RTE Admission Circular by TN Private Schools Director! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, April 19, 2024

RTE Admission Circular by TN Private Schools Director!



RTE Admission Circular by TN Private Schools Director CLICK HERE TO DOWNLOAD PDF

தனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை வரும் 22 முதல் மே 20 வரை விணப்பிக்கலாம்.

அனைவருக்கும் கல்வி உரிமைச் சட்டத்தின் படி ஆண்டுதோறும் தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் மாணவர் சேர்க்கை மேற்கொள்ளப்படுகிறது

தமிழ்நாடு தனியார் பள்ளிகள் இயக்குநர் மற்றும் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்ட மாநில முதன்மைத் தொடர்பு அலுவலரின் செயல்முறைகள், சென்னை-600 006. ந.க.எண். 1872/சி1/ 2024, நாள்P1.04.2024

பொருள் : குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009, பிரிவு 12 (1) (c) இன்படி- 2024 -2025 ஆம் கல்வியாண்டில் அனைத்துச் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு நுழைவுநிலை வகுப்பில் (LKG / I Std) குறைந்தபட்சம் 25 % இடஒதுக்கீடு வழங்குதல் சேர்க்கை நடைமுறைகள் அறிவுரை வழங்குதல் - சார்பாக. பார்வை : 1. குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009 மற்றும் தமிழ்நாடு விதிகள், 2011.

2. அரசாணை (நிலை) எண்.271 பள்ளிக் கல்வித்துறை (சி2) நாள்.25.10.2012.

3. அரசாணை (நிலை) எண் 60, பள்ளிக் கல்வித் (எக்ஸ்2) துறை, நாள் 01.04.2013.

4. அரசாணை (நிலை) எண் 59, பள்ளிக் கல்வித் (பொநூ 2) துறை, நாள் 12.05.2014.

5. அரசாணை (நிலை) எண் 66, பள்ளிக் கல்வித் (பொநூ 2) துறை, நாள் 07.04.2017.

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009 பிரிவு 12 (1) (c) இன்படி அனைத்துச் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு நுழைவுநிலை வகுப்பில் (LKG/IStd) குறைந்த பட்சம் 25% இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்.

இதனை நடைமுறைப்படுத்துவதற்கு பார்வையில் உள்ள அரசாணைகளில் விரிவான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டன.

அவ்வழிகாட்டுதல்களைப் பின்பற்றி 2013-14 முதல் 2023 -2024 ஆம் கல்வியாண்டு வரை மாணாக்கர் சேர்க்கை செய்யப்பட்டு பயனடைந்துள்ளனர். சட்டத்தின் நோக்கம் முழுமையாக நிறைவேறும் விதமாக, வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகள் அதிக அளவில் பயன் பெறும் வகையில், வெளிப்படைத் தன்மையை உறுதி செய்யும் பொருட்டு, பார்வை (5) இல் கண்ட அரசாணையில் கூடுதல் வழிகாட்டுதலும் திருத்திய கால அட்டவணையும் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி RTE Act 2009 பிரிவு 12 (1) (சி ) யின் 25 % இடஒதுக்கீடு அடிப்படையிலாக மாணாக்கர்கள் சேர்க்கை குறித்து வழங்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களின்படி ஒவ்வொரு ஆண்டும் மேற்காண் நடைமுறை ஏப்ரல் 2 ஆம் தேதி தொடங்கி மே 29 க்குள் முடிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பார்வையில் கண்ட அரசாணைகளின்படி, 2024 - 2025 ஆம் கல்வியாண்டில் 25% இட ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கை நடைமுறைகள் சார்ந்து கீழ்க்குறிப்பிட்டுள்ள அறிவுரைகள் வழங்கப்படுகின்றன.

1. சட்டப்பிரிவு 12 (1) (சி) இன் கீழ் சேர்க்கை வழங்க தமிழ்நாடு குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமை விதிகள், 2011, விதி எண் 4 (1) இன்படி எல்.கே.ஜி அல்லது முதல் வகுப்பிற்கு அருகாமையிடம் என்பது 1 கிலோ மீட்டர் சுற்றளவு ஆகும்.

2. RTE Act-ன்படி 25% இடஒதுக்கீட்டிற்கான சேரக்கைக்கு தகுதியான இடங்களின் எண்ணிக்கை, 2023 -2024 ஆம் கல்வி ஆண்டில் நுழைவு நிலை வகுப்பில் (L.K.G/I) EMIS இணையதளத்தின்படி உள்ள மாணாக்கர்களின் எண்ணிக்கையில் 25%ஐ கணக்கிட்டு சம்பந்தப்பட்ட பள்ளியின் EMIS login-ல் 10.04.2024 அன்று வெளியிடப்படும். சார்ந்த பள்ளியின் முதல்வர் பள்ளிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள இடங்களை அன்றைய தினமே 12(1)(சி) இன் கீழ் 25% சேர்க்கைக்கான தகுதியான இடங்களை (Alloted Seat) பள்ளியின் தகவல் பலகையில் பொதுமக்கள் அறியும் வகையில் அறிவிப்பு வெளியிட வேண்டும். 10.04.2024 அன்றே பள்ளி வாரியான தகுதியான இடங்களின் எண்ணிக்கை இணைய தளத்திலும் (tnemis.tnschools.gov.in) வெளியிடப்படும்.

3. சட்டப்பிரிவு 12 (1) (சி) இல் சேர்க்கை கோரும் குழந்தைகளின் பெற்றோர்கள் rte.tnschools.gov.in. என்ற இணையதளத்தில் 22.04.2024 முதல் 20.05.2024 வரை எங்கிருந்து வேண்டுமானாலும் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்.

4. 22.04.2024முதல் 20.05.2024 வரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் / மாவட்டக் கல்வி அலுவலர்(தனியார் பள்ளிகள்)/ மாவட்டக் கல்வி அலுவலர் / வட்டாரக் கல்வி அலுவலர் / ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி வட்டார வள மையம் ஆகிய அலுவலகங்களில் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை இணைய வழியில் விண்ணப்பிக்க தக்க ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். மேற்காண் அலுவலகங்களில் இணைய வசதி, கணினி, சான்றுகளை பதிவேற்றம் செய்ய தேவையான Scanner வசதி, கணினி இயக்குபவர் ஆகியவற்றை 19.04.2024 அன்றே தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். இதனை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும்.

சார்ந்த 5. அந்தந்தப் பள்ளிகளில் விண்ணப்பங்கள் ஏதேனும் பெறப்பட்டால், பெற்றோர்களுக்கு ஒப்புகைச் சீட்டு (அரசாணை (நிலை) எண். 60 பள்ளிக் கல்வித் துறை நாள் 01.04.2013 இல் உள்ள ஒப்புகைச் சீட்டில் ) உடன் தவறாது வழங்கப்பட வேண்டும். இவ்விண்ணப்பங்களை பள்ளியிலேயே இணைய வழியில் பதிவேற்றம் செய்யலாம் அல்லது அருகில் உள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் / மாவட்டக் கல்வி அலுவலர்(தனியார் பள்ளிகள்)/ மாவட்டக் கல்வி அலுவலர் / வட்டாரக் கல்வி அலுவலர் / ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி/வட்டார வள மையம் ஆகிய அலுவலகங்களில் பெற்று இணைய வழியில் பதிவேற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

6. மாணவர்கள் சேர்க்கை பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே சென்றடையும் வகையில் அனைத்துச் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளிலும் பள்ளியின் பிரதான நுழைவு வாயிலில் ( Main Gate ) பொதுமக்களுக்கு நன்கு தெரியும் வகையில் பள்ளிப் பெயர் பலகைக்கு அருகிலும், பொதுமக்கள் பெருமளவில் கூடும் இடங்களிலும் 6” x 10 ” அடி அளவில் கடந்த ஆண்டுகளில் வைக்கப்பட்டது போல் அனைத்து விவரங்களையும் உள்ளடக்கிய அறிவிப்புப் பலகை (Flex Board) அவசியம் வைக்கப்பட வேண்டும்.

7. RTE 25 % இட ஒதுக்கீட்டின் கீழ் மாணாக்கர்கள் சேர்க்கை செய்யப்படும் பள்ளிகள் முறையாக அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும்.

8. தமிழ்நாடு பள்ளிகள் (கட்டண வசூல் ஒழுங்குமுறை ) சட்டம் 2009 ன்படி கட்டண நிர்ணயக் குழுவால் தனியார் பள்ளிகள், தனியார் பள்ளிகள் இணையதளத்தில் நிர்ணயக்கப்படும் கட்டணத்தை செய்யப்பட்டிருக்க வேண்டும். EMIS பதிவேற்றம் 9. குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009 ஐ நடைமுறைப்படுத்துதல் சார்ந்து அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் பார்வை(2)ல் காணும் அரசாணையின்படி மாவட்டத் தொடர்பு அலுவலர் என்பதால், மேற்படி அனைத்துப் பணிகளையும் ஒருங்கிணைத்துச் செவ்வனே செய்து முடிக்கக் கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும், பதிவேற்றம் செய்த சேர்க்கைக்கான விண்ணப்பங்களில் கீழ்க்காணும் தவறு ஏதுமின்றி கவனமுடன் சான்றிதழ்களை ஆய்வு செய்யும் அலுவலர்கள் செயல்பட வேண்டும். 10. (i). பிறப்புச் சான்று பதிவேற்றம் செய்யப்பட்ட குழந்தையின் பிறப்புச் சான்றிதழை ஆய்வு செய்து, பார்வை (3) - ல் உள்ள அரசாணையின்படி கீழ்க்காணும் சான்றிதழ்களில் ஏதேனும் ஒரு சான்று பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும். a) Birth Certificate b) Hospital/Auxilliary and Midwife Register c) Anganwadi Record d) Declaration through an affidavit of the age of the child by the Parent / Guardian எல்.கே.ஜி வகுப்பிற்கு விண்ணப்பிக்கும் குழந்தைகள் 01.08.2020 முதல் 31.07.2021 க்குள் பிறந்திருக்க வேண்டும். ஒன்றாம் வகுப்பிற்கு விண்ணப்பிக்கும் குழந்தைகள் 01.08.2018 31.07.2019 க்குள் பிறந்திருக்க வேண்டும். முதல் 10.(II) வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினருக்கானச் சான்று வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினரின் கீழ் விண்ணப்பித்தவர்களின் குழந்தை கீழ்க்குறிப்பிட்டுள்ள ஏதேனும் ஒரு பிரிவினரைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். மேலும், கீழ்காணும் அட்டவணையில் உள்ளவாறு உரிய வழங்கப்பட்ட சான்றினைப் பதிவேற்றம் செய்திருக்க வேண்டும். Name of the Community பிற்படுத்தப்பட்டோர் (Backward Class) பிற்படுத்தப்பட்டோர் Competent Authority அலுவலரால் Deputy Tahsildar, Revenue Department, Government of Tamilnadu. (முஸ்லீம்) (Backward Class Muslim) மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (Most Backward Class) சீர்மரபினர் (Denotified Community) பட்டியல் வகுப்பினர் (Scheduled Community) ஆதிதிராவிடர் (அருந்ததியினர்) (SCA) பழங்குடியினர் (Scheduled Tribes) Tahsildar,Revenue Department, Government of Tamilnadu / Competent authority in the case of children coming from other States. RDO / Sub Collector, Revenue Department, Government of Tamilnadu / Competent authority in the case of children coming from other States. 10.(li). வாய்ப்பு மறுக்கப்பட்ட சிறப்புப் பிரிவினருக்கானச் சான்று வாய்ப்பு மறுக்கப்பட்ட சிறப்பு பிரிவினர் கீழ் விண்ணப்பித்தவர்களின் குழந்தை கீழ்க்குறிப்பிட்டுள்ள ஏதேனும் ஒரு பிரிவினரைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். மேலும், கீழ்க்காணும் அட்டவணையில் உள்ளவாறு உரிய அலுவலரால் வழங்கப்பட்ட சான்றினைப் பதிவேற்றம் செய்திருக்க வேண்டும். Name of the special category

ஆதரவற்றோர் (Orphan)

Competent Authority

District Social Welfare

Officer,

Department of Social Welfare and Nutritious Meal Programme

h) Certificate of Residence issued by VAO

i) ID Card issued by State Government / Central Government / Public Sector Undertakings.

மேலும், விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள முகவரியில் குழந்தையின் பெற்றோர் வசிப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். -

11. ஏற்கனவே, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு / மாவட்டக் ஒருங்கிணைப்பாளர் / மாவட்டக் கல்வி அலுவலருக்கு ( தனியார் பள்ளிகள்) வழங்கப்பட்டுள்ள User ID மற்றும் Password ஐ பயன்படுத்தி - EMIS Website – ல் விண்ணப்பதாரரால் பதிவேற்றம் செய்யப்பட்ட சான்றிதழ்களை கீழ்க்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றிச் சரிபார்க்க வேண்டும்.

12. EMIS இணையதளத்தில் _DC/DEO(PS) Login -ல் இப்பணியினை செய்ய வேண்டும்.

Students Menu வேண்டும்.

-- - வில் RTE Students Verification click செய்ய பதிவேற்றம் செய்யப்பட்ட ஆவணங்கள், மாணாக்கர் பெயர் மற்றும் முகவரி இணையதளத்தில் தெரியும்.

> ஒவ்வொரு ஆவணத்தையும் Click செய்து சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ள அறிவுரைகளின்படி உள்ளதா என்பதைச் சரிபார்க்க வேண்டும்.

Verification முடிந்தவுடன் மாணாக்கர்கள் பெயரை Click செய்து Eligible / Ineligible Document Missing என பதிவு செய்து, அதற்குரிய Remarks பதிவேற்றம் செய்ய வேண்டும்.

இதற்கான தகவல் விண்ணப்பதார்களின் கைபேசிக்கு (Eligible / Ineligible / Document Missing என ) அனுப்பப்படும்.

>>விண்ணப்பத்தினை கூர்ந்தாய்வு செய்யும் அலுவலர், அவரது EMIS ID எண்ணினை மாணாக்கர்களின் விண்ணப்பத்தில் அதற்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் (8 இலக்க எண்) பதிவு செய்ய வேண்டும். இப்பணியினை 25.05.2024 க்குள் முடிக்கப்பட வேண்டும். 2024 – 25 ஆம் கல்வியாண்டில் 25% ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கை சார்பாக கீழ்க்கண்ட அறிவுரைகள் வழங்கப்படுகின்றன.

விண்ணப்பதாரரின் இருப்பிடத்திலிருந்து பள்ளி அமைவிடம் 1 கிலோ மீட்டருக்குள் உள்ள விண்ணப்பங்களை மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.

இணையதளம் மூலமாக விண்ணபிக்கப்பட்ட விண்ணப்பங்களை 21.05.2024 முதல் 25.05.2024 மாலை 5 மணி வரை மாவட்டக் கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் (RTE) ஆகியோர் கூர்ந்தாய்வு செய்ய வேண்டும்.

தகுதியான விண்ணப்பங்கள், தகுதியற்ற விண்ணப்பங்கள், விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்கள் மற்றும் விடுபட்ட

ஆவணங்கள் கொண்ட விண்ணப்பங்கள் ஆகியவற்றை கூர்ந்தாய்வு செய்து மேற்காண் பணியினை 25.05.2024 மாலை 5 மணிக்குள் முடிக்கவேண்டும். ஆவணங்கள் விடுபட்ட விண்ணப்பதார்கள் 27.05.2024 மாலை 5மணிக்குள் விடுபட்ட ஆவணங்களை (Missing Documents) சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் (RTE) ஆகியோரிடம் நேரில் ஒப்படைக்க வேண்டும். மாவட்டக் கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் (RTE) ஆகியோர் ஒப்படைக்கப்பட்ட ஆவணங்களை சரிப்பார்த்து மேற்காண் விண்ணப்பங்களை மீண்டும் தகுதியானது மற்றும் தகுதியற்றது என்பதை உறுதி செய்து தகுதியற்றதற்கான காரணத்துடன் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

கல்வி அலுவலர் ♥ மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் / மாவட்டக் (தனியார் பள்ளிகள்) தங்களது மாவட்டத்தில் விண்ணப்பித்த குழந்தைகளின் விவரப் பட்டியலை 27.05.2024 மாலை 5 மணிக்கு இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

v தகுதியான விண்ணப்பங்களின் எண்ணிக்கை அப்பள்ளியின் 25% ஒதுக்கீட்டில் நிர்ணயிக்கப்பட்ட இடங்களை விட கூடுதலாக இருந்தால் குலுக்கல் முறையில் 28.05.2024 அன்று சேர்க்கைக்கான மாணாக்கர்களை தெரிவு செய்ய வேண்டும்.

குறைவாக இருந்தால் தகுதியான அனைத்து விண்ணப்பங்களுக்கும் சேர்க்கை வழங்க வேண்டும். வாய்ப்பு மறுக்கப்பட்ட சிறப்பு பிரிவின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ள ஆதரவற்றோர்/HIV ஆல் பாதிக்கப்பட்டவர்/ மூன்றாம் பாலினத்தவர்/துப்புரவு போன்றோரிடமிருந்து தொழிலாளியின் குழந்தை/ மாற்றுதிறனாளிகள் பெறப்பட்ட தகுதியான விண்ணப்பங்களுக்கு குலுக்கல் நடத்துவதற்கு முன்னரே சேர்க்கை வழங்கிட வேண்டும்.

நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்கள் சார்பாக பெற்றோரிடமிருந்து கோரிக்கை ஏதும் பெறப்பட்டு சேர்க்கைக்கு தகுதி பெறின் குலுக்கல் நடைபெறும் நாளுக்கு முன்னர், அதன் மீது விசாரணை செய்து தேவையான ஆவணங்கள் முன்னிலைப்படுத்தப்பட்டால், குலுக்கலில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

V தங்கள் மாவட்டத்தில் 25% ஒதுக்கீட்டின் கீழ் குலுக்கல் முறையில் சேர்க்கை நடைபெறவுள்ள பள்ளிகளைத் தெரிவு செய்து ஒவ்வொரு பள்ளிக்கும், வட்டாரக் கல்வி அலுவலர்/வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுனர் அல்லது முதன்மைக் கல்வி அலுவலரால் / மாவட்டக் கல்வி அலவலரால் ( தனியார் பள்ளிகள்) நியமிக்கப்படும் துறை பிரதிநிதி முன்னிலையில் குலுக்கல் நடைபெறுவதற்குத் தக்க ஏற்பாடுகளை முதன்மைக் கல்வி அலுவலர் செய்ய வேண்டும்.

V மேலும், அதிக அளவில் விண்ணப்பங்கள் பெறப்பட்டிருக்கும் பள்ளிகளில் மாவட்டக் கல்வி அலுவலர் ( தனியார் பள்ளிகள்) / மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் பிரதிநிதி அல்லது வருவாய் துறை அலுவலர்கள் முன்னிலையில் குலுக்கல் நடத்திட தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பார்வை (5) 28.05.2024 FOOT M இல் உள்ள அரசாணையின்படி, சேர்க்கைக்கான குலுக்கல் முடிந்த பிறகு, அன்றைய தினமே பள்ளிக்கு தகுதியுள்ள ஒரு பிரிவுக்கு ஐந்து மாணாக்கர்கள் என்ற வீதத்தில் காத்திருப்பு பட்டியலுக்கான மாணாக்கர்களையும் வரிசை எண்ணிட்டு வரிசை எண்ணிட்டு குலுக்கலில் தேர்ந்தெடுக்க வேண்டும்.

குலுக்கலின் போது ஏதேனும் அசாதாரண சூழல் ஏற்படின் ஆய்வு அலுவலர்களைக் கொண்டு உடனுக்குடன் சரிசெய்ய வேண்டும்.

சேர்க்கைக்குத் தெரிவு செய்யப்பட்ட மாணாக்கர்களின் விவரம் மற்றும் காத்திருப்போர் பட்டியலில் உள்ள மாணாக்கர்கள் விவரத்தை 29.05.2024 அன்று LDIT60060 5.00 மணிக்குள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

♥ தேர்வு செய்யப்படும் மாணாக்கர்களின் பெற்றோர்களின் கைபேசி (Mobile) எண்ணிற்கு இதற்கான குறுந்தகவல் அனுப்பப்படும்.

13. மேற்படி அறிவுரைகளைப் பின்பற்றி தங்களது மாவட்டம் சார்பாக எவ்விதப் புகாருக்கும் இடமளிக்கா வண்ணம், தேவையான அலுவலர்களை நியமித்துக் கீழ்க்கண்ட அட்டவணைப்படி, இப்பணியினை மேற்கொள்ளுமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் / மாவட்டக் கல்வி அலுவலர்களும் ( தனியார் பள்ளிகள்) கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

விண்ணப்பதாரர்களின் விவரங்கள், விண்ணப்ப எண் மற்றும் பள்ளியில் தகுதியுள்ள, ஒரு பிரிவுக்கு ஐந்து மாணாக்கர்கள் (5 seats per section) என்ற வீதத்தில் (வரிசை எண்ணிட்டு) காத்திருப்பு பட்டியலுக்கான மாணாக்கர்களின் விவரங்கள் ஆகியவற்றை பள்ளித்தகவல் பலகை மற்றும் இணையதளத்தில் (tnemis.tnschools.gov.in) வெளியிட வேண்டிய நாள்.

படிவம்- 5 இல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு அன்று அல்லது பள்ளி அளிக்க வேண்டிய நாள். அதற்கு முன்னர் குலுக்கலில் தெரிவு செய்யப்பட்ட குழந்தைகள் சேர்க்கைக்கு வரத்தவறினால் அந்தந்தக் குழந்தையின் பெற்றோருக்கு தொலைபேசி மற்றும் குறுஞ்செய்தி (SMS) வாயிலாகத் தகவல் தெரிவித்த பிறகு காத்திருப்புப் பட்டியலில் உள்ள மாணவர்களுக்கு முன்னுரிமை படி சேர்க்கை வழங்கப்பட வேண்டும்.

> மேற்காண் பணியினை மேற்கொள்ளும் பொழுது அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் / மாவட்டக் கல்வி அலுவலர்கள் ( தனியார் பள்ளிகள் DC/ DEO(PS) login EMIS இணையதளத்தில் முந்தைய ஆண்டின் நடைமுறைகளையே பின்பற்றும்படி தெரிவிக்கப்படுகிறது. இப்பணி சார்ந்து கடந்த ஆண்டுகளைப் போல மாவட்ட ஆட்சியரைத் தொடர்பு தக்க கொண்டு தெரிவிக்கப்படுகிறது.

ஆலோசனையினைப் பெற்றுச் செயல்படத் > மாணவர் சேர்க்கை முடிந்த பிறகு, மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் அமைக்கப்பட்ட ஆய்வுக் குழுவால் பெற்றோர்கள் அளித்த சான்றிதழ்களை ஆய்வு செய்ய வேண்டும். இதில் தவறு ஏதேனும் இருப்பின் சேர்க்கையை இரத்து செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

> ஆவணங்களை ஆய்வு செய்யும் அலுவலர்கள் தவறு ஏதுமின்றி கவனமுடன் செயல்பட அறிவுறுத்தப்படுகிறது.

மேற்படி அறிவுரைகளைப் பின்பற்றி 2024 - 2025 ஆம் கல்வியாண்டிற்கான 25% இட ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கை நடைமுறைகளை மேற்கொண்டு வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரினரின் குழந்தைகள் பயனடையும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள தெரிவிக்கப்படுகிறது. RTE சட்டம் - 2009 இன்படி 25% இட ஒதுக்கீடு தொடர்பாக தங்களது மாவட்டம் சார்ந்து எவ்விதப் புகாருக்கும் இடமளிக்கா வண்ணம், தேவையான அலுவலர்களை நியமித்து இப்பணியினைச் செவ்வனே மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் / மாவட்டக் கல்வி அலுவலர்களும் (தனியார் பள்ளிகள்) கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தனியார் பள்ளிகள் இயக்குநர்

1. அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள்.

2. அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் ( தனியார் பள்ளிகள்) பெறுநர்

3. அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள் (மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மூலமாக).

1. அரசு செயலாளர், பள்ளிக் கல்வித் துறை, அவர்களுக்குத் தகவலுக்காகப் பணிந்தனுப்பலாகிறது.

நகல் :

2. மாநிலத் திட்ட இயக்குநர், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, அவர்களுக்குப் பணிந்தனுப்பலாகிறது

3. பள்ளிக் கல்வி இயக்குநர், அவர்களுக்கு கனிவுடன் அனுப்பலாகிறது.

4. தொடக்கக்கல்வி இயக்குநர், அவர்களுக்கு கனிவுடன் அனுப்பலாகிறது.

RTE Admission Circular by TN Private Schools Director CLICK HERE TO DOWNLOAD PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.