தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் - தபால் வாக்குப்பதிவு - கால நீட்டிப்பு வழங்க தேசிய ஆசிரியர் சங்கம் - தமிழ்நாடு கோரிக்கை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, April 16, 2024

தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் - தபால் வாக்குப்பதிவு - கால நீட்டிப்பு வழங்க தேசிய ஆசிரியர் சங்கம் - தமிழ்நாடு கோரிக்கை



தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் - தபால் வாக்குப்பதிவு - கால நீட்டிப்பு வழங்க தேசிய ஆசிரியர் சங்கம் - தமிழ்நாடு கோரிக்கை

கல்விக்கான ஆசிரியர் !!

ஆசிரியருக்கான சமுதாயம்!!!

மாநிலத் தலைவர்

தேசிய ஆசிரியர் சங்கம் - தமிழ்நாடு

DESIYA ASIRIYAR SANGAM - TAMILNADU

பதிவு எண்: 60/2021 ABRSM புதுடெல்லி உடன் இணைக்கப்பட்டது பெறுநர்

தலைமை தேர்தல் அதிகாரி அவர்கள், தலைமைச்செயலகம், சென்னை -9.

ஐயா,

பொருள்:தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் - தபால் வாக்குப்பதிவு - கால நீட்டிப்பு வழங்க கோருதல் - சார்பு.

தமிழகத்தில் 100% வாக்களிப்பு நடைபெற வேண்டும் என்பதற்காக தேர்தல் ஆணையம் பல்வேறு அரசு அமைப்புகள், பள்ளிகள், மற்றும் கல்லூரிகள் துணை கொண்டு விழிப்புணர்வு முகாம்கள் பல நடத்தியது.

தேர்தல் பணியாற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள், மற்றும் காவல்துறையினர் ஆகியோரின் தபால் வாக்கு சீட்டுகள் பெரும்பாலான இடங்களில் முறையாக விநியோகிக்கப்படாமல் உள்ளன.

பல மாவட்டங்களில், தேர்தல் பயிற்சி வகுப்பில் பெரும்பாலான ஆசிரியர்களுக்கு தபால் வாக்குகள் அளிக்கப்படவில்லை. அவர்கள் அடுத்த வகுப்பில் அவற்றைப் பெற்று அளிக்கலாம் என அங்கு இருந்த தேர்தல் பிரிவு அலுவலர்கள் தெரிவித்தனர். வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் நிறைய நாட்கள் உள்ள நிலையில் கூடுதல் ல அவகாசம் அளிப்பதன் ன் மூலம் வாக்கு சதவீதத்தினை அதிகரிக்க இயலும். தேர்தல் பணி தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் தங்களது ஜனநாயக கடமையினை நிறைவேற்றிட தேர்தல் ஆணையம் உதவ வேண்டும்.

எனவே அடுத்த பயிற்சி வகுப்பு வரை தபால் வாக்குகள் செலுத்துவதற்கான கால அவகாசத்தினை தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளோருக்கு வழங்க வேண்டும் என தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு, தங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.