with Teacher) விவரம் மற்றும் அப்பணியிடங்களில் பணிபுரியும் ஆசிரியர்களின் விவரம் இத்துடன் இணைத்தனுப்பப்படுகிறது.

2024-2025 ஆம் கல்வியாண்டில் 01.08.2023-ன்படி கண்டறியப்பட்டுள்ள ஆசிரியருடன் கூடிய உபரி பணியிடங்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு விரைவில் நடைபெறவுள்ளதால், அக்கலந்தாய்வில் தற்போதுள்ள மாணவர்கள் சேர்க்கையினையும் கருத்தில் கொண்டு பணிநிரவல் செய்யப்படும் என்பதால், தற்போது நடைபெற்று வரும் 2024-2025 ஆம் கல்வியாண்டிற்கான சேர்க்கைப் பணிகளில் அனைத்து வகை சார்நிலை அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் மிகுந்த ஈடுபாட்டுடன் செயல்பட்டு, 30.042024க்குள் அதிகபட்ச மாணவர்களின் சேர்க்கைக்கான வியூகங்களை அமைத்து கூடுதல் மாணாக்கர்களை பள்ளிகளில் சேர்த்து பெரும்பாலான ஆசிரியருடன் கூடிய உபரிப் பணியிடங்களை குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இருப்பினும், 01.08.2023 நிலவரப்படி ஆசிரியருடன் கூடிய உபரிப் பணியிடங்கள் 2,236 (இடைநிலை ஆசிரியர்கள்) எனக் கண்டறியப்பட்டுள்ள பணியிடங்களில் பணிபுரியும் ஆசிரியர்களின் விவரங்கள் மாவட்ட வாரியாக இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது.

இத்துடன் இணைக்கப்பட்டுள்ள ஆசிரியர்களின் பெயர்ப் பட்டியலை அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி) மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் தத்தமது கட்டுப்பாட்டின் கீழ் வரும் ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மூலமாக சார்ந்த ஆசிரியர்களுக்கு இவ்விவரத்தினை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இத்துடன் இணைக்கப்பட்டுள்ள 2,236 ஆசிரியருடன் கூடிய உபரியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை உறுதி செய்யுமாறும், இச்செயல்முறைகள் பெற்றுக் கொண்டமைக்கான ஒப்புதலினை மின்னஞ்சல் வாயிலாக (deeesection@gmail.com) உடன் தெரிவிக்குமாறும், அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும்

தொடக்கக் கல்வி)

அறிவுறுத்தப்படுகிறது.

இணைப்பு-1. அரசாணை நகல்.

2.ஆசிரியருடன் கூடிய உபரி பணியிட விவரம்.

தொடக்கக் கல்வி இயக்குநர்

பெறுநர்

நகல்

அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி) (மின்னஞ்சல் வாயிலாக) அரசுச் செயலாளர், பள்ளிக் கல்வித் துறை, தலைமைச் செயலகம், சென்னை 9 அவர்களுக்கு தகவலுக்காக பணிந்தனுப்பப்பலாகிறது. CLICK HERE TO DOWNLOAD தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.