26.04.2024 அன்று பள்ளி கடைசி வேலை நாள் - Director Proceedings (DEE, DSE) - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, April 25, 2024

26.04.2024 அன்று பள்ளி கடைசி வேலை நாள் - Director Proceedings (DEE, DSE)

தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநரின் இணைச் செயல்முறைகள், சென்னை-06

ந.க.எண்.19528/எம்/இ1/2023. நாள் 20.03.2024

பொருள்- பள்ளிக் கல்வி 2023- 2024 ஆம் கல்வி ஆண்டு 1 முதல் 9 ஆம் வகுப்புகளுக்கான பள்ளி இறுதித் தேர்வுகள் கால அட்டவணை வெளியிடுதல் - சார்பாக.

பார்வை-

1. பள்ளிக் கல்வித் துறையின் 2023 2024 ஆம் கல்வி ஆண்டிற்கான நாட்காட்டி.

2. சென்னை-09. பொதுத் (தேர்தல்கள்- VII) துறை. முதன்மைத் தேர்தல் அலுவலர் மற்றும் அரசு முதன்மைச் செயலாளர் அவர்களின் கடிதம் எண். 2028/- VII/2023-112, .19.03.2024.

2023-2024 ஆம் கல்வி ஆண்டிற்கான 1 முதல் 9 ஆம் வகுப்புகளுக்கான பள்ளி இறுதித் தேர்வுகள் நடத்துவது சார்பாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் கீழ்க்காணும் அறிவுரைகள் வழங்கப்படுகிறது.

"18வது மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், தமிழகத்திலுள்ள அனைத்து அரசு / அரசு உதவிபெறும் / தனியார் பள்ளிகளில் பயிலும் 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான 2023 -2024 ஆம் கல்வி ஆண்டிற்கான பள்ளி இறுதித் தேர்வுகள் 02.04.2024 அன்று தொடங்கி 12.04.2024 வரை நடைபெறும் எனவும், 13.04.2024 முதல் மாணவர்களுக்கு கோடை விடுமுறை எனவும் இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது. மேலும், ஆசிரியர்கள் 19.04.2024 அன்று நடைபெற உள்ள 18வது மக்களவைத் தேர்தல் சார்ந்த பயிற்சிகள் உள்ளிட்ட அனைத்து தேர்தல் பணிகளையும் மேற்கொள்ள வேண்டுமென தெரிவிக்கப்படுகிறது. மேலும், 23.04.2024 முதல் 26.04.2024 வரையில் 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான விடைத்தாள் திருத்துதல், தேர்வு முடிவுகள் வெளியிடுதல் மற்றும் அடுத்த கல்வி ஆண்டிற்கான (2024-2025) மாணவர்கள் சேர்க்கை போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், 26.04.2024 அன்று இக்கல்வி ஆண்டிற்கான கடைசி வேலை நாளாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும், கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறக்கும் நாள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது".

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.